எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழகத்தில் மோடியின் வருகையின்போதெல்லாம் கடும் எதிர்ப்புகள், கருப்புக்கொடிகள், கருப்பு பலூன்கள் என எதிர்ப்புகள் அதிகரித்துக்கொண்டிருக்கிறதே அல்லாமல், குறைந்த பாடில்லை. மக்களுக்கான அரசின் பிரதமர்தான் தான் என்பதை உணர்ந்து, மோடியும் தம்மை மாற்றிக்கொண்டாரில்லை.

பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட் டங்கள், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மோடியே திரும்பிப்போ என எதிர்ப்புகள் பன்னாட்டள வில் டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பெற்று வந்து உள்ளன. தமிழகத்தில் மட்டுமல்லாமல், ஆந்திரப்பிரதேசம், அசாம் என பல பகுதிகளிலும் ஒரு நாட்டின் பிரதமருக்கு கருப்புக்கொடிகள், கருப்பு பலூன்கள், டிவிட்டர் சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்புகள் பரவி வருகின்றன.

இந்நிலையில்தான், தமிழகத்துக்கு அண்மையில் பிரதமர் மோடி வருகையின்போது, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை திமுகவும், காங்கிரசும் முடக்கிவிட்டதாக, சமூக நீதிக்கு எதிராக இருந்ததாகக் கூறியுள்ளார்.

தான் சொல்வது உண்மையா? உண்மைக்கு மாறா னதா?  என்பது ஒரு பக்கம் இருந்தாலும், தமிழகத்துக்கு வந்தால் யாராக இருந்தாலும் பேச வேண்டியது சமூக நீதிதான் என்பதை அவரையும் அறியாமல் அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

ஆக, மத்தியில் ஆளும் பிரதமர் மோடிக்கும், பாஜக வினருக்கும் நன்றாகவே தெரிகிறது. தமிழகத்தில் பேச வேண்டும் என்றால், சமூக நீதிக்கு ஆதரவாகத்தான் பேசியாகவேண்டும் என்பது. வெறும் பேச்சில் ஏமாறுபவர்கள் அல்லர் தமிழர்கள் என்பதை விரைவில் ஆட்சியாளர்கள் உணர்வார்கள்.

மத்திய பாஜக அரசால் தமிழக மாநில உரிமைகள் நசுக்கப்படுகின்றன. தமிழக மாணவர்களின் கல்வி உரிமைகள் பறிபோகின்றன. உரிமைகோரி ஒலிக்கின்ற மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், விவசாயிகளின் குரல்கள் மத்திய அரசின் கேளாக் காதுக்கு எட்டுவதில்லை.

தமிழக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நிறைவேற்றிய நீட் விலக்கு கோரும் சட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. அரியலூர் அனிதா, செஞ்சி பெருவளூர் பிரதீபா, திருச்சி சுபசிறீ ஆகிய மாணவிகள் உள்பட மாணவர்கள், பெற்றோரின் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் மத்திய அரசின் பாராமுகமான அவலம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

தமிழகத்தில் பிரதமர் மோடி பேசுகின்ற அதேநேரத்தில், காஷ்மீர் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங் குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் கூட்டமைப்பின் சார்பில் அம்பேத்கர் சவுக் பகுதியில் போராட்டம் நடந்தது.

பதவி உயர்வில் இடஒதுக்கீடு தொடரவேண்டும் என்றும், இடஒதுக்கீட்டுப்பிரிவினருக்குரிய பணியிடங் களில் இடஒதுக்கீட்டுப்பிரிவினரைக்கொண்டு உடனடி யாக நிரப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அந்தப் போராட்டம் நடந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட 77,81,82,85 ஆகிய திருத்தங்களின் கீழ் நிரப்பப்படாத இடஒதுக்கீட்டுப் பணியிடங்களை நிரப்பக்கோரியும், பதவி உயர்வில் இடஒதுக்கீடு தொடரவேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நீண்ட காலமாக போராட் டங்கள், கருத்தரங்குகள், பரப்புரைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளன. ஆனால், எதுவுமே அரசால் நடைமுறைப்படுத்தப்பட வில்லை என்று போராட்டத்தில் பேசுகையில் கூறியுள்ளனர்.

கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ஆர்.கே.கல்சோத்ரா கூறுகையில், "முந்தைய அரசாகிய பாஜக, பிடிபி கூட்டணி அரசின் காலம்தான் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மிக மோசமான காலமாக இருந்துள்ளது.  தாழ்த்தப்பட்ட வகுப் பைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரே கட்சியில் ஏழு பேர் இருந்தும்கூட, சமுதாயத்துக்கு ஒன்றுமே செய்ய வில்லை. தற்பொழுது குடியரசுத் தலைவர் ஆட்சியிலும் கோரிக்கைகளை அளித்தபோதிலும் எவ்வித செயல் பாடுகளும் இல்லை. இனியும்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதநிலை தொடர்ந்தால், 10.3.2019 அன்று மாபெரும் கண்டனப் பேரணி நடைபெறும்" என்று அறிவித்தார்.

கூட்டமைப்பின் துணைத்தலைவர் சவுத்ரி முஷ்டாக் பட்காமி கூறுகையில், சிறீநகரில் 24.2.2019 அன்று விழிப்புணர்வு பேரணி நடைபெறும் என்றும், மார்ச் 10 பேரணிக்கு முன்னோட்டமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்தியதற்காக சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கலைத்த பிஜேபியைச் சார்ந்தவர்கள் சமூகநீதிப் பற்றிப் பேசிடத் தகுதி உடையவர்கள்தானா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner