எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காஷ்மீர் மாநிலம் ஜம்மு-வில் இருந்து 78 வாகனங்களில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப். வீரர்கள், கடந்த வியாழக்கிழமை சிறீநகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

அதிகாலை 3:30 மணிக்கு ஜம்மு-வில் உள்ள சன்னி ராம ட்ரான்சிஸ்ட் கேம்ப்பில் (Channi Rama transit camp) இருந்து  சிறீநகரில் உள்ள பக்ஷி ஸ்டேடியம் ட்ரான்சிஸ்ட் கேம்புக்கு (Bakshi Stadium transit camp) செல்வதற்காகப் பயணமாகியுள்ளனர்.

வீரர்கள் வந்த பேருந்து, மிக வேகமாகத் தங்களது இலக்கை அடைந்து கொண்டிருந்தது. வீரர்கள் பயணிக்க அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாகச் செய்யப்பட்டன. சுமார் ஒரு வார காலமாக  ஜம்மு-சிறீநகர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அனைத்து நடமாட்டங்களும் கண்காணிக்கப்பட்ட பின்னரே,  வீரர்கள் பயணத்தைத் தொடங்கினர். பேருந்தில் பயணித்த வீரர்களில் பலர், தங்களின் விடுப்பை முடித்துக்கொண்டு மீண்டும் பணியில் இணைய வந்தவர்கள். மொத்தம் 350 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்தப் பயணத்தை அவர்கள்  மேற்கொண்டிருந்தனர். பக்க்ஷி கேம்புக்குச் செல்ல 30 கிலோமீட்டர் இருக்கும் நிலையில், ஒரே ஒரு நபர் மட்டும் விளையாட்டுப் பொருள்களுக்கு மத்தியில் 350 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை மறைத்து வைத்து, சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வந்த ஒரு பேருந்தின்மீது மோதியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த நெடுஞ்சாலையில் இப்படி ஒரு தாக்குதல் நடக்க வாய்ப்பே கிடையாது. அந்தப் பகுதியில் நிறைய சோதனைச் சாவடிகள் உள்ளன. அவை அனைத்தையும் தாண்டி, நூற்றுக்கணக்கான கிலோ வெடி பொருள்களைக் கொண்டுவர முடியாது.

பாதுகாப்புப் பணிகளில் ஏதோ தவறு நடந்துள்ளது என்ற ஒரு கருத்து உலா வருகிறது. உளவுத் துறையின் எச்சரிக்கை ஏற்கெனவே இருந்ததாகவும் கூறப்படும் நிலையில் இது எப்படி நடந்தது?

இப்படியொரு தாக்குதல் நடத்தி மதவெறி தூண் டப்படும் என, அமெரிக்க உளவுத்துறை ஏற்கெனவே எச்சரித்திருந்தது, இவ்வேளையில் குறிப்பிடத் தக்கதாகும். 'இது தொடர்பாக நிச்சயம் விசாரணை நடத்தப்படும்' என 'இந்தியா டுடே'க்கு ராணுவ உளவுத்துறை சிறப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். தாக்குதல் நடந்த பகுதிகளில், இன்னும் அதிக வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.  சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் தெற்கு காஷ்மீர் பகுதியில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.  மேலும், சில பகுதிகளில் இன்டெர்நெட் வேகம் 2ஜி அளவாகக் குறைக்கப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், உச்சக்கட்ட அவசரச் செய்தி எனக் குறிப்பிட்டு,  வெடிகுண்டுத் தாக்குதல் நடத்த வாய்ப் புள்ளதாக, காஷ்மீர் காவல் துறை இயக்குநர் சார்பில் கடந்த 8-ஆம் தேதியே எச்சரிக்கை அனுப்பப்பட்டும், மிக மோசமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டுக்குள் நுழைந்து, அதுவும் ஒரு வாகனத்தில் பயணித்து, சாலை வழியே எல்லா சுங்கச்சாவடிகள், சோதனைச்சாவடிகள் அனைத் தையும் தாண்டி வந்து ஒரு தனிமனிதன் ஏமாற்றி தாக்குதல் நடத்தக்கூடிய அளவுக்கு நம் நாட்டுப் பாதுகாப்புத்துறை பாதுகாப்பற்ற நிலையில் செயல் படுகிறதா? என்ற கவலை அனைவருக்கும் வருகிறது. அந்த நிலை ஏற்பட்டு இருக்கக் கூடாது என்பதே நமது ஆசையாகவும் இருக் கிறது.  இது ஒன்றும் அரசியல் பிரச்சினையல்ல, நாட்டுப் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. விசாரணை உரிய திசையில் நடத்தப்பட்டு உண்மை நிலை வெளி வருவது அவசிய மாகும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner