எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

குடியாத்தம், ஏப். 22 13.4.2018 அன்று குடியேற்றம் லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளியில் தமிழக விவசாயிகளின் நலன் கருதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மேதகு குடியரசு தலைவர் அவர்களுக்கு அஞ்சலட்டை அனுப்பும் பணி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் வி.சடகோபன்  தலை மையேற்று தமிழக விவசாயி களின் நிலை குறித்தும், மேலாண்மை வாரியம் அமைப் பதினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், தமிழ்நாட்டின் வாழ் வாதாரங்கள் சிதைந்து வருவதை குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இதை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மேதகு குடியரசு தலைவர் அவர்களுக்கு அஞ்சலட்டையில் கோரிக்கை பதித்து அனுப்பினர். இந்நிகழ்ச் சிக்கு பள்ளியின் செயலாளர் எஸ்.ரம்யாகண்ணன், மூத்த முதல்வர் டி.வனரோசா, இரு துறை முதல்வர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner