எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருமாவளவன் பேட்டி

திருச்சி, டிச.6 விடுதலை சிறுத்தைகளின் மாநில செயற் குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. இதில் அக்கட்சியின் நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றார்.

பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருச்சியில் டிசம்பர் 10-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசம் காப்போம் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கம்யூனிஸ்ட் தலை வர்கள், அனைத்து கட்சி தலை வர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அன்று டில்லியில் ராகுல் காந்தி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. எனவே டிசம்பர் 10-ஆம் தேதி திருச்சியில் நடைபெறவிருந்த தேசம் காப்போம் மாநாடு ஜனவரி மாதம் நடைபெறும். இதற்கான தேதி பிறகு அறிவிக்கப்படும்.

கருநாடகாவில் மேகதாது அணை கட்ட அனுமதி அளித் ததை கண்டித்து திருச்சியில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டா லின் தலைமையில் தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்ற போராட்டம் மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேகதாது அணை கட்டுவதை தடுப்பதற்கும், அந்த அணை கட்டுவதால் ஏற்படும் பாதிப்பி லிருந்து தமிழகத்தை காக்கவும் தி.மு.க. தலைமையிலான அணி யில் விடுதலை சிறுத்தை அங்கம் வகிக்கிறது. இந்த அணை கட்டப் பட்டால் தமிழகம் பாதிக்கப் படுவதுடன் மேலும் சில அணை கள் கட்டவும் வழி வகுக்கும்.

எனவே அணை கட்ட அனுமதிக்க கூடாது. பா.ஜ.க. மக்களை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து கருநாடகாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளது.

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மேகதாது அணை கட்டக்கூடாது என கூறியுள்ளார். அதை வரவேற் கிறேன். அதே நேரத்தில் திருச்சி போராட்டத்தில் தி.மு.க. கூட் டணியை பா.ஜனதா உடைக்க பார்க்கிறது என நான் தெரிவித்ததற்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நான் அணையை பற்றி கவலைப் படாமல் அணியை பற்றி கவலைப்படுவதாக கருத்து தெரிவித்துள்ளார்.

அணையை தடுக்க வேண்டும் என்றால் அணி பலமாக இருக்க வேண்டும். தமிழகத்தை காக்க வும், தேசத்தை மதவாத பிடியில் இருந்து காக்கவும் இதுபோன்ற பலமான அணி தேவை.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner