எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, பிப்.27 சென்னை

அய்.அய்.டி.யில் தமிழ்த் தாய் வாழ்த்துக்குப் பதிலாக சமஸ்கிருதப் பாடல் பாடப்பட்டுள்ளதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண் டனம் தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின்: தமிழ்நாட்டிலேயே தமிழ்த்தாய் வாழ்த் துக்கு மீண்டும் ஒரு முறை அவமதிப்பு நிகழ்ந்திருப்பதும், மத்திய பாஜக அமைச்சர் பங்கேற்ற விழாவிலேயே இத் தகைய தரந்தாழ்ந்த செயல் நடந்திருப்பதும் வன்மையான கண்டனத்திற்குரியது. அய்.அய்.டி.யில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ் ணன் உள்ளிட்டோர் பங்கேற்ற விழா வின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டு, உலக வழக்கொழிந்த சம்ஸ்கிருத மொழியில் மதம் சார்ந்த இறைவணக்கப் பாடல் இசைக்கப்பட்டு, அதற்கு அனைவரும் மரியாதை செலுத்தியுள்ளனர். தமிழ் நாட்டில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த் தாய் வாழ்த்து தொடக்கமாகவும், நாட் டுப்பண் நிறைவாகவும் இசைக்கப்படும் நிலையில், மத்திய அரசின் நிறுவன மான அய்அய்டியில் தமிழ் மொழியை யும் தமிழர்களின் பண்பாட்டையும் அவமானப்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப் பட்டு, மதச்சார்பற்ற உயர்கல்வி நிறு வனத்தில் மதத்தைப்போற்றும் பாடல் இசைக்கப் பட்டிருப்பது, திட்டமிட்ட செயலாகவே தெரிகிறது. இதற்கு என்ன சமாதானம் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.

சு.திருநாவுக்கரசர்: சென்னை கிண்டி இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவ னத்தின் நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் சமஸ்கிருதத்தில் கணபதி வந்தனம் பாடியிருப்பது தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிகழ்வுக்கு மத்திய அமைச்சர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

ராமதாஸ் (பாமக): தமிழகத் தில் தமிழை அழித்து, சமஸ்கிரு தத்தை வளர்க்கும் முயற்சி யில் அய்.அய்.டி.யில் சமஸ்கிருத பாடல் பாடப்பட்டுள்ளது. இது கண்டிக்கத் தக்கது. தமிழைப் புறக்கணிக்கும் வகையில் சமஸ்கிருதப் பாடலை இசைத்ததற்காக சென்னை அய்அய்டி நிர்வாகம் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். இனிவரும் காலங்களில் அய்.அய்.டி. வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுவது கட்டாய மாக்கப்பட வேண்டும்.

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: சென்னை அய்.அய். டி.யில் திங்கள் கிழமை நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டு, சமஸ்கிருத பாடல் இசைக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. அரசு விழாவில் ஒரு குறிப்பிட்ட மதத் தினுடைய பாடல் இசைக்கப்படுவது என்பது மதச்சார்பின்மைக்கு விடப் பட்ட சவாலாகும். மேலும் இது சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழி திணிப்பினுடைய இன்னொரு வடிவம். உயர்கல்வி நிறுவனத்தில் உள்ள பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்திய பாஜக அமைச்சர்களின் விருப் பத்திற்கு அடிபணிந்து செயல்படுவது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது.

வைகோ (மதிமுக): அய்அய்டி நிகழ்வு, தமிழர்களின் தன்மானத்துக்கும், தமிழ் மொழியின் மாண்புக்கும் விடப் பட்ட அறைகூவல் ஆகும். தமிழகத்தின் தலைநகரிலேயே தமிழைப் புறக் கணித்து, வட மொழிப் பாடலைத் திணித்தது எந்த விதத்திலும் மன்னிக்கக் கூடியதல்ல. இதற்குப் பொறுப்பான அய்.அய்.டி நிர்வாகத்துக்கு கடும் கண் டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிகழ்வில் பங்கேற்ற மத்திய அமைச் சர்கள் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.

பழ.நெடுமாறன் (தமிழர் தேசிய முன்னணி): அய்.அய்.டி. நிகழ்ச் சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடுவதற்கு பதில் சமஸ்கிருதத்தில் மகா கணபதி பாடல் பாடப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். சகல மதங்களைச் சார்ந்த மாணவர்கள் படிக் கும் கல்வி நிலையத்தில் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த இறைவணக்கப் பாடலைப் பாடுவது மிகத் தவறானது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்   சங்கத்தின் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் இருவரும் திங்களன்று (பிப்.26) வெளியிட்ட அறிக்கை வருமாறு:

சென்னையில் உள்ள, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (அய்அய்டி) திங்களன்று (பிப்.26) காலை நடைபெற்ற அரசு சார் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக் கணிக்கப்பட்டதுடன், மகாகணபதிம் என்ற சமஸ்கிருதப் பாடல் இசைக்கப் பட்டு அனைவரும் எழுந்து நின்றுள் ளனர்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச் சர்கள் நிதின் கட்காரி, பொன்.ராதாகிருஷ்ணன் இருவரும் நிகழ்ச்சியில் பங்கேற்று இந்த அகம்பாவத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளனர். மத்திய அரசின் நிறுவனங்களில் தேசியகீதத் துடன் நிகழ்ச்சிகள் தொடங்கப்படுவ துண்டு. இந்த நிகழ்ச்சியில் அப்படியும் நடக்கவில்லை.  மத்திய அரசின் விழா வில்  இப்படியொரு சமஸ்கிருத பாடலுடன் நிகழ்ச்சியைத் தொடங்கியது யார் எடுத்த முடிவு? அதற்கு அமைச் சர்கள் ஒப்புதல் அளித்தது எந்த அடிப்படையில்?  பாடப்பட்டது சமஸ் கிருத மொழியில் உள்ள பாடல் மட்டுமல்ல, இந்து மத வழிபாட்டுப் பாடல் அது. மத்திய ஆளுங்கட்சியினரின் ஒற்றை மத ஆதிக்க அரசியல், சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழித் திணிப்பு இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புள்ளவை என்பதற்கு இன் னொரு ஆதாரமாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.

மொழித் திணிப்பு நடவடிக்கை களையும், மதவெறி அரசியல் உத்தி களையும் முறியடித்த மகத்தான வர லாறு கொண்ட தமிழகம், இந்தப் புதிய அதிகார அத்துமீறலுக்கு எதிராகக் கொந் தளித்து எழ வேண்டும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner