எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, டிச.5 சென்னை-சேலம் பசுமைவழிச் சாலைத் திட்டம் தொடர்பாக தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அறிவிப் பாணை குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை-சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிராக, பாதிக்கப்பட்ட நில உரிமை யாளர்கள், விவசாயிகள், தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த திட்டத்துக்காக நிலங்களை கையகப்படுத்தக் கூடாது எனவும், நிலங்களில் இருந்து நிலத்தின் உரிமை யாளர்களை வெளியேற்றக்கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசா ரணைக்கு வந்தது. காணொலிக் காட்சி மூலம் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், உயர்நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி, இந்த திட்டத்துக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 60 கிலோமீட்டர் தொலைவுக்கு 1125 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை கையகப்படுத்த நெடுஞ்சாலைத் துறை ஆணையம் புதிதாக அறிவிப்பாணை வெளியிட்டுள்ள தாகக் குற்றம்சாட்டப்பட்டது.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்தி கேயன், எட்டு வழிச்சாலைத் திட்டத்துக் காக ஏற்கெனவே பிறப்பிக்கப் பட்ட அறிவிப்பாணைக்கும், தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அறிவிப்பாணைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. புதிய அறிவிப்பாணை எட்டு வழிச்சாலைத் திட்டத்தின் நீட்சியாகவே பிறப் பிக்கப்பட்டுள்ளது. இந்த விவ காரத்தில் எந்தச் சூழலிலும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்படவில்லை என்றார்.

அப்போது நீதிபதிகள், ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையில் மாற்றம் செய்து தற்போது புதிதாக அறிவிப்பாணை வெளியிடப்பட்டதா என கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதிகள், இந்த அறிவிப்பாணை குறித்து விளக் கம் அளிப்பதுடன், அந்த அறிவிப்பாணையின் தாக்கம் தொடர் பாக மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் சென்னை- சேலம் பசுமைவழிச் சாலைத் திட்டத்துக் காக நிலங்களைக் கையகப் படுத்தும் போது விவசாயிகள் துன்புறுத்தப்பட்டது குறித்து சிபிசிஅய்டி காவல்துறையினர் விசா ரணை மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கையை 2019 ஜனவரி 25-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட் டுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner