எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜன.10 நலிவுற்ற கலைஞர்களுக்கு மாதந்தோறும் அளிக்கப்படும் நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ், 500 நலி வுற்ற கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயி ரம் நிதியுதவி பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கலைஞர்கள் 58 வயது நிறைவடைந்தும், ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பப் படிவங்களை மண்டல கலைப் பண்பாட்டு மய்யத்தில் பெற்று சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், கோட்டாட்சியர் பரிந்துரைகளுடன் மீண்டும் பண்பாட்டு மய்யத் திலேயே சமர்ப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner