எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரம்பலூர், நவ. 9- `மதவாதம், அடக்கு முறை, விலைவாசி உயர்வுக்கு காரண மான பா.ஜ.க. மற்றும் ஊழல் அ.தி. மு.க. அரசுகளை பொதுமக்கள் அகற்ற வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஒதியம் கலைஞர் திடலில் நேற்று (8.11.2018) மக்கள் விரோத மத் திய, மாநில அரசுகளை கண்டித்து தி. மு.க. சார்பில் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது.  இதில், தி.மு. க. தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசிய தாவது:

இந்திய தேசத்துக்கு புதிய பிரதமரை தேர்வு செய்ய நாடாளுமன்ற தேர்தலை எதிர் நோக்கி காத்துள்ளோம். இதனுடன் சட்டமன்ற  தேர்தல் சேர்ந்து வரவேண் டும். எந்த நிலையும், எப்படிப்பட்ட சூழல் வந்தாலும் அதனை சந்திக்க தயாராக உள்ளோம் என்பதை அறி விக்கவே இந்த கூட்டம். மத்தியில் உள்ள பாசிச பாஜக, ஊழல் நிறைந்த அதிமுக இந்த இரண்டு ஆட்சிகளை ஒரேஅடியாக விரட்டும் வல்லமை தி.மு.க.விடம் உள்ளது. இந்த நாளை தேர்ந்தெடுக்க விஷயம் உள்ளது. மறந்துவிட முடியாத 2016 நவம்பர் 8ஆம் தேதி. இந்தியாவில் 120 கோடி மக்களை முட்டாளாக்கிய மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நாள், இந்த நாள்.

மோடி மஸ்தானின் வாக்குறுதி

இதற்கு என்ன காரணம் என மோடி விளக்கம் அளித்தார். 1000, 500 ரூபாய் செல்லாது என அறிவித்த நாளில் ஊழல் அடியோடு ஒழிக்கப்படும், கள்ள நோட்டு குறைக்கப்படும், தீவிரவாதம் ஒழிக்கப்படும் என மோடி மஸ்தான்  போல் அறிவித்தார். அறிவித்து 2 ஆண் டுகள் முடிந்துள்ள நிலையில் நான் கேட்கும் கேள்வி- கருப்பு பணம் இல்லையா, ஊழல் இல்லையா, கள்ள நோட்டு, தீவிரவாதம் ஒழிந்துவிட்டதா?. என்ன சாதித்தார் என்றால் ஒன்று மில்லை.  100 நாளில் வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை கொண்டு வந்து இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகன் பெயரில் வங்கிகளில் ரூ.15 லட்சம் வழங்குவேன் என அறிவித்தார். 15 லட்சம், 15 ஆயிரம் அல்லது வெறும் 15 ரூபாய்  போடப்பட்டதா. தெரிந்து இருந்தால் யாராவது கூறுங்கள். கிராமத் தில் ஒரு கதை கூறுவார்கள். 365 நாட்க ளில் கடைசி நாளில் நான் ஒரு மலையை தூக்குவேன் என ஒருவன் கூறினான். அதனை உண்மை என நம்பிய கிராம மக்கள் அவனுக்கு தங்குவதற்கு வீடு, உண்ண உணவு என  தேவையான வசதியை செய்து கொடுத்தனர். 365வது நாள் வந்தது. எப்போது மலையை தூக்க போகிறாய் என மக்கள் கேட்டதற்கு எல்லோரும் சேர்ந்து தூக்கி வையுங்கள் தூக்குகிறேன் என கூறினான். அப்படித் தான் மோடி  வாக்குறுதி கொடுத்துள்ளார். வெளிநாட்டு பிரதமர் மோடி

வெளிநாடுவாழ் இந்தியர் என கேள் விப்பட்டுள்ளோம். ஆனால் வெளிநாடு பிரதமர் என இப்போதுதான் கேள் விப்படுகிறோம். 4 ஆண்டுகளில் 84 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள் ளார். வாய் புளித்ததோ, மாங்காய் புளித் ததோ  என நான் கூறவில்லை, ஆதாரத் துடன், புள்ளிவிவரத்துடன் கூறுகிறேன். ஏன் என்றால் நான் தலைவர் கலைஞரின் மகன். அவர் 84 நாடுகளுக்கு சென்ற செலவு ரூ.1,484 கோடி. உலகளவில் அதிக வெளிநாடுகளுக்கு சென்ற தலை வர் என்ற பெயரை மோடி பெற்றுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலையை ஏற்றியதுதான் வளர்ச்சி

வளர்ச்சி, வளர்ச்சி என பெட்ரோல், டீசல் விலையை ஏற்றியதுதான் வளர்ச்சி. காங்கிரஸ் ஆட்சியின்போது ஜி.எஸ். டி.யை எதிர்த்து  போராடியது பாஜக. மோடி பிரதமரானதும் இரவோடு இர வாக ஜி.எஸ்.டி.யை நிறைவேற்றினார். காங்கிரஸ் ஆட்சியில் ஆதார் அட்டை வேண்டாம் என பாஜக கூறியது. ஆனால் இன்று ஆதார் கட்டாயம் என பாஜக கூறுகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் உள்ளது என கூறியுள்ளது. இதை எதிர்த்திட நாம்  தயாராகிவிட்டோம் என்பதற்குத்தான் இந்த கூட்டம். இந்த அரசை வெளி யேற்ற வேண்டும் என்ற நோக்கில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். கர்நாடக முதல்வர்,  முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகி யோரையும் சந்தித்துள்ளார். தி.மு.க. தலைவராக உள்ள என்னையும் சந்திக்க சந்திரபாபுநாயுடு நாளை (இன்று) சென்னை வருகிறார். அனைத்து கட்சி களை ஒன்றிணைத்து எதிர்க்க முடிவு  செய்யப்பட்டுள்ளது.

ரூ.3000 கோடி முறைகேடு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் விடப்பட்டதில் ரூ.3000 கோடி முறைகேடு குற்றச்சாட்டு குறித்து, தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சி.பி.அய். விசாரணை நடத்த தீர்ப்பு  வழங்கப்பட்டது. அதன்படி அவர் ராஜினாமா செய்து வழக்கை சந்திக்க வேண்டும். ஆனால் முடியாது, மடியில் கனமில்லை என்கிறார். மடியில் கனம் இருப்பதால்தான் அப்பீல் செய்துள்ளார். ஒரு முதல்வர் சி.பி.அய். விசாரணையில் சிக்கி இருப்பது இந்தியாவில் இதுதான் முதல்முறை. துணை முதல்வர் ஓ.பி. எஸ்., லஞ்ச ஒழிப்பு துறையில் சிக்கி உள்ளார். அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வீரமணி, தங்கமணி ஆகியோரிடம்  விசாரணை நடக்கிறது. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், சிபிஅய், வருமானவரி துறை நெருக்கடியில் கிரிமினல் கேபி னட் சிக்கியுள்ளது. கொசு- டெங்குவை உற்பத்தி செய்வதுபோல் கோட்டையில் உள்ள இவர்கள் ஊழலை உற்பத்தி  செய்கின்றனர்.

மத்திய அரசு எடப்பாடிக்கு திருட அனுமதி கொடுத்துள்ளது. எனவே, மத வாதத்துக்கு எதிராக, அடக்குமுறைக்கு எதிராக, ஆணவத்துக்கு எதிராக, விலை வாசி உயர்வுக்கு எதிராக, இந்தி திணிப் புக்கு எதிராக, ஊழலுக்கு எதிராக,  சர்வதிகாரத்துக்கு எதிராக போர் நடத்த வேண்டும். ஒரே போராக பாசிச பா.ஜ.க, ஊழல் அ.தி.மு.க. அரசுகளை அகற்ற வேண்டும்.  இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner