எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப்.29- நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலையாக மாற்றாமல் திறந்த டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை மூட 2016 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்டு சண்டிகர் மாநிலம் தொடர்ந்த வழக்கில், மாநிலநெடுஞ்சாலைகளை நகராட்சி சாலைகளாக மாற்றி முறையாக அறிவிப்பு வெளியிட்டு மதுபானக் கடைகளை திறக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றி அறிவிப்பு வெளியிடாமல் 1700 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை எதிர்த்து வழக்குரைஞர் கே.பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நேற்று (28.4.2018) தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வு, உள்ளாட்சி சாலையாக மாற்றாமல் 1700 கடைகளை திறந்து தமிழக அரசு வெளியிட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றி அறிவிப்பு வெளியிடாமல் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்றும்இந்த உத்தரவு நட்சத்திர விடுதிகளுக்கு பொருந்தாது என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner