எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, டிச.5 மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் நிலை ஏற்பட்டால் இந்திய ஒருமைப்பாடு உடைந்து போகும் அபாயம் இருப்பதாக திருச்சியில் நேற்று நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் தலைவர்கள் பேசியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மதிமுக பொதுச் செயலர் வைகோ பேசியதாவது: மத்திய பாஜக அரசும், கருநாடக அரசும் தொடர்ந்து தமிழகத்துக்கு எதிராக செயல்பட்டுவருகிறது. மேகதாது அணை கட்டினால் நாட்டின் ஒருமைப்பாடு உடைந்து போகும். காவிரியில் தமிழக உரிமையை நிலை நாட்ட மாநிலக் கட்சிகள் திமுக தலைமையில் ஒன்றிணைந் துள்ளதைப் போல, மத்தியிலும் காங்கிரசு கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்றார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர்: வட மாநிலங்களில் பாஜக-வுக்கு ஏற்பட்டுள்ள சரிவை ஈடுகட்ட தென்மாநிலங்களில் உள்ள 130 தொகுதி களை குறி வைத்து பாஜக செயல்பட்டு வருகிறது. ஆனால், ஒற்றை இலக்க தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் பூஜ்ஜியம் எண்ணிக்கையை மட்டுமே பாஜக-வால் பெற முடியும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலை வர் தொல். திருமாவளவன்: மேக்கேதாட்டு மட்டுமல்லாது 5 இடங்களில் அணையைக் கட்டுவதற்கு கருநாடகம் தயாராகி வருகிறது. தமிழகத்தில் திமுக தலைமையிலான அணியை பலவீனப்படுத்த வேண் டும் என்பதற்காகவே பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. எந்த சக்தியாலும் திமுக கூட்டணியை சிதறடிக்க முடியாது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன்: மேகதாது அணை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமெனில் மத்தியிலும், மாநிலத்தி லும்  அசியல் மாற்றம் ஏற்பட வேண்டும். அரசியல் மாற்றம் இல்லாமல் காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன்: தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக பேச மாநில அரசு தயங்கி வரு கிறது. எனவே, திமுக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டும். மத்தியிலும் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் முகைதீன்: காவிரியின் குறுக்கே அணை கட்டும் கருநாடக அரசின் முயற்சிக்கு மத்திய அரசு ஆதரவு அளிப்பதைப் போன்று செயல்படுவது ஒருதலைபட்ச மானது. நடுவண் அரசு நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகிறது என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner