எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை, மார்ச் 5 அனைத்து வாகனங்களின் முகப்பு விளக்குகளில் 2 வாரங்களுக்குள் கருப்பு வில்லை ஒட்ட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு  மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி யுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதி மன்றம் இவ்வாறு உத்தரவிட்டு உள்ளது. அவரது மனு விவரம்:

நெடுஞ்சாலைகளில் செல்லக் கூடிய கனரக வாகனங் களில், அதிகம் ஒளிரக்கூடிய முகப்பு விளக்குகள் பொருத்தப் படுகின்றன. வாகனங்களில் முகப்பு விளக்குகளைப் பயன் படுத்த கடுமையான நெறி முறைகள் இருக்கும்போதும் அதிகம் ஒளிரக்கூடிய விளக்கு களைப் பயன்படுத்துவதால்  ஏராளமான விபத்துகள் ஏற்படு கின்றன.

மிகவும் பிரகாசமான முகப்பு விளக்குகள் பொருத்தப்படுவ தால்,  ஒரு வாகனத்தை முந்திச் செல்ல முயல்வதும், எதிர்திசை யில் வரும் வாகனத்தின் தூரத் தைக் கணிப்பதும் பெரும் சிக் கலாக இருக்கிறது. இரவு 10 முதல் காலை 6 மணிக்கு இடையே நிகழக்கூடிய விபத் துகளில் பெரும்பாலானவை கண்கூசும் ஒளியை உமிழக் கூடிய முகப்பு விளக்குகளைக் கொண்ட வாகனங்களால் ஏற்படுகிறது. ஒரே வாகனத்தில் 6 முகப்பு விளக்குகள் கூட பொருத்துகின்றனர்.

அனைத்து மோட்டார் வாகனங்களின் முகப்பு விளக் குகளின் மய்யப் பகுதியில் கருப்புநிற வில்லைகள் ஒட்டப் பட வேண்டும் என்பது விதி. இதைப் பின்பற்றினால் எதிர் திசையில் வரும் வாகன ஓட்டு நர்களுக்கு சிரமம் ஏற்படாது. ஆனால், பெரும்பாலானோர் தங்களது வாகனத்தின் முகப்பு விளக்கில் இருக்கும் கருப்பு வில்லைகளை அகற்றிவிடு கின்றனர். அதேபோல, இருசக் கர வாகனங்களில் பக்கவாட்டு கண்ணாடிகளை எடுத்துவிட்டு ஓட்டுகின்றனர். இத்தகைய வாகன ஓட்டுநர்களுக்கு அப ராதம் விதிக்கும் நடைமுறையை கடுமையாக அமல்படுத்த உத் தரவிட வேண்டும்.

மேலும், முகப்பு விளக்கு களின் மய்யப் பகுதியில் கருப்பு வில்லை நிரந்தரமாக இருக்கும் வகையில் வடிவ மைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, அனைத்து வாகனங்களின் முகப்பு விளக் குகளிலும் 2 வாரங்களில்  கருப்பு வில்லை ஒட்ட வேண் டும். இதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண் டும். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

முகப்பு விளக்குகளின் மய் யப் பகுதியில் கருப்பு வில்லை ஒட்டத் தவறும்பட்சத்தில் வாக னத்தை பறிமுதல் செய்யலாமே என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner