எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஏப்.16 நீதிமன்றங்களிலேயே தீண்டாமை இருப்பதைத் திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் சுட்டிக்காட்டினார்.

இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் கூறியதாவது:

சுதந்திரம் அடைந்து 71ஆண்டுகள் ஆனபின்னரும்கூட இந்த நாட்டில் தீண்டாமை ஒழிப்பதுகுறித்து பேசுவது தலைகுனிவானது. 1957இல் தஞ்சாவூரில் தந்தை பெரியார் கேட்டார், அரசமைப்புச்சட்டத்திலேயே ஜாதி இருக்கிறதே, இந்த நாட்டில் உண்மையான சுதந்திரம் இருக்குமா? என்று கேட்டார்.

சென்னையில் பெரியார் திடலில் 1973ஆம் ஆண்டில் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. தந்தை பெரியார் கலந்துகொண்ட அம்மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அரசமைப்புச்சட்டத்தில் பிரிவு 17இல் தீண்டாமை ஒழிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. தீண் டாமை என்பதற்கு பதிலாக ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று திருத்தம் கொண்டுவரப்படவேண்டும் என்று அந்த தீர்மானத்தில் 1973 ஆம் ஆண்டிலேயே கூறப் பட்டது.

தாழ்த்தப்பட்டவர்கள் குஜராத்தில் குதிரையில் சென்றால், கொல்லப்படுகிறார்கள், மீசை வளர்த்தால் தாக்கப்படுகிறார்கள், நாட்டியத்தைப் பார்த்தார் என்கிற காரணத்தால் கொல்லப்படுகிறார்.

உ.பி. அலகாபாத் நீதிமன்றத்தில்...

நீதிமன்றத்திலேயே தீண்டாமை கொடுமை உள்ளது. உ.பி. அலகாபாத் நீதிமன்றத்தில் புதிதாக உயர் ஜாதி நீதிபதி செல்கிறார், அந்த பதவியிடத்தில் ஏற்கெனவே தாழ்த்ப்பட்டவர் நீதிபதியாக இருந்தார் என்கிற காரணத்தால், அவர் அமர்ந்த இருக்கை, அறை சுத்திகரிக்கப்பட்டதே, தீண்டாமை என்பது நீதிபதிகள் மத்தியிலேயே இருக்கிறதே!

உண்மையிலேயே தீண்டாமை ஒழிக்க வேண்டு மானால், அரசமைப்புச்சட்டத்தில் ஜாதி ஒழிக்கப்பட வேண்டும்

ராஜஸ்தான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூகநலத்துறை அலுவலர் பன்வாரி தேவி என்பவர் பணியாற்றிவருகிறார். அவர் பணியில் ஒன்று குழந் தைகள் திருமணத்தைத் தடத்து நிறுத்துவது. அப்படி ஒரு குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்தும்போது, அவர் கணவன் முன்னாலேயே ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அய்ந்துபேர் சேர்ந்து பாலியல் வன்முறை செய்தார்கள். அதன்மீதான புகாரைப்பெற்று வழக்கு பதிவு செய்வதற்குகூட போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. நீதிமன்றத்தில் நீதிபதி சொன்னார், பாதிக்கப்பட்ட பெண் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டுள்ளது, குற்றம் செய்தவர்களாக கூறப்படுபவர்கள் அய்ந்துபேரும் பிராமணர்கள். பிராமணர்கள் எப்படி தாழ்த்தப்பட்ட பெண்ணிடம் பாலியல் வன்முறை செய்ய முடியும்? என்று கேட்டார்.

வீதிக்கு வந்து போராடி சமூகநீதியைக் காப்பாற்றவேண்டும்

நீதிமன்றத்திலேயே இந்த தீர்ப்பு வருகிறது என்கிறபோது அந்தச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யலாமா? வன்கொடுமைத் தடுப்புச்சட்டம்த்தின் கீழ் 24.9 விழுக்காடு மட்டுமே தண்டனை அளிக்கப் பட்டுள்ளது. வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தாழ்த்தப்பட்டவர்கள் போராடியதில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அனைவரும் வீதிக்கு வந்து போராடி சமூகநீதியைக் காப்பாற்றவேண்டும் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner