எழுத்துரு அளவு Larger Font Smaller Font

103 செயற்கைகோளுடன் விண்ணில் பாயத் தயாராகும் பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட்

சென்னை, ஜன.2 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கை கோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. இந்த ராக்கெட்டுகளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தயாரிக் கப்படும் செயற்கைகோள்களை பொருத்தி விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.

குறிப்பாக கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை இஸ்ரோ பல்வேறு ராக்கெட்டுகள் மூலம் 121 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி இருக்கிறது. இதில் 21 நாடுகளைச் சேர்ந்த 51 நிறுவனங்களுக்கு சொந்தமான 79 வெளிநாட்டு செயற்கைகோள்களும், உள்நாட்டைச் சேர்ந்த 42 செயற்கை கோள்களும் ஆகும். இவற்றை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தி உள்ளது.

இதைத் தொடர்ந்து தற்போது 103 செயற்கைகோள்களை ஒரே ராக்கெட்டில் செலுத்தி விண்ணில் நிலை நிறுத்துவ தற்கான பணியில் இஸ்ரோ விஞ்ஞானி கள் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.

இதுகுறித்து ஆந்திர மாநிலம் சிறீஹ ரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மய்ய இயக்குனர் பி.குன்னில் கிருஷ்ணன் கூறியதாவது:-

இஸ்ரோவை பொறுத்தவரை விண் ணில் செலுத்தப்படும் ஒவ்வொரு ராக் கெட்டுகளும் மிகவும் முக்கியமானது. அந்தவகையில் பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட், வருகிற 27-ஆம் தேதி (வெள் ளிக்கிழமை) விண்ணில் ஏவப்படுகிறது. இதில் பொருத்தப்பட்டுள்ள செயற்கை கோள்கள் பெரும்பாலும் ‘நானோ’ வகை செயற்கைகோள்களாகும்.

அனைத்து செயற்கைகோள்களும் ஒரே சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் சவாலை சந்திக்க வேண்டி உள்ளது. இதற்கு பி.எஸ்.எல்.வி. எக்ஸ்.எல் வகை ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. ராக்கெட்டின் என்ஜினை நிறுத்திவிட்டு, மீண்டும் இயக்குவதற்கான நடவடிக் கைகள் இருக்காது. ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் செயற்கைகோள் களை விண்ணில் செலுத்த இருப்பது இதுவே முதன் முறையாகும். இதை வெற்றிகரமாக நிகழ்த்தினால் இதுபோல உலக சாதனையை படைத்த பெரு மையை இஸ்ரோ பெரும்.

இந்த ஆண்டு ஏவப்படும் முதல் ராக்கெட் இதுவாகும். இந்த ராக்கெட் டில், வானிலையை துல்லியமாக கணித்து கூறும் கார்ட்டோ சாட்-2டி உள்ளிட்ட 103 செயற்கைகோள்களை பொருத்தும் பணி நடந்து வருகிறது. மற்ற அனைத்து செயற்கைகோள்களும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வணிக ரீதியிலானவை.

வருகிற 27-ஆம் தேதி ஏவப்படும் பி.எஸ்.எல்.வி. சி-37 ராக்கெட்டுடன் சேர்த்து நடப்பாண்டின் முதல் காலாண் டில் 4 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த திட்டமிட்டு இருக்கிறோம். குறிப்பாக 3.2 டன் எடைகொண்ட ஜி. எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் ஜி-சாட். 19-இ செயற்கைகோளை தாங்கி செல்ல உள்ளது. தொடர்ந்து ஜி.எஸ்.எல்.வி. மார்க்-1 ராக்கெட்டும், வருகிற மார்ச் மாத இறுதியில் பி.எஸ்.எல்.வி. சி-38 ராக்கெட்டும் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner