எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இன்னும் எத்தனை உயிர்கள் தேவையோ?
தண்ணீரின்றி விதைப்பு
நெல் முளைக்காததால் அதிர்ச்சி?
மேலும் 2 விவசாயிகள் மரணம்

மன்னார்குடி, நவ.6 தண்ணீர் பற்றாக்குறையால் பயிர் முளைக் காத சோகத்தில், மேலும் 2 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

விவசாயம் செய்ய தண்ணீர் வராததால் திருவாரூர் மாவட் டம் திருத்துறைப்பூண்டி அடுத்த ரகுநாதபுரத்தை சேர்ந்த  விவ சாயி கோவிந்தராஜ்  கடந்த 3ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதேபோல், மேலும் 2 விவசாயிகள்  வயலிலேயே சுருண்டு விழுந்து   இறந்துள்ளது தெரிய வந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த கோட்டூர் ஆதிச்சபுரத்தை  சேர்ந்தவர் அழகேசன் (36). இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் வயலில்  சம்பா நேரடி  விதைப்பு செய் திருந்தார். மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்னும் வராததால் இவரது வயலில்  முளைத்த பயிர்கள் கருக  துவங்கிவிட்டன. நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு வயலுக்கு சென்ற அழகேசன், கருகிய பயிர்களை  பார்த்து கண்ணீர் வடித்தார். சிறிது நேரத்தில் வயலிலேயே சுருண்டு விழுந்து  இறந்தார்.

தஞ்சை மாவட்டம் திருவை யாறு அடுத்த கீழத்திருப்பந் துருத்தி  செபஸ்டியார் கோயில் தெருவைச் சேர்ந்தவர்  வெள் ளையன் (எ) ராஜேஸ்கண்ணன் (42). விவசாயி. 2 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நேரடி நெல் விதைப்பு செய்தி ருந்தார்.  தண்ணீரின்றி பயிர்கள் கருகியதால், மன வேதனையில் இருந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை 9.30 மணியளவில், காட்டுக்கோட்டையை  சேர்ந்த சதாசிவம் என்பவரின் வயலில் நாற்று பறிக்கும் பணிக்கு ராஜேஷ்கண்ணன் சென்றார்.  வயலில் உடன் பணிபுரிந்தவர் களிடம், ``எனது  வயலில் பயிர்கள் கருகி வருகிறது; என்ன செய்ய போகிறேன்  என்றே தெரியவில்லை’’ என வேதனை தெரிவித்து கொண்டி ருந்தவர், திடீரென  நெஞ்சு வலிப்பதாககூறி சுருண்டு விழுந்து இறந்தார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner