எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழகத்தில், 1.15 கோடி ஏக்கரில், 75 லட்சம் விவசாயிகள் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய் கின்றனர். இவர்களில், 90 சதவீதம் பேர், சிறு குறு விவசாயிகள் தமிழகத்தில், கடும் வறட்சி ஏற்பட்டதால், பயிர்கள் சேதமடைந்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி உள்ளது. இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள், டில்லியில், போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட் டம், 20 நாட்களுக்கு மேலாக நீடிக்கிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும், அவர் களுக்கு ஆதரவு தெரிவித்து வந்தாலும், சிக்கல் இன்னும் தீர்வதாக இல்லை.

கோரிக்கைகள் என்ன?

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன்களை ரத்து செய்யும் அதிகாரம், மத்திய அரசுக்கே உள்ளது. இதன் படி, பல்வேறு வகையில், தமிழக விவசாயிகள், 86 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். வறட்சியால் விவ சாயிகள் பரிதவிக்கும் நிலையில், இந்த கடன்களை முற்றிலும் ரத்து செய்ய வேண் டும் என்பது, விவசாயிகளின் கோரிக்கை

விவசாயக் கடன் ரத்து

ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகள் வங்கிகளுடன் பேசி, ஆந்திரா, 60 ஆயிரம் கோடி ரூபாய்; தெலுங்கானா, 17 ஆயிரம் கோடி ரூபாய், விவசாயக் கடன்களை ரத்து செய்துள்ளன. மேலும் வங்கிகளுக்கு அய்ந்து தவணைகளில் பணத்தை திருப்பி செலுத்துவதாக உறுதி அளித்து, இரண்டு தவணைகளையும் செலுத்தி விட்டன

உத்தர பிரதேச அரசு, விவசாயிகளின், 36 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளு படி செய்துள்ளது. இதன்படி, அம்மாநிலத் தைச் சேர்ந்த 92.5 சதவீத விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம்

தமிழக டெல்டா மாவட்டங்களின் பாசனம் உள்ளிட்ட தேவைகளுக்கு, ஆண்டு தோறும், 193 டி.எம்.சி. காவிரி நீரை, கருநாடகா வழங்க வேண்டும். ஆனால், நீரை தராமல் கருநாடக அரசு முரண்டு பிடிப்பதால், டெல்டா மாவட் டங்களில் சாகுபடி பாதித்து வருகிறது.

அய்ந்து ஆண்டுகளாக, ஜூனில் நடக்க வேண்டிய, குறுவை சாகுபடி நடக்க வில்லை. பெருமளவு நஷ்டம் ஏற்பட்டு, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், இறந் துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக் களை அமைக்காததே இதற்கு காரணம்

தமிழகம் - கருநாடகா இடையே, பல ஆண்டுகளாக நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வு காண அமைக்கப் பட்ட காவிரி நடுவர் மன்றம், 2007இல், இறுதி தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பு, தமிழக அரசின் தொடர் சட்ட போராட்டங்களால், 2013இல், மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

இதன்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை மத்திய அரசு அமைத்திருக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், மத்திய அரசு அமைதி காக்கிறது. மேலும், காவிரி நீர் பிரச்னை களுக்கு தீர்வு காண, புதிய நதிநீர் தீர்ப்பாயம் அமைக்க முயற்சி நடக்கி றது. இதனால், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

விலை நிர்ணயம்

நெல், கரும்பு, கடுகு, மஞ்சள் உள்ளிட்ட, 40 வகையான வேளாண் உற்பத்திபொருட் களுக்கு, மத்திய வேளாண் விளை பொருள் நிர்ணய கமிஷன், விலை நிர்ணயம் செய்து வருகிறது. சாகுபடி செலவை மட்டுமே கருத்தில் கொண்டு, இந்த விலை நிர்ணயம் செய்யப்படுவதால், விவசாயி களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. பல பயிர்களுக்கு உற்பத்தியை பொறுத்தே தரகர்கள், வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்வதால், விவசாயிகளுக்கு நஷ்டம் தொடர்கிறது. இதுவே, அவர்களின் தற் கொலைக்கு காரணம்.

உற்பத்தி பொருட்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய விலை நிர்ணயம் செய்தால், பிரச்சினை ஓரளவு தீரும் பல மாநிலங்களில், 2004ல் கடும் வறட்சி ஏற்பட்டு, விவசாயிகள் தற்கொலை அதி கரித்தது. இதற்கு தீர்வு காண, வேளாண் ஆராய்ச்சியாளர், எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான, ஒன்பது பேர் குழு அமைக்கப்பட்டது.

விவசாய உற்பத்தி பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் விலையை நிர்ணயிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, இக்குழு பரிந்துரைத்தது. இந்த அறிக்கையை, நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் கூட, இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை.

நதிகள் இணைப்புத் திட்டம்

தமிழகத்தில், இயல்பான ஆண்டு மழையளவு, 91.1 செ.மீ, மாநிலத்தில், 34 ஆறுகள் உள்ளன. மொத்த நீர்வள ஆதாரம், 885 டி.எம்.சி. - இதில், கருநாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்கள் வழங்க வேண்டிய, 264 டி.எம்.சி.யும் அடக்கம். மாநிலத்திற்கு கிடைக் கும் நிலத்தடி நீர்வள ஆதாரத்தில், 77 சதவித்திற்கும் மேல் பயன்படுத்தப்படு கிறது.

வடகிழக்கு பருவமழை மூலமே தமிழகத்திற்கு நீர்வளம் கிடைக்கிறது. உரிய சேமிப்பு கட்டமைப்புகள் இல்லாததால், இந்த நீரின் பெரும்பகுதி வீணடிக்கப்படு கிறது. தமிழகத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்ய, நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்து வது அவசியம். காவிரி - வைகை - குண்டாறு, தாமிர பரணி - கருமேனியாறு - நம்பியாறு, அத்திக் கடவு அவினாசி, பாலாறு - பெண்ணையாறு இணைப்பு திட்டங்களை செயல்படுத்து வதன் மூலம், பல்வேறு மாவட்டங்களுக்கு போதுமான நீர்வளம் கிடைக்கும்.

இதில் ஒவ்வொரு திட்டத்திற்கும், 5,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும். அத் திக்கடவு - அவினாசி திட்டம், தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டங்களுக்கு, சமீபத்திய பட்ஜெட்டில், குறைந்த அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் நிலவும் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே, இது போன்ற குறைந்த நிதி ஒதுக்குவது மாநில அரசின் வழக்கம். எனவே, மத்திய அரசு மனது வைத்தால் மட்டுமே, தமிழகத்தில் நதிகள் இணைப்பு சாத்தியமாகும்

கரும்பு நிலுவை பிரச்சினை

தமிழகத்தில், மூன்று லட்சம் விவசாயி கள், 8.40 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர். கரும்பு கொள்முதலுக்கு, மத்திய அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை; மாநில அரசின் பரிந்துரை விலையை யும் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

சந்தையில் சர்க்கரை விலை குறைவால் உற்பத்தி செலவை ஈடுகட்ட முடியவில்லை எனக்கூறி, சர்க்கரை ஆலைகள், 2013 முதல் 2015 வரை, கரும்பு கொள்முதல் விலையை வழங்கவில்லை. 2015க்கு பின், சர்க்கரை விலை உயர்ந்து, லாபம் கிடைத் தும், இதுவரை, விவசாயிகளுக்கு, 1,600 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன.

இது தொடர்பாக, தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகங்களை அழைத்து, அரசு தரப்பில் பலமுறை பேச்சு நடத்தியும் பயன் இல்லை. அரசின் உத்தரவுக்கு சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் கட்டுப்படாமல் இருப் பதற்கு, சட்டத்தில் உள்ள ஓட்டைகளே காரணம் ‘கரும்பு கொள்முதல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மாநில அரசு சட்டப்பூர்வமாக்கி கொள்ள வேண்டும்’ என, 2005ல், ஐந்து நீதிபதிகள் கொண்ட, உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

12 ஆண்டுகள் ஆகியும், இன்னும் தமிழக அரசு அதற்கான முயற்சி எடுக்க வில்லை. தமிழக அரசு இந்த சட்டத்தை இயற்றுவதே, இந்த சிக்கலுக்கு தீர்வாகும். இதுபோன்ற பிரச்னைகளுக்கு, இப்போதா வது மத்திய, மாநில அரசுகள் தீர்வு கண்டால் தான், அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்; தொடரும் மரணங்களையும் தடுக்க முடியும்.

முடிவுக்கு வருமா?

ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு; டில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தை, தமிழக அரசு தான் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து, சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது: வேளாண் துறை மாநில அரசின் கட்டுப் பாட்டில் உள்ளது. விவசாயிகளுக்கு பல திட்டங்கள் மூலம், மத்திய அரசு நிதி ஒதுக் குகிறது தேசிய வங்கிகளிடம், விருப்பத்தின் அடிப்படையில், விவசாயிகள் கடன் பெறு கின்றனர்

ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேச மாநில அரசுகள் போன்று, தமிழக அரசும், விவசாயி கள் பெற்ற கடன்களை ஏற்றுக் கொள்வதுதான் முறை. அதை தவிர்த்து விட்டு, மத்திய அரசு க்கு எதிராக டில்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டத்தை, மாநில அரசு மறைமுகமாக ஊக்குவித்து வருகிறது. இதனால், விவசாயிகள் பலிகடா ஆக்கப்பட்டு வருகின்றனர்.

வெளி மாநிலங்களுக்கு நம்மூர் விவ சாயிகள் கோமாளிகள் போல் காட்சிப் படுத்தப்படுகின்றனர். சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு டில்லி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தால், தமிழக விவசாயிகளே பாதிக்கப்படுவர். இதை வைத்து, தமிழக அரசு அரசியல் லாபம் பார்க்க எண்ணுகிறது. இப்படி குறுகிய நோக்கத்தில் நில்லாமல், விவசாயிகளை அழைத்து பேசி, தமிழக அரசு தான் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சிறு குறு விவசாயிகள் யார்?

இரண்டு ஏக்கருக்கு குறைவாக விவசாய நிலம் வைத்துள்ளோர், குறு விவசாயிகள், அய்ந்து ஏக்கருக்கு குறைவாக உள்ளோர், சிறு விவசாயிகள், அய்ந்து ஏக்கருக்கு மேல் உள்ளோர் பெரிய விவசாயிகளாக அரசு வகைப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள, 75 லட்சம் விவசாயிகளில், 90 சதவீதம் பேர் சிறு, குறு விவசாயிகள் தான்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner