எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, டிச.6  காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தமிழகத்துக்கும், கருநாடகத்துக் கும் இடையே ஏற்கெனவே பிரச்சினை இருந்து வருகிறது.

இந்தநிலையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட கருநாடக அரசு சார்பில் தாக்கல் செய்த சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் கடந்த 22-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.

மேலும் இதற்காக விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் படியும் கருநாடக அரசின் நீர்ப் பாசனத்துறைக்கு மத்திய நீர்வள ஆணையம் உத்தரவிட்டது.

இந்தநிலையில் மேகதாது பகுதியில் புதிய அணைக் கட்டுவது தொடர்பான கருநாடக அரசின் சாத்தியக்கூறு அறிக் கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிராக தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத் தில் கடந்த வாரம் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- மேகதாது பகுதியில் கருநாடக அரசு புதிய அணை கட்டுவதற்கு, டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு பல ஆண்டுகளாக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் திட்ட மதிப்பீட்டு இயக்குநரகம், கருநாடக அரசின் சாத்தியக்கூறு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து செயல் திட்ட வரைவு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கூறி உள்ளது.

இது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முற்றிலும் எதிரானதாகும். எனவே, மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான செயல் திட்ட வரைவு அறிக் கையை கருநாடக அரசு தயாரிக்க, மத்திய நீர்வளத்துறை ஆணையம் அளித் துள்ள ஒப்புதலுக்கு தடை விதிக்க வேண்டும். அத்துடன் இது தொடர் பாக மத்திய நீர் வளத்துறை ஆணையம் நவம்பர் 22-ஆம் தேதி வெளியிட்ட உத் தரவையும்  திரும் பப் பெற்றுக் கொள்ள ஆணை பிறப்பிக்க வேண்டும். புதிய அணை கட்டுவதற்கான செயல் திட்ட வரைவு அறிக்கையை கரு நாடக அரசு தயாரிப்பதற்கும் தடை விதிக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, மேகதாது பகுதியில் புதிய அணை கட்டு வதற்கான செயல்திட்ட வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய நீர்வளத்துறை ஆணையம் ஒப்புதல் அளித்ததை எதிர்த்து, தமிழக அரசு நேற்று மத்திய அரசு மீதும், கருநாடக அரசு மீதும் உச்சநீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு, கருநாடகம், புதுச் சேரி, கேரளா ஆகிய மாநிலங் களுக்கு இடையேயான காவிரி நீர் பங்கீடு குறித்து கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி உச்சநீதி மன்றம் பிறப்பித்த உத்தரவை முற்றிலும் மீறும் வகையில் கருநாடக அரசு மேகதாது பகுதி யில் புதிய அணை கட்டுவது தொடர்பான திட்டத்தை முன் வைத்து உள்ளது. கருநாடக அரசின் இந்த நடவடிக் கையால் தமிழ்நாட்டில் டெல்டா பகுதி யில் உள்ள விவசாயிகளின் வாழ்வா தாரம் கடுமையாக பாதிக் கப்படும்.

மேகதாது திட்டம் தொடர்பாக கருநாடக அரசு தாக்கல் செய்த சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை ஆணையம் அளித்த ஒப்புதல் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முற்றிலும் எதிராக அமைந்து இருக்கிறது. இந்த விவகாரத்தில் எதிர்மனுதாரர்கள் 5 பேரும் உச்ச நீதிமன்றம் வழங் கிய தீர்ப்பை அவமதிக்கும் வகையில் தமிழகத் துக்கு எதிராக நடவடிக்கை எடுத்து இருக்கி றார்கள்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் முடிவுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியது மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசின் கடமையாகும். காவிரி படுகையில் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள பகுதிக்கு பாதிப்பு நேரும் வகையில் எந்தவிதமான நடவடிக் கையிலும் மேல்படு கையில் உள்ள கருநாடகம் ஈடு படக்கூடாது என்று காவிரி நடுவர் மன்றம் தெளிவாக வ¬ ரயறுத்து உள்ளது.

கருநாடக மாநிலத்துக்கு தேவையான தண்ணீரை தேக்கி வைக்கும் அளவில் ஏற்கனவே ஏற்பாடுகள் உள்ளன. இந்த நிலையில் அவர்கள் புதிய நீர்த் தேக்கம் எதையும் கட்டுவதற்கான அவசியம் தற்போது இல்லை.

எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் மேகதாது திட்டத்துக்கான வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ள மத்திய நீர் வளத்துறை ஆணையத்தின் திட்ட மதிப்பீட்டு இயக்குனர், மத்திய நீர்வளத்துறை ஆணை யத்தின் தலைவர் உள்ளிட்ட 5 பேரையும் நீதிமன்றத்திற்கு அழைத்து, அவர்கள் மீது நீதி மன்ற அவ மதிப்புக்கான நட வடிக்கை எடுக்க வேண்டும். கடந்த நவம்பர் 22-ஆம் தேதியன்று மத்திய நீர்வளத்துறை ஆணையம் மேகதாது திட்டத்துக் கான சாத்தியக் கூறு அறிக்கைக்கு அளித்த ஒப்புதல் மற்றும் செயல் திட்ட வரைவு அறிக்கையை தாக்கல் செய்வதற்கு அனுமதி வழங்கும் உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

தமிழக அரசின் இந்த மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வழக்குரைஞர் ஜி.உமா பதி தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய், நீதிபதிகள் சஞ்ஜய் கிஷண் கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஆஜராகி, கருநாடக அரசு மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான செயல் திட்ட வரைவு அறிக்கையை தயாரிக்க கடந்த 22-ஆம் தேதி மத்திய அரசு அளித்துள்ள ஒப்புத லுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதி பதிகள், இந்த மனு அடுத்த வாரம் உரிய அமர்வில் விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner