எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை, ஜூலை 4-- இணைய வழி நூலகத்தில் செம்மொழி யாம் தமிழை புறக்கணித்து, அதே நேரத்தில் இந்தி, சமஸ் கிருதமும் இணைத்திருப்பது ஏன்? என்று  சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வினா எழுப்பினார்.

மத்திய அரசின் இணைய நூலகத்தில் தமிழ் உள்பட தென்னக மொழிகளை வேண் டுமென்றே புறக்கணித்து விட்டு,  இந்தி,  சமஸ்கிருதத்திற்கு முன் னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட் டினார்.

சட்டப்பேரவையில் நேற்று (3.7.2018) கேள்வி நேரம் முடிந் ததும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  மத்திய பாஜக அரசினுடைய மனிதவள  மேம்பாட்டுத் துறையின் சார்பிலே புதிதாக துவங்கப்பட்டிருக்கக்கூடிய இணையவழி நூலகத்தில் ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மட்டுமே இடம்பெற்று இருக் கிறது.  நம்முடைய அன்னை தமிழ் முழுமையாக புறக்கணிக் கப்பட்டிருக்கிறது.

இது உள்ளபடியே மிகப் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி யிருக்கிறது. தமிழ்  மட்டுமல்ல, மலையாளம், தெலுங்கு, கன் னடம் ஆகிய தென்னக மொழி கள் அனைத்துமே முழுமையாக புறக்கணிக்கப்பட்டு தெற்கு, வடக்கு என்ற பிளவு  மனப்பான்மை நீர் வார்க்கப்பட்டிருக்கிறது. வேண் டுமென்றே, திட்டமிட்டு பரப் பக்கூடிய இத்தகையை வெறுப் பும், விரோதமும் மிக மிக கண்டனத்திற்கு  உரியது. நம் இந்திய நாடு குறித்தும், இந்த நாட்டினுடைய கலாச்சாரம் குறித்தும், அனைத்து நாடுகளி லும் உள்ள பல்கலைக்கழக மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள்  அறிந்து கொள்வதற்கு இந்த இணையவழி நூலகம் உதவும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கி றது. மூன்று லட்சம் எழுத்தா ளர்களின் ஒரு கோடி நூல்கள்  இதில் இடம்பெற்றிருந்தபோதி லும் தமிழகத்தை சார்ந்த வர லாற்று நூல்கள், புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நூல்கள் இதிலே இடம் பெறவில்லை.

மூத்த மொழி புறக்கணிப்பு

ஆனால், வேத நூல்களில் மூல நூல்கள் அதன் பொருள் விளக்கங்களோடு இடம் பெற் றிருக்கின்றன. அந்த இணைய வழி நூலகத்திலே நீங்களும் உங்கள்  நூல்களை பதிய விட லாம் என்ற இடத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன் னடம் உள்ளிட்ட தென் மாநி லங்களுடைய மொழி நூல் களை பதிவு செய்ய  வாய்ப்பே கிடையாது. தமிழ் உள்ளிட்ட இந்த மொழி நூல்களை பதிய விட வேண்டுமென்றால் அதை ஆங்கிலம், சமஸ்கிருதம் மற்றும் இந்தி பதிப்புக்களில்  வெளியிட்டிருந்தால் மட்டுமே, பதியவிட முடியும். சமஸ்கிரு தத்திற்கு துதி பாடக்கூடிய மத் திய அரசு இந்தியாவினுடைய மூத்த தமிழ் மொழியை திட் டமிட்டு இந்த இணைய வழி நூலகத்திலே  புறக்கணித்திருக் கிறது.

தமிழின மக்களை இரண் டாம் தர குடிமக்களாக எண்ணி அவமதிக்கும் செயலாக அமைந் திருக்கிறது என்று திமுக தெளி வாக  கருதுகிறது.  ஆகவே,  முதல்வர் இதிலே உடனடியாக தலையிட்டு இணைய வழி நூலகத்தில் செம்மொழியாம் தமிழ்மொழியின் சிறப்புகள்  அடங்கிய நூல்களும், தமிழ் மொழியின் ஆளுமைகளான எழுத்தாளர்கள் நூல்களும் இடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுமட்டுமல்ல,  இணையவழி நூலகத்திலே தமிழ்மொழி நூல்களை பதிய விடுவதற்கு தேவையான நட வடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார்.

ராமசாமி (காங்கிரசு சட்ட மன்ற கட்சி தலைவர்): சமஸ்கி ருதத்தை இந்த அரசு முன்னி லைப்படுத்துகிறது. தமிழை ஏன் அவர்கள் விட்டார்கள் என்று  மத்திய அரசு சரியான பதிலை தர வேண்டும். இதுபோன்ற தவறு செய்பவர்கள் எப்படிப் பட்ட நண்பர்களாக இருந்தா லும் தட்டிக் கேட்கும் பொறுப்பு  நமக்கு இருக்கிறது. இதை தமி ழக அரசு எதிர்க்க வேண்டும்.

எதிர்க்கட்சி தலைவர்களின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் பதில் அளித்து பேசியதாவது:

மத்திய அரசு தொணடங்கி யுள்ள இணையதளத்தில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ள பிரச் சினை 5 நாட்களுக்கு முன்பு அரசின் கவனத்துக்கு வந்தது.  இந்தியாவில், மின் நூலகங்கள் மூலம் அனைத்தையும் ஒருங் கிணைக்கும் குறிக்கோளுடன் இணைய நூலகம் தொடங் கப்பட்டுள்ளது.

இதில் தமிழ்,  குஜராத் உள் ளிட்ட 8 மொழிகளும் மற்றும் உலகில் பிரசித்தி பெற்ற 8 மொழிகளும் சேர்க்கப்பட உள் ளன. இந்த இணையதளத்தை மாணவர்கள்  இலவசமாகப் பார்க்க முடியும்.

அமைச்சர் செங்கோட்டை யன்: மத்திய அரசின் இந்த இணைய வழி நூலகத்தில் தமிழ் மொழி நூல்களை சேர்க்க தமிழக அரசு அனைத்து  நடவடிக்கைகளையும் செய்து வருகிறது. விரைவில் தமிழ் நூல்களை இந்த இணையதளத் தில் பார்க்க முடியும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

குறிப்பு: இதுகுறித்து திராவி டர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுதலை யில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார் (1.7.2018). சட்டப் பேரவையில் இது குறித்து பிரச்சினை எழுப்ப வேண்டும் என்று அந்த அறிக் கையில் குறிப்பிட்டிருந்தார். எதிர்கட்சித் தலைவர் தன் பணியை சிறப்பாக செய்து உள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner