எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப். 14- மக்கள் விரோத அரசை தூக்கி எறிய விழுப்புரம் முப்பெரும் விழாவிற்கு வருகை தரவேண்டும் என தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து உள்ளார். இதுகுறித்து அவர் நேற்று (13.9.2018) வெளியிட்ட அறிக்கை:

முத்தமிழாக, முக்கனியாக இனித்து எழுச்சி தரும் திமுக விழா, முப்பெரும் விழா. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்த திருநாள் விழாக்களும், காலம் கன்னித் தமிழகத்திற்குக் களிப் புடன்  ஈந்த கழகத்தின் தோற்றமும், ஒன்றாய் இணைக்கப்பட்டு உயர்வோடு நடக்கின்ற இனிய விழா. நம் உயிருடன் இரண்டறக் கலந்திருக்கிற கலைஞர் ஆண்டுதோறும் தவறாது எடுத்த தனிப் பெரும்  விழா. உடன்பிறப்புகளின் உணர்வில், உள்ளத்தில் பதிந்திருக்கும் திராவிட லட்சியங்களைச் சிறப்புற நினைவூட்டும் திருவிழா. விழுப்புரத் தில் விழிப்புற்றெழுக என்று  அன்றொ ருநாள் கலைஞர் அழைத்தாரே, அதே மாநகரில் செப்டம்பர் 15ஆம் நாள் எழுச்சியுடன் நடைபெறவிருக்கிறது முப்பெரும் விழா. அந்த விழாவுக்கான எனது அன்பு அழைப்புதான் இந்த  மடல்.

ஜனநாயக விரோத அரசுகள்

மத்தியிலும், மாநிலத்திலும் நடை பெறுகிற மக்கள் விரோத ஜனநாயக விரோத அரசுகள் தூக்கி எறியப்பட வேண்டும். அதற்கான அமைதியான அறநெறிக் களத்திற்கு நாம் தயாராக  வேண்டும். தோழமை சக்திகள் துணை நிற்கின்றன. நாடு எதிர்கொண்டுள்ள சவாலை நாம் அறிவோம். அதனைச் சந்திக்க ஆயத்தமாகவும் ஆர்வத்துடனும் இருக்கிறோம் என்ற சூளுரையை  மேற் கொள்ள விழுப்புரத்தில் கூடிடுவோம்.மாவட்ட செயலாளர் பொன்முடி சிறப் பான முறையிலே முப்பெரும் விழா வினை முனைப்போடு ஏற்பாடு செய்து வருகிறார். பேராசிரியர் தலைமையில் நடைபெறவிருக்கிற முப்பெரும்  விழா வில், திமுக பொருளாளர் துரைமுரு கன், துணைப்பொதுச் செயலாளர்கள் அய்.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெக தீசன், வி.பி.துரைசாமி வாழ்த்துரை வழங்குகிறார்கள். விருதுகள் வழங்கிச்  சிறப்புரை ஆற்றும் வாய்ப்பு உங்களில் ஒருவனான எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

திமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு, உடன்பிறப்புகள் அனைவ ரையும் ஒருசேர சந்திக்கின்ற பேரார் வத்துடன் விழுப்புரம் நோக்கி விரைகி றேன். நீங்களும் அதே ஊக்கத்துடனும்  உற்சாகத்துடனும் வருவீர்கள் என்று வழியெல்லாம் விழி வைத்து எதிர்பார்க் கிறேன். திமுகவை காத்திட உழைத் தோருக்கு விருது வழங்கிச் சிறப்பிப்பது கலைஞர் உருவாக்கித் தந்த  வாஞ்சைமிகு வழக்கம். அதே போல் இந்த விழாவிலும் விருதுகள் வழங்கப்படுகின் றன. திமுகவை காத்திடவும், கலைஞ ரின் புகழுக்கு மேலும் மேலும் பெருமை சேர்த்திடவும், குடும்பம்  குடும்பமாக விழுப்புரத்தில் கூடிடுவோம். இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner