எழுத்துரு அளவு Larger Font Smaller Font

73 நாட்களில் கையெழுத்து போட்டதாக கூறும்
1,570 கோப்புகளில் உள்ள திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு?


சென்னை,மே 3 தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (2.5.2017) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் நிர்வாகம் அனைத்து மட்டங்களிலும் நிலை குலைந்து நிற்கின்ற நேரத்தில் 73 நாட்களில் 1,570 கோப்புகளில் கையெழுத்துப் போட்டி ருக்கிறேன். எந்த கோப்புகளும் நிலு வையில் இல்லாத வண்ணம் அரசு நிர்வாகம் தொய்வின்றி நடைபெற்று வருகிறது என்று முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.


அதில் விவசாயிகள் தற்கொலையே செய்து கொள்ளவில்லை என்று உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண வாக்குமூலத்திற்கான கோப்பும் ஒன்றாக இருக்கும் என்றே நம்புகிறேன்.

ஏனென் றால் முதல்அமைச்சருக்குத் தெரியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள் ளவில்லை என்று தவறான தகவலை உச்சநீதிமன்றத்தில் வாக்குமூலமாக தமிழக அரசின் சார்பில் யாரும் தாக்கல் செய்திருக்க முடியாது.

கோப்புகளில் கையெழுத்துப் போடு வது முதல்அமைச்சரின் கடமைகளில் ஒன்று. இவ்வளவு கோப்புகளில் கையெழுத்துப்போட்டேன் என்று கூறும் முதல்அமைச்சர் எத்தனை முக்கிய திட்டங்களுக்கு அந்த கோப்புகள் மூலம் அனுமதி கொடுத்திருக்கிறார்?. 1,570 கோப்புகள் மூலம் திட்டங்களுக் காக இதுவரை எவ்வளவு நிதி ஒதுக் கப்பட்டுள்ளது போன்ற விவரங்களை யும் அந்த கூட்டத்தில் பேசியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.


ஆனால் கோப்புகளில் கையெழுத் திட்டேன் என்று முதல்அமைச்சர் பேசியதில் இருந்தே அந்த கோப்புகள் வழக்கமான கோப்புகள்தான் என்பதும், எந்தவொரு முக்கிய திட்டங்கள் சார்ந்த கோப்புகளும் அல்ல என்பதும் பட்ட வர்த்தனமாகத் தெரிகிறது.

முதல்அமைச்சருக்கு வரும் வழக்க மான கோப்புகளில் கையெழுத்துப் போட்டதை எல்லாம் கணக்குப்போட்டு ஏதோ புதிய நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கும், புதிய போக்குவரத்து திட்டங்களுக்கும், புதிய மெகா கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கும் கோப்புகளில் கையெழுத்திட்டிருப்பது போன்ற பொய் தோற்றத்தை உருவாக்கி, முடங் கிக் கிடக்கும் அரசு நிர்வாக இமேஜை செயற்கையாக தூக்கி நிறுத்தும் நோக் கோடு முதல்அமைச்சர் பேசியிருப்பது வெறும் விளம்பரத்திற்கு உதவுமே தவிர ஆக்கபூர்வமான அரசு நிர்வாக செயல்பாட்டிற்கு நிச்சயம் உதவாது என்பதை முதல்அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.

நீட் தேர்வு மாணவர்கள் பாதிப்பு

நீட் தேர்வில் லட்சக்கணக்கான மாண வர்கள் என்ன செய்வது என்றே தெரி யாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாணவர்களுக்கு மத்திய அரசை வலியுறுத்தி ஒரு தீர்வுகாண முடிய வில்லை. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்கு மனிதாபிமான அடிப்படையில் கூட உதவுவதற்கு ஒரு கையெழுத்துப் போட முடியவில்லை. ஒரு துறை மட்டுமல்ல, அரசின் அனைத்து துறைகளும் நிர்வாக ரீதியாக முடங்கிக் கிடக்கின்றன. ஊழல் அணிகளை இணைத்துக் கொள்வதற்கும் அதற்கு பேட்டியளிக்கவும் மட்டுமே தங்கள் பதவிகளை அமைச்சர்கள் பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மருத்துவக் கல்லூரி திறக்காமல்

தன் தொகுதியில் அறிவித்த மருத் துவக் கல்லூரியை இதுவரை துவக்க வில்லை என்று ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரான செந்தில் பாலாஜியே பட்டினிப் போராட்டம் நடத்தப் போவ தாக அறிவித்திருக்கிறார்.

தன் கட்சியிலேயே இருக்கும் எம்.எல்.ஏ.வின் மக்கள் பிரச்சினைக்காகக் கூட ஒரு கையெழுத்தைப் போட முடியாத முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 1,570 கோப்புகளில் கையெழுத்துப் போட்டிருக்கிறேன் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.

கணக்கு காட்டாமல்

ஆகவே, வழக்கமான கோப்புகளின் கையெழுத்துக்களை கணக்கு காட்டா மல் திட்டங்களை நிறைவேற்றுவ தற்காக, வேலை இல்லாத் திண்டாட்டங் களை தீர்ப்பதற்காக, தாய்மார்களின் மதுக்கடைகள் மூடும் கோரிக்கையை நிறைவேற்ற எத்தனை கோப்புகளில் முதல்அமைச்சர் கையெழுத்துப் போட் டிருக்கிறார் என்ற விவரங்களை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறேன். இன்றைக்கு அ.தி.மு.க. ஆட்சி யில் தமிழக அரசு நிர்வாகம் முழுவதும் நிலை குலைந்து விட்டது.

இதையெல்லாம் விட்டு விட்டு ஏதோ 2 மாதங்களுக்கு மேலாக 1,570 கோப்புகளில் கையெழுத்திட்டேன் என்று கூறி, தமிழக மக்களை ஏமாற்ற வேண் டாம் என்றும், அ.தி.மு.க. அரசின் நிர் வாக சீர்கேட்டை மிகப்பெரிய கம்பளம் விரித்து மறைக்க வேண்டாம் என்றும் முதல்அமைச்சரை கேட்டுக் கொள் கிறேன்.

சட்டமன்ற கூட்டத்தை கூட்டாமல்...

நிதிநிலை தாக்கல் செய்யப்பட்டு இரு மாதங்கள் நெருங்கப்போகும் வேளையில் கூட துறை சார்ந்த மானியக் கோரிக்கைகளை விவாதிக்க சட்டமன் றத்தின் கூட்டத்தை கூட்டாத முதல் அமைச்சர் தமிழக அரசு நிர்வாகம் தொய்வின்றி நடக்கிறது என்று கூறியிருப்பதை இந்த வருடத்தின் மிகப் பெரிய நகைச்சுவையாகவே நான் கருதுகிறேன்.

அழுகிப் போன அரசு

ஆகவே, அ.தி.மு.க. ஆட்சியில் அழுகிப்போன அரசு நிர்வாகத்தை இது போன்ற பகட்டான பேச்சுகள் மூலம் மறைக்க முயலாமல், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும், மக்கள் குறை தீர்க்கும் கோரிக்கைகளையும் நிறை வேற்ற முதல்அமைச்சர் தனது கையெ ழுத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள் கிறேன்.  இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner