எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காலில் விழுவதைத் தவிர்த்ததற்காக பெருமகிழ்ச்சி அடைகிறேன்
திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை, ஜன.10 தன் வேண்டுகோளை ஏற்று காலில் விழுவதைத் தவிர்த்ததற்காக திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு:

உயிரினும் மேலான தலைவர் கலை ஞரின் உடன்பிறப்புகளே, உங்களில் ஒருவன் எழுதும் நன்றி மடல். கழகத்தின் செயல்தலைவராகப் பொறுப்பேற்ற நாள்முதல் தினந்தோறும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

அரசியல் கொள்கைகளுக்கு அப் பாற்பட்டு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் அவற்றின் முன்னணி நிர்வாகிகளும் நேரிலும் அலைபேசி யிலும் வாழ்த்துகள் தெரிவித்தது, தனிப் பட்ட எனக்குரிய வாழ்த்தாக மட்டுமல் லாமல், தமிழர்களின் பண்பாட்டுக்கு, சிறப்பு சேர்க்கும் பெருமையாகவே கருதுகிறேன். அருகிவரும் பண்பாட்டை மீட்டெடுத்து நாளும் பெருகிவரும் வகையில் வெளிப்பட்ட இத்தகைய அன்பான வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்வ துடன், அரசியல் மாச்சரியங்களைக் கடந்த நட்பும் நல்லுறவும் என்றென்றும் தொடரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆரோக்கியமான அரசியலை முன் னெடுப்பதில் மற்றவர்களுடன் இணைந் தும், தமிழகத்தின் பொதுநலன் சார்ந்த பிரச்சினைகளில் ஒருங்கிணைந்தும் செய லாற்றுவதற்கு இத்தகைய வாழ்த்துகள் வலிமையாகத் துணை நிற்கும் என்றும் நம்புகிறேன்.

அதுபோலவே அறிஞர் பெருமக்கள், கவிஞர்கள், சான்றோர்கள், ஊடகத்துறையினர், சமூக நல அமைப் புகளைச் சார்ந்தவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என நாட்டு நலனில் அக்கறை கொண்ட பலரும் உள்ளார்ந்த அன்புடன் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கி, அவர்களின் நம்பிக்கையை நிலைநாட்டி மேலும் வளர்ந்தோங்கும் வண்ணம் செயல்பட உறுதியேற்கிறேன்.

எந்தளவுக்கு வாழ்த்துகள் குவிகின் றனவோ அந்தளவுக்கு பொறுப்புகளும், பணிகளும் நிறைந்திருக்கின்றன என் பதை உணர்கிறேன். எந்த நம்பிக்கை யுடன் அனைவரும் வாழ்த்துகிறார்களோ அந்த நம்பிக்கை நிறைவேறும் வகை யில் பணியினை மேலும் செம்மைப் படுத்தும் சீரிய தருணமாக இது அமைந் துள்ளது.

கழகத் தொண்டர்களின் சங்கிலித் தொடர் போன்ற வருகையும், வாழ்த் தொலியும் நெஞ்சத்தில் தேனாகப் பாய்கிறது. நாம் காண்கிற களங்களுக்கும் அதில் நாளைப் பெறப் போகிற வெற்றி களுக்கும் இன்று கிடைக்கும் ஊக்கமிகு வாழ்த்தொலியாகவே உங்களின் அன்பைக் கருதுகிறேன். போர்க்களம் செல்லும் வீரர்களுக்கு அவர்களின் இல் லத்தாரும், ஊர்மக்களும் மாலையிட்டு,

வெற்றித்திலகமிட்டு, பறைகொட்டி வாழ்த் துச் சொன்ன வரலாற்றை புறநானூறு போன்ற தமிழ் இலக்கியங்கள் சுட்டிக் காட்டுகின்றன. தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய ‘சங்கத் தமிழ்’ நூலில் இவற்றை அழகுமிகு சொற்களால் கவிதையாக வடித்திருக்கிறார்.

பண்டைத்தமிழர் பாரம்பரியத்தை ஒட்டி ஊக்கம் தரும் வாழ்த்துகளை வழங்கும் உடன்பிறப்புகள் ஆர்வ மிகு தியால், என் காலில் விழுவதைத் தவிர்த்து, கழகத்தின் சுயமரியாதைக் கொள்கையைக் காப்பாற்ற வேண்டும் என நான் விடுத்த அன்பு வேண்டு கோளை ஏற்றுக் கொண்டதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் வாழ்த் துகளுக்கும் எனது வேண்டுகோளை ஏற்று, கழகக் கட்டுப்பாட்டைக் காப் பாற்றியமைக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் அனைத்துத் துறை களிலும் வீழ்ச்சியும், முடக்கமும் தொடர் கின்ற இன்றைய நிலையில், சென்ற முறை ஏமாந்து போன தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு நம் பக்கம் திரும்பியுள்ளது. தமிழகத்தை மீட்டு முன்னேற்றப் பாதை யில் செலுத்துவதற்கான பணிகளை, நாம் சிரம் மேல் தாங்கி விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள்; வேண்டுகோள் விடுக்கிறார்கள். அவர்களின் நம்பிக் கைக்குரியவர்களாக நமது செயல் பாடுகள் தொடர வேண்டும்.

எதையும் ஜனநாயக பூர்வமாக செயல்படுத்தக் கூடிய கழகம், மக்களின் எதிர்பார்ப்புகளையும் விரைந்து நிறை வேற்றும் வகையில் தொடர்ந்து செயல் படும். களத்தில் விளையவிருக்கும் செயல் பாடுகளுக்கு உரமாகின்றன உங்களின் வாழ்த்துகள்.
இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்து இயக்கப் பணிகளைத் தொடர்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner