எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஏப்.5 இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

என் இனிய தமிழ் மக்களே, நம் இனத்தை அழித்தார்கள். நாம் எதுவும் பேசவில்லை. நம் மொழியை சிதைக்கிறார்கள். நாம் மவுனமாக இருக்கிறோம்.நம் உரிமைகள் பறிக்கப்படும்போதும் போராடாமலே இருக்கிறோம். உறைந்து போய் கிடக்கும் நம் முடைய உணர்வுகளை உசுப்பி விட்டு நம்மை புரட்சியாளர்களாய் மாற்ற எத்தனையோ அமைப்புகள் போராடிக் கொண்டிருக்கும் போது அய்.பி.எல். என்னும் பொய் உலகத்திற்கு நம்மை அடிமைப் படுத்தி நம்முடைய தேசிய புரட்சிக்கு தீ வைக்கும் முட்டாள் தனமான விளை யாட்டை நிராகரிப்போம்.

தமிழ் மக்களின் ஒற்றுமை கருக்கூடி வரும்போது கருக் கலைப்பு செய்ய வரும் எந்த வொரு நிகழ்வுக்கும் தடை விதிப் போம். தமிழா, அய்.பி.எல். எனும் கிரிக்கெட்டை நிராகரி. நிறைய வேண்டியது விளை யாட்டு மைதானத்தின் இருக் கைகள் அல்ல. புரட்சியின் மைதானம். தமிழனை விளை யாட்டாக நினைத்து கிரிக்கெட் விளையாட்டை புகுத்தும் மூடர்களே எங்கள் தமிழர்களுக்கு வீர விளையாட்டும் தெரியும் என்பதை நினைவில் வையுங்கள்.

இது எச்சரிக்கை அல்ல. அன்பு சுற்றறிக்கை. உங்கள் அய்.பி.எல். விளையாட்டை விளையாட வேண்டாம் என்று சொல்லவில்லை. கொஞ்சம் ஒத்தி வையுங்கள். மீறி நடந்தால் அது அய்.பி.எல். விளையாட்டாக இருக்காது. மாறாக எங்கள் வீர இளைஞர்கள் ஜல்லிக்கட்டு காளைகளோடு களம் காணு வார்கள் என்பதை தமிழ் இன உணர்வோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்

இவ்வாறு அறிக்கையில் கூறி யுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner