எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திருவிழாவில் தீ மிதித்த பெண் தீயில் கருகினார்

பெங்களூரு அக். 28 பெங்க ளூருவில்கோவில்ஒன்றில் நடைபெற்ற தீமிதித் திரு விழாவின் போது புடவைத் தடுக்கி பெண் ஒருவர் தீயில் விழுந்தார். இவர் ஏற்கெனவே ஒருமுறை தீயில் விழுந்து பலத்த காயமடைந்து குணமாகிய நிலையில் மீண்டும் தீயில் விழுந்துள்ளார்.

இந்தியாவில் மத நடை முறை நம்பிக்கை என்ற பெய ரில் பல்வேறு முட்டாள்தன மான செயல்களை வேண்டுதல் என்ற பெயரில் செய்கின்றனர். சாதாரணமாகச் செய்யும் செயலை கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றும் தந்திரமாக மாற்றியுள்ளனர்.

அவை அலகுக் குத்துதல், தீகங்குகளில் இறங்கி நடப் பது போன்றவையாகும். இந்துத் துவவாதிகளால்  படுகொலை செய்யப்பட்ட நரேந்திர தாபோல்கர் தீமிதி நிகழ்விற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.  புனே அருகில் உள்ள சதாரா என்ற நகரத்தில் உள்ள கோவிலில் நடந்த தீமிதிக்கும் நிகழ்வு ஒன்றைக் கண்டித்தார். அதற்குக் கோவில் தரப்பில் எரியும் தீயில் நடப்பது என்பது கடவுள் அருளால் மட்டுமே நடக்கும் என்று கூறினர். ‘‘மரத்துண்டுகளால் உருவாகும் எரிகங்குகள் மீது அனைவரும் சாதாரணமாக நடக்கமுடியும்; நான் நடந்து காண்பிக்கிறேன், உண்மையில்கடவுள்பக்தி, அருள் என்று நீங்கள் நினைத் தால் மரங்களுக்குப் பதிலாக இரும்புப் பாளங்களை பழுக்கச் சூடாக்கி அதன் மீது நடந்து காட்டுங்கள்'' என்று கூறினார். இதற்குப் பதில் சொல்லாமல் கோவில் நிர்வாகம் அவருக்கு எதிராக மக்களைத் தூண்டி விட்டு சட்டம்--ஒழுங்கு பிரச்சி னையை ஏற்படுத்தியது.

கருநாடக தலைநகர் பெங் களூரு புறநகர் பகுதியில் உள்ள ஒரு கோவில் திருவிழாவில் தீமிதி சடங்கு ஒன்று நடை பெற்றது. அந்த தீமிதி நிகழ்வில் கலந்துகொண்ட பெண் ஒரு வர் திடீரென்று தீகங்குகள் நிறைந்த குழியில் புடவை தடுக்கியதால் கால் இடறி விழுந்துவிட்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள், செருப்பு அணிந்த காலோடு உடனடியாக அந்தப் பெண்ணைக் காப்பாற் றினார்கள். அந்தப் பெண் முகம் மற்றும் கைகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளநிலையில்முத லுதவி செய்யப்பட்டு மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார்.

இது தொடர்பாக அருகில் இருந்தவர்கள் கூறுகையில்,

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இதே தீமிதித் திருவிழாவில்அதே பெண் தீக்காயம் அடைந்துசிகிச்சை பெற்றார்.தற்போதுமீண்டும் தீயில் விழுந்து படுகாயமடைந் துள்ளது வேதனை அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.


சாத் பூஜை விழா: நீரில் மூழ்கி 14 பேர் பலி

பாட்னா, அக்.28 பீகாரில், ‘சாத்’ பூஜை விழாவின் இறுதி நாளில், நீர் நிலைகளில் மூழ்கி, 14 பேர் இறந்தனர்.

சூரியனுக்கு நன்றி தெரி வித்து வழிபாடு செய்யும், ‘சாத்’ பூஜை விழா, பீகார், ஜார்க்கண்ட், உ.பி., உள் ளிட்ட சில மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. நான்கு நாள்கள் நடக்கும் இந்த விழாவில், மூன்றாம் நாளில், சூரியன் மறைவின் போதும், நான்காம் நாளில், சூரிய உத யத்தின் போதும், மக்கள் சிறப்பு வழிபாடு நடத்துவர். அப்போது, நீர் நிலைகளில் நின்று, சூரியனை மக்கள் வழி படுவர்.

பீகாரில், சாத் பூஜை, 24 ஆம் தேதி துவங்கியது. இறுதி நாளான நேற்று அதிகாலை, நீர்நிலைகளில் நின்று, மக்கள் வழிபட்டனர். அப்போது தவறி விழுந்து, 14 பேர் இறந்த தாகக் காவல்துறையினர் தெரி வித்தனர்.



.
 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner