எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தொல்.திருமாவளவன் பேட்டி

திருப்பூர், நவ. 9- சனாதன பயங்கரவாதத்தை எதிர்த்து டிசம்பர் 10ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள்கட்சியின் சார்பில் திருச்சியில் நடத்தப்படும் தேசம் காப்போம் மாநாடு மதச் சார்பற்ற ஜனநாயக சக்திகளை இணைக்கும் முக்கிய மாநாடா கத் திகழும் என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமா வளவன் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வியாழனன்று தொல்.திருமாவளவன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: சனாதன பயங்கரவாதத்தை எதிர்த்து டிசம்பர் 10இல் நடைபெறும் தேசம் காப்போம் மாநாடு மதசார்பற்ற இயக்கங்களை இணைக்கும் முக்கிய மாநாடாக அமையும். இந்த மாநாட்டில் காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி, இடதுசாரி தலைவர்கள் சீத்தாராம் யெச்சூரி, சுதாகர் ரெட்டி மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். தேசம் காக்கவும், ஜனநாயகம் காக்கவும், அரசியல் அமைப்புச் சட்டத்தைக் காக்கவும் இந்த முக்கிய மாநாடு நடைபெறுகிறது.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தள வாய்பட்டணத்தில் ராஜலட்சுமி என்ற சிறுமி கழுத்தைத் துண்டித்து கோரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதில் குற்றவாளி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அவரது உறவினர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவேஅவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். இந்த பிரச்சினை குறித்து முதல்வரை நேரில் சந்தித்து அந்த குடும்பத்துக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க கோருவேன்.

இலங்கையில் தற்போது அரசியல் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. அங்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்புதான் தீர்மானிக் கும் சக்தி யாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் சம்பந்தம் அவர்கள் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.ராஜபக்சே பிரதமரானால் அது விசார ணைக்குத் தடையாக இருக்கும். தமிழர்களுக்குப் பாதுகாப்பாக இருக்காது. தமிழகத்தில் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே இந்த தொகுதிகளில் உடனடியாகத் தேர்தல் நடத்த வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக 20 தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிட விரும்பவில்லை. திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்புத் தருவோம்.

மதச்சார்பற்ற அனைவரும் ஒன்று சேர வேண்டும். யார் பிரதமராக வர வேண்டும் என்பதை விட மோடி பிரதமராகக் கூடாது என்று முடிவு செய்ய வேண்டும். மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றாக செயல்பட்டால் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடையும். இவ்வாறு அவர் கூறினார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டை முன்னிட்டு இதுவரை 1,457 கைதிகள் விடுதலை

சென்னை, நவ. 9- எம்.ஜி.ஆர். பிறந்த நாள், நூற்றாண்டை முன்னிட்டு, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்-அமைச் சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, 1,775 கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது.

இந்த முடிவு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக் கப்பட்டது. அதில் இதுவரை 1,457 கைதிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள கைதிகள் இந்த மாத இறுதிக்குள் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சிறைத்துறை வட்டாரம் கூறியது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட 23 கைதிகளில் 5 பேர்  மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner