எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிரதமர் மோடி முதல் 4 ஆண்டுகளில் 155 நாட்கள் வெளி நாட்டில் இருந்திருக்கிறார். இன்றைய தேதிவரை கணக்கிட்டால் 43 முறை வெளிநாடு சென்றுள்ளார். 182 நாட்கள் வெளிநாடுகளில் தங்கியுள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளில் மோடியின் வெளிநாட்டுப் பயணத்துக்கான விமான செலவு மட்டும் ரூ.387.26 கோடி.

41 தடவை பயணத்தின்போது பிரதமர் மோடி 52 நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். 2014-ஆம் ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி தொடங்கி சமீபத்தில் இந்தோனேசியா சென்று வந்தது வரை அவரது சுற்றுப்பயணத்தில் இடம் பெற்ற 52 நாடுகள் விவரம் வருமாறு:-

1.பூடான், 2. பிரேசில், 3. நேபாளம், 4. ஜப்பான், 5. இலங்கை, 6. ஜெர்மனி, 7. ஸ்பெயின், 8 ரசியா, 9. பிரான்சு, 10. கஜகஸ்தான், 11. போர்ச்சுகல், 12. அமெரிக்கா, 13. நெதர்லாந்து, 14. இஸ்ரேல், 15. சீனா, 16. மியான்மர், 17. பிலிப்பைன்ஸ், 18. சுவிட்சர்லாந்து, 19. ஜோர்டான், 20. பாலஸ்தீனம், 21. அய்க்கிய அரபு எமிரேட், 22. ஓமன், 23. சுவீடன், 24. இங்கிலாந்து, 25. ஆஸ்திரேலியா, 26. பிஜு தீவு, 27. செசல்ஸ், 28. மொரிசியஸ், 29. கனடா, 30. மங்கோலியா, 31. தென்கொரியா, 32. வங்கதேசம், 33. துர்க்மெனிஸ்தான், 34. கிர்கிஸ்தான், 35. தஜிகிஸ்தான், 36. அயர்லாந்து, 37. மலேசியா, 38. சிங்கப்பூர், 39. ஆப்கானிஸ்தான், 40. பாகிஸ்தான், 41. பெல்ஜியம், 42. சவுதிஅரேபியா, 43. ஈரான், 44. கத்தார், 45. மெக்சிகோ, 46. மொசாம்பிக், 47. தென்ஆப்பிரிக்கா, 48. தான்சானியா, 49. கென்யா, 50. வியட்நாம், 51. லாவோஸ், 52. இந்தோனேசியா.

இந்த 52 நாடுகளுக்கும் பிரதமர் மோடி சென்று வந்த வகைக்கு 355 கோடியே 30 லட்சத்து 38 ஆயிரத்து 465 ரூபாய் அரசுப் பணம் செலவாகி யுள்ளது. இதில் மோடியின் 5 பயணங்களுக்கான செலவு சேர்க்கப்படவில்லை. இந்திய விமான படைக்குச் சொந்தமான விமானங்களில் பயணம் செய்ததால், அந்த செலவு சேர்க்கப்படவில்லை.

அந்த 5 விமான பயணச் செலவையும் சேர்த்தால் மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவு மேலும் அதிகமாக உயர்ந்திருக்கும். மோடி மேற்கொண்ட 41 வெளிநாட்டுப் பயணங்களில் 2015-ஆம் ஆண்டு பிரான்சு, ஜெர்மனி, கனடா ஆகிய 3 நாட்டுப் பயணம் தான் அதிக செலவு ஏற்படுத்தியது. அந்த ஒரு பயணத்துக்கு மட்டும் 31 கோடியே 25 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் செலவானது.

பிரதமர் மோடியின் 41 வெளிநாட்டுப் பயணங் களில் பூடானுக்குச் சென்று வந்தது தான் மிக, மிகக் குறைந்த செலவை கொடுத்தது. பூடான் பயணத்துக்கு 2 கோடியே 45 லட்சத்து 27 ஆயிரத்து 465 ரூபாய் செலவிடப்பட்டது.

பிரதமர் மோடியின் வெளிநாடுகள் பயணம் மட்டுமே தகவல் அறியும் உரிமை சட்டப்படி கிடைத்துள்ளது. மோடியின் உள்நாட்டுச் சுற்றுப் பயணத்துக்கு எவ்வளவு செலவானது என்ற விவரத்தை பிரதமர் அலுவலகம் தெரிவிக்கவில்லை.

சுருக்கமாகச் சொன்னால் உலகம் சுற்றும் வாலிபர் என்ற பட்டத்தைத் தாராளமாகவே  கொடுத்து விடலாம்.

இன்னும் இரு மாதங்களில் எஞ்சிய நாடுகளிலும் அரசு செலவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரதமரான முழு பலனை அடைந்து விட்ட முழு திருப்தியை அடைவார் என்பதில் அய்யமில்லை.

அதே நேரத்தில் இந்தச் சுற்றுப் பயணங்களால் நாட்டுக்கு ஏற்பட்ட பலன் என்ன என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாகும்.

ஆஸ்திரேலியாவுக்குச் சென்றபோது தொழி லதிபர் அதானியையும் தன்னோடு அழைத்துச் சென்று அங்கு குவின்ஸ்லேண்டு என்ற பகுதியில் நிலக்கிரி சுரங்கம் அமைக்க அந்த அரசோடு அதானி ஒப்பந்தம் போட பிரதமர் பதவியைப் பயன்படுத் தியதோடு, கடன் வழங்கிட வங்கி அதிகாரியையும் உடன் அழைத்துச் சென்றதும், அதிகாரத்தை அதிக அளவில் தவறாக உபயோகித்ததில் பிரதமருக்கு முதலிடம் தானே.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner