எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ரகுராம் ராஜன் அளித்த மோசடி கடனாளிகள் பட்டியலை பிரதமர் அலுவலகம் வெளியிட வேண்டும்

சென்னை, செப்.13 ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் அளித்த மோசடி கடனாளிகள் பட்டியலை பிரதமர் அலுவலகம் பகிரங்க மாக வெளியிடவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா வளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் புதன் கிழமை வெளியிட்ட அறிக்கை:

முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் வராக் கடன்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் சமர்பித்துள்ளார். அதில் வராக் கடன்கள் உருவாவதற்கான காரணங்களை அவர் பட்டிய லிட்டுள்ளார். மோசடியாக உள்நோக்கத்துடன் கடன் பெறு வது முக்கியமான காரணமாக அதில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.

அவர் அளித்த பட்டியலில் நீரவ் மோடி, முகுல் சோக்சி ஆகியோரின் பெயர் உள்ளதாகவும், அவர்களை நாட்டை விட்டு தப்பிச் செல்ல அனுமதித்தது எப்படி என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

விவசாயிகளும், மாணவர்களும் வாங்கும் கடன்க ளுக்காக, அவர்களை அவமானப்படுத்தி அடியாட்களை வைத்து மிரட்டி வங்கிகள் தரும் நெருக்கடியால் பலர் தற் கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால், கோடிக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்யும் கார்ப்பரேட்டுகளுக்கு பாதுகாப்பளித்து அவர்களை வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல பாஜக அரசு உதவுகிறது. பிரதமர் அலுவலகத்துக்கு ரகுராம் ராஜன் அளித்த மோசடி கடனாளிகளின் பட்டியலை உடனே பகிரங்கமாக வெளியிட வேண்டும் என திருமா வளவன் தெரிவித்துள்ளார்.

லாரிகள் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை

தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, செப்.13 அனைத்து மாவட்டங்களிலும் அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி லாரிகள் மூலம் விற்பனை செய்பவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேஷ்குமார் தாக்கல் செய்த மனுவில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வல்லூர் பகுதியில் ராட்சத மோட்டார் மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சி லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை. இப்பகுதியில் நிலத்தடி நீரின் அளவு வெகுவாகக் குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதே போன்ற பிரச்னைகளால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து முதல்வரின் தனிப் பிரிவிலும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு கொடுத்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. நிலத்தடி நீரை உறிஞ்சி லாரிகள் மூலம் விற்பனை செய்வதைத் தடுக்க உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், வல்லூர் பகுதியில் நிலத்தடி நீரை முறைகேடாக எடுத்த 5 பேரின் மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது நீதிபதிகள், சம்பந்தப்பட்டவர்கள் மீது ஏன் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினர். அதற்கு, அரசுத் தரப்பில் வட்டாட்சியர்களுக்கு நிலத்தடி நீரை எடுத்துச் செல்லும் லாரிகளை பறிமுதல் செய்யும் அதிகாரம் மட்டுமே உள்ளது. அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நிலத்தடி நீரை உறிஞ்சுபவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால் இந்த வழியில் தண்ணீர் எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மனுதாரர் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

அனைத்து மாவட்டங்களிலும் அனுமதியில்லாமல் நிலத்தடி நீரை உறிஞ்சி லாரிகள் மூலம் விற்பனை செய்பவர்கள் மீது எத்தனை குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு வரும் செப்டம்பர் 24-ஆம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner