எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, பிப்.8 தமிழக சட்ட மன்றத் தில் இன்று 2019-2020ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இன்று (8.2.2019) காலை 10 மணிக்கு தமிழக சட்டப் பேரவை கூட்டம் கூடியதும், பேரவைத் தலைவர் ப. தனபால் அவர்கள், பேரவைக்கு 2019-2020ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை துணை முதல மைச்சரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் அளிப்பார் என அறிவித்தார். இதையடுத்து நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் 98 பக்கம் கொண்ட வரவு - செலவுத் திட்டத்தை பேரவைக்கு அளித்து உரையாற்றினார்.

நிதி நிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

*2018 - 2019ஆம் ஆண்டு திருத்த மதிப்பீட்டில் கணிக்கப்பட்ட வருவாய்ப் பற்றாக்குறை 19,319 கோடி ரூபாயிலிருந்து 2019-2020 ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை 14,315 கோடி ரூபாயாகக் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

*மதுரை மாவட்டத்தில் உள்ள திரு மங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு, திருமங்கலம், கள்ளிக்குடி மற்றும் திருப்பரங் குன்றம் ஆகிய மூன்று வட்டங்களை உள்ளடக்கிய புதிய வருவாய்க்கோட்டம் ஒன்று 2019-2020ஆம் ஆண்டில் உருவாக் கப்படும்.

*2019-2020 ஆம் ஆண்டில் 1,361 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேலும் இரண்டு இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப் படும். சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட் டுகளை அமைப்பதற்காக விவசாயிகளுக்கு அரசு 90 சதவீதம் மானியம் அளிக்கிறது. 2019-2020 ஆம் ஆண்டில் 84,09 கோடி ரூபாய் மானிய உதவியுடன், 10 குதிரை திறன் வரை உள்ள சூரிய சக்தியால் இயங்கும் 2,000 பம்பு செட்டுகளை விவசாயிகளுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

*இயற்கை வேளாண்மையை மேம் படுத்துவதற்கு, மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இயற்கை வேளாண்மை சான்று அளிக்கும் மய்யங்கள் அமைக்கப்படும்

*2019-2020 ஆம் ஆண்டில், 10,000 கோடி ரூபாய் அளவிற்கு பயிர்க்கடன் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பயிர்க் கடன்கள் மீதான வட்டித்தள்ளுபடிக் காக 200 கோடி ரூபாய், வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*420 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் வெள்ளப்பள்ளம், தரங்கம்பாடி மற்றும் திருவொற்றியூர் குப்பம் ஆகிய இடங்களில் மீன்பிடி துறைமுகங்களைக் கட்டுவதற்கும் இந்த அரசு அனுமதி அளித்துள்ளதுடன், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீரோடி, மார்த்தாண்டத்துறை மற்றும் வில்ல விளை ஆகிய இடங்களில் கடலரிப்புத் தடுப்பான்களை 116 கோடி ரூபாய் செலவில் அமைப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

*வரும் ஆண்டில் 80 ஆழ்கடல் மீன்பிடி படகுக் குழுக்களுக்கு 240 நேவிக் தகவல் பெறும் கருவிகள், 160 அய்சாட்-2 செயற்கைக்கோள் தொலைபேசிகள் மற்றும் 160 நேவ்டெக்ஸ் கருவிகளையும் அரசு வழங்கும்.

*சென்னை மற்றும் அதனைச் சுற்றி யுள்ள பகுதிகளில், ஆற்றங்கரையோரம் வசித்துவரும் ஏழைக்குடும்பங்களுக்கு மிகச்சிறந்த மறுகுடியமர்த்தும் நடைமுறை களைப் பின்பற்றி, உலக வங்கி உதவியுடன் 4,647.50 கோடி ரூபாய் செலவில், 38,000 குடியிருப்புகளை அமைப்பதற்காக நகர்ப் புற ஏழை மக்களுக்கான தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம்' செயல்படுத்தப்படும்.

*அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இடைநிற்றலைக் குறைப்பதற்கு, பத்து, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவியருக்கும் 5,000 ரூபாயை சிறப்பு ஊக்கத்தொகையாக இந்த அரசு தொடர்ந்து வழங்கும்.

*குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தினை, இந்த அரசு முழுஉத்வேகத்துடன் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் தொடங்கப் பட்ட நாள் முதல் இன்று வரை 4.19 இலட்சம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்திற்காக 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 248.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*2019-2020 ஆம் ஆண்டில் இராமேசு வரத்தில் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் பெயரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும்.

*முதல் தலைமுறை பட்டதாரி மாணவ, மாணவியருக்கு கல்விக் கட்டணத்தைத் திரும்ப வழங்கும் திட்த்திற்காக 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 460.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*மாநிலத்தின் முதன்மையான பல் கலைக்கழகமான அண்ணா பல்கலைக் கழகத்திலும்,தொழில்நுட்பக் கல்வி ஆணையரின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளிலும் சர்வதேசத் தரத்தில் கற்பித் தலுக்குத் தேவைப்படும் உபகரணங்கள் உள்ளிட்ட அதன் உட்கட்டமைப்பு வசதிக ளை மேம்படுத்துவதற்காக, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 100 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.

*ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் (KfW) கடனுதவியுடன், 5,890 கோடி ரூபாய் செல வில் 12,000 புதியBS-VI தரத்திலான பேருந்து களையும், 2,000 மின்சார பேருந்துகளையும் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் முதல் கட்டத்தில் 500 மின்சாரப் பேருந் துகளை சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களிலும் 2,000 BS-VI பேருந்துகளை மாநிலம் முழுவதும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

*மத்திய அரசு தற்போது அறிவித் துள்ள ஓய்வூதியத்திட்டத்தின் பயனை அமைப்பு சாரா தொழிலாளர் பெறும் வகை யில் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

*ஒரு சிறப்பான முன்முயற்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அய்ந்து மாவட்டத் தலைமையிடங்களில், வேலைவாய்ப்பற்ற பொறியியல் பட்டதாரிகளுக்கு உயர்நிலை தொழில்நுட்பத்திறன் பயிற்சியை அளிப்ப தற்கான பயிற்சி மய்யங்கள் அரசு - தனியார் பங்களிப்பு முயற்சியில் இந்த அரசால் வரும் நிதியாண்டில் ஏற்படுத்தப்படும். இதன் மூலம், வளர்ந்து வரும் தொழில்நுட்பப் பிரிவுகளில் உள்ள சிறப்பு தகுதித்திறன் தேவைப்படும் பணியிடங்களில், ஆண்டு தோறும் 10,000 வேலையில்லா பொறியியல் பட்டதாரிகள் பயிற்சி பெற்று வேலை வாய்ப்பைப் பெறுவார்கள்.

*புதிய தொழில் நிறுவனங்களுக்கான நிலத்தேவைகள் அதிகரித்திருப்பதைக் கருத்தில் கொண்டு, திருமுடி வாக்கம் மற்றும் ஆலத்தூர் தொழிற் பேட்டைகள் மேலும் விரிவுபடுத்தப்படும்.

*மாற்றுத் திறனாளிகளுக்கு தற்போதைய தேவையைக் கருத்தில் கொண்டு 2019-2020 ஆம் ஆண்டிற்கு இதற்கான ஒதுக்கீடு உயர்த்தப்பட்டு 3,000 சிறப்பு சக்கர நாற்காலிகளும் 3,000 பெட்ரோல் ஸ்கூட்டர் களும் வழங்கப்படும்.

*2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் வரு வாய்ப் பற்றாக்குறை 14,314.76 கோடி ரூபா யாகவும், நிதிப்பற்றாக்குறை 44,176.36 கோடி ரூபாயாகவும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது. 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில், மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப் பற்றாக்குறை யின் விகிதம் 2.56 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நிதிப்பற்றாக்குறை வரம்பான மூன்று சதவீதத்திற்குள்ளாகவே இருக்கும். வரும் காலங்களில், மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப்பற்றாக்குறையின் விகிதம் 2020-2021 ஆம் ஆண்டில் 2.39 சதவீத மாகவும், 2021-2022 ஆம் ஆண்டில் 2.25 சதவீதமாகவும் இருக்கும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner