எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மார்ச் 14- ஏழைகளின் உடலை வைத்து சிறப்புமருத்துவம் பயிலும் அரசு மருத்துவர்கள், தங்களின் சொகுசு வாழ்க்கைக்காக தனியார் மருத்துவ மனைகளில் பணியாற்றுவது சட்ட விரோதம் என உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், அரசு மருத்துவர்களின் வரு கையை கண்காணிக்க குழு அமைக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி அரசுபொது மருத்துவமனையில் பணிபுரிந்த மருத் துவர் சிலம்பன் என்பவர்கடந்த 2010-ஆம் ஆண்டு தனது பெற்றோரை பராம ரிக்க வேண்டியுள்ளதாகக்கூறி டீனுக்கு பதவி விலகல் கடிதம் அனுப்பினார். அவரது பதவி விலகல் கடிதத்தை டீன் ஏற்கவில்லை. அதன்பிறகு கடந்த 2011 மார்ச் முதல் மருத்துவர் சிலம்பன் பணிக்கு செல்லவில்லை. இதுதொடர் பாக அவருக்கு தாக்கீது பிறப்பிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2010ஆ-ம் ஆண்டு தான் அளித்த பதவி விலகல் கடிதத்தை ஏற்று தன்னை பணியில் இருந்து விடுவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மருத்துவர் சிலம் பன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

மனுதாரரான மருத்துவர் சிலம்பன், கடந்த 2011 முதல் பணிக்கு செல்ல வில்லை. தற்போது 2010ஆம் ஆண்டே பதவி விலகல் கடிதம் கொடுத்துவிட் டேன். அதை ஏற்றுக்கொண்டு தன்னை பணியில் இருந்துவிடுவிக்க வேண்டும் என கோரியுள்ளார்.

ஆனால் அதுபோல எந்தவொரு பதவி விலகல் கடிதத்தையும் மனு தாரான மருத்துவர் சிலம்பன், டீனுக்கு அனுப்பவில்லை எனவும், 2011-ஆம் ஆண்டு மருத்துவ விடுப்பில் சென்றவர் இதுவரை பணிக்கு வரவில்லை என வும் அரசு கூடுதல் தலைமை வழக்குரை ஞர் நர்மதா சம்பத் தனது வாதத்தின் போது தெரிவித்துள்ளார். எனவே, மருத் துவர் சிலம்பன் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கையை சுகாதாரத் துறை செயலர் எடுக்க வேண்டும்.

மேலும், பொதுமக்களின் வரிப் பணத்தில் ஏழைகளின் உடலை வைத்து சிறப்பு மருத்துவம் பயின்று, அதன் மூலம் நிபுணத்துவம் பெறும் அரசு மருத்துவர்கள், அதன்பிறகு தங்களின் சொகுசு வாழ்க்கைக்காக தனியார் மருத் துவமனைகளிலும், வெளிநாடுகளிலும் பணியாற்றுவது என்பது சட்டவிரோத மானது. தங்களின் அனுபவத்துக்காகவும், நிபுணத்துவத்துக்காகவும் மட்டுமே அரசு மருத்துவர்கள் அரசு மருத்துவ மனைகளையும், மருத்துவக் கல்லூரி களையும் பயன்படுத்திக் கொள்கின்ற னர்.

தங்களின் மருத்துவ நிபுணத்துவத்தை ஏழை மக்களுக்காக பயன்படுத்தி சேவை யாற்ற வேண்டும்.

ஏழை, நடுத்தர மக்கள் தனியார் மருத்துவமனைகளை அணுகி மருத்து வம் பார்ப்பது என்பது இயலாத ஒன்று.

அரசு மருத்துவமனைகளில் பல மருத்துவர்கள் முறையாக பணிக்கு வராமல் மருத்துவ விடுப்பில் சென்று விடுகின்றனர்.

எனவே அரசு மருத்துவர்களின் வருகை, அவர்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிட கண்காணிப்புக் குழுவை அமைக்கதமிழக அரசும், சுகா தாரத்துறை செயலரும் உரிய நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசு செலவில் பணி அனுபவம் மற் றும் சிறப்பு நிபுணத்துவம் பெற்று விட்டு, மருத்துவ ஒழுங்கு விதிகளை மீறி செயல்படும் மருத்துவர்களிடம் உரிய இழப்பீட்டுத் தொகையை அரசு வசூலிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner