எழுத்துரு அளவு Larger Font Smaller Font



சென்னை, மே 4 தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் நேற்று (3.5.2017) ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆய்வுப் பணிகள் மேற்கொண்ட நேரத் தில், வார்டு எண் 69-இல் ரமணா நகர் பகுதியில் இருக்கக்கூடிய குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டேன்.

ஏற்கனவே நான் சட்டமன்றத்தில், இந்தப் பகுதியில் உள்ள 400 குடியிருப்புகள் பழுதடைந்த நிலையில், இங்கு வசிப்பவர்களின் உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் சூழ்நிலையில் உள்ள கட்டிடங்களை முழுமையாக இடித்துவிட்டு, புதிதாக குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டிடங்கள் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறேன்.

அப்படி கோரிக்கை வைத்த நேரத் தில், அதற்கான நடவடிக்கைகள் விரை வாக மேற்கொள்ளப்பட்டு முடித்து தரப்படும், என்று அந்தத்துறையின் அமைச்சர் உறுதியளித்தார்.

ஆனால், அது இன்னும் நிறைவேற்றப்பட வில்லை. இந்த நிலையில், தற்காலிக மாக பழுதடைந்த கட்டிடங்களின் பராமரிப்பு பணிகளை அரசு அல்லது துறையின் சார்பில் நிதி ஒதுக்கவில்லை, வாய்ப்பில்லை என்று சொன்னாலும், என்னுடைய சட்டமன்ற தொகுதி மேம் பாட்டு நிதியிலிருந்து நான் ஒதுக்கீடு செய்யும் போதாவது அதை நிறை வேற்றித் தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல், வார்டு எண் 64இ-ல் கம்தாரியா காலனி பகுதியில் கலையரசி என்ற பெண் மின்கசிவு ஏற்பட்டு இறந்து இருக்கிறார். ஏற்கனவே நான் சட்டமன்றத்தில், மேலே செல்லும் மின் கம்பிகளை எல் லாம் மாற்றி, புதைவட மின்பாதை (தரையில் பதித்தல்) அமைத்து நிறை வேற்றித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.

அதை 2016-ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றித் தருவதாக சட்டமன்றத்தில் துறையினுடைய அமைச்சர் வாக்குறுதி தந்தார்.

ஆனால், அந்தப்பணியும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. ஏற்கனவே ஒருவர் இறந்தநிலையில், அண்மையில் இப்போது மீண்டும் ஒரு பெண் இறந் திருக்கிறார். இப்படிப்பட்ட ஆபத்தான சூழ்நிலையை தவிர்க்க, மின் கம்பிகளை எல்லாம் புதை மின்பாதையாக மாற்றித் தருகின்ற பணியை உடனடியாக அரசு செய்துதர வேண்டும் என்று நான் வலி யுறுத்தி, வற்புறுத்தி கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

அதுமட்டுமல்லாமல், கொளத்தூர் தொகுதியை பொறுத்தவரை பல பகுதிகளில், நூற்றுக்கு தொண் ணூற்று ஒன்பது சதவிகித இடங்களில் குடிநீர் பிரச்சினை இருந்து கொண்டிருக் கிறது.

எனவே, குடிநீர் பிரச்சினையில் குடிநீர் வடிகால் வாரியம் உடனடியாக முழு கவனத்தை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இதே சென்னை மாநகரத்தில் நான் மேயராக இருந்தபோதும், அதைத் தொடர்ந்து மா.சுப்பிரமணியம் மேயராக இருந்தபோதும் கூட குடிநீர் பிரச் சினைகள் வந்திருக்கின்றன.

அப்படி குடிநீர் பிரச்சினைகள் வருகிறபோது அரசு துறைகளை சார்ந்திருக்கக்கூடிய எல்லா துறைகளையும் இணைத்து, ஒருங்கிணைப்பு குழுவை ஏற்படுத்தி, உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுத்து, அந்தப்பிரச்சினைகளை நாங்கள் உட னுக்குடன் தீர்த்து வைத்திருக்கிறோம். ஆனால், இப்போது இருக்கக்கூடிய அரசு அதுபோன்ற குழுக்களை எல்லாம் அமைப்பது இல்லை.

அதனால், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணாமல், மாநகராட்சி சம்பந்தப் பட்ட சாலைகளை தோண்ட வேண்டும் மற்றும் அதற்குரிய அனுமதியை வாங்க வேண்டும் என்று குடிநீர் வடிகால் வாரியம் சொல்கிறது, மின் கேபிள்கள் இருப்பதால் மின் துறையின் ஒப்புதல் வேண்டும் என்று சொல்கிறார்கள் என்று ஒவ்வொரு துறையும் மாறி மாறி சொல்லி, இப்படியே காலங்கடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒருங்கிணைப் புக் குழு இருந்திருந்தால் உடனுக்குடன் இந்தப் பிரச்சினைகளை எல்லாம் சரி செய்திருக்க முடியும். அந்தப் பணியை அரசு செய்யாமல் இருப்பது உள்ள படியே கண்டிக்கத்தக்கது, வேதனைக் குரிய ஒன்று. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner
-- >