எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, பிப்.9 சென்னை மீனம்பாக்கம் விமான நிலை யம் முதல் கிளாம்பாக்கம் மெட்ரோ பேருந்துப் பணி மனை வரை மெட்ரோ ரயில் திட்ட வழித் தடத்தை நீட்டிப் பதற்கான திட்ட சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட உள்ளன.

இது குறித்து நிதிநிலை அறிக்கையில்  கூறியிருப்ப தாவது:

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தில் 45.01 கி.மீ. நீளமுள்ள இரண்டு வழித்தடங்கள் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் முதல் மக்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக வரவுள்ளன. திரு வொற்றியூர் மற்றும் விம்கோ நகர் வரையிலான 9 கி.மீ. நீளமுள்ள முதல் கட்டத்தின் நீட்டிப்புப் பணிகள் முடி வடைந்து, 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.

2018 - -2019 ஆம் ஆண்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ரூ.1,950 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கெ னவே அறிவித்தப்படி, மீனம் பாக்கம் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் மெட்ரோ பேருந்துப் பணிமனை வரை மெட்ரோ ரயில் திட்ட வழித் தடம் நீட்டிப்பதற்கான சாத் தியக்கூறுகள் ஆய்வு செய் யப்பட்டு வருகின்றன.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 118.90 கி.மீ.  நீளமுள்ள மூன்று மெட்ரோ ரயில் வழித்தடங்களில் திட் டப்பணிகள் மேற்கொள்ளப்பட வுள்ளன.

மாதவரம் முதல் சோழிங்க நல்லூர் வரையிலும், மாதவரம் முதல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வரையிலுமான 52.01 கி.மீ. நீளமுள்ள வழித்தடங்களில் இத்திட்டத் தைச் செயல்படுத்த ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முக மை ரூ.20,196 கோடி நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கு மாநில அரசும் ரூ.40,941 கோடி மொத்த மதிப்பீட்டில் இத்திட்டப் பணி களை மேற்கொள்ள நிர்வாக அனுமதி அளித்துள்ளது. இத் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்பட வுள்ளன.

மற்ற வழித்தடங்களுக்கான நிதி ஆதாரங்களைத் திரட்டும் பணிகள் நடைபெற்று வரு கின்றன.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட் டத்தை செயல்படுத்துவதன் மூலம் சென்னைப் பெருநகரப் பகுதிகளில் மெட்ரோ ரயிலின் சேவைப்பகுதி 172.91 கிலோ மீட்டராக அதிகரித்து, பொதுப் போக்குவரத்தில் மெட்ரோ ரயிலின் பங்கு கணிசமாக அதிகரிக்கும்.

2019 - -2020-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடு களில்  மெட்ரோ ரயில் திட்டத் துக்கான பங்கு மூலதனம் மற் றும் கடனாக மொத்தம் ரூ.2,681 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner