எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கணவனை இழந்த பெண்களின் நலனுக்கான சமூக பாதுகாப்புக்கான சட்டத்தைக் கொண்டு வந்து நிறை வேற்றக்கோரி தனி நபர் முன்மொழிவை மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா   அன்று கொண்டுவந்தார்.

கணவனை இழந்த பெண்களின் சமூக பாதுகாப்புக்கான சட்டம் நிறைவேற்ற மாநிலங்களவை மறுத்துள்ளது. அதனை மத்திய பாஜக அரசு நிறைவேற்றாமல் நிராகரித் துள்ளது. மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவாவிடம் அவருடைய முன்மொழிவைத் திரும்பப் பெறுமாறு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் விஜய் கோயல் கடந்த 4.1.2019 அன்று கோரினார்.

கணவனை இழந்த பெண்கள் நலனுக்கான சட்டம் கோரும் தனி நபர் முன்மொழிவில் திருச்சி சிவா முன்வைத்த ஆலோசனைகளை அரசு ஏற்றுக்கொள்வதாகக் கூறியுள்ள அதேநேரத்தில், கணவனை இழந்த பெண்களின் நலனை முன்னிறுத்துகின்ற சட்டத்துக்கான முன் மொழிவைத் திரும்பப் பெறுமாறு  அமைச்சர் விஜய் கோயல் கூறியது ஏன்?

ஏற்கெனவே, இப்பிரச்சினையில், குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் வீரேந்திர குமார் நட வடிக்கைகள் திருப்தி அளிக்காத நிலையிலேயே திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தீர்மானத்தை முன்மொழிந்திருந்தார்.

கணவன் இறப்பு சான்றிதழில் மனைவியின் பெயர் இடம்பெற வேண்டியது கட்டாயம் என்றும், பெண் களுக்கான இல்லங்கள் அதிகமாக அமைக்கப்பட வேண்டும் என்றும் தீர்மான முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.  பெண்கள் இல்லங்களின் செயல்பாடுகளை தொடர்ச்சி யாக கண்காணிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். உளவியல் ரீதியிலான ஆலோசனைகள் உரிய முறையில் அளிக்கப்பட வேண்டும்.  மற்ற பிற சுகாதார வசதிகள், உரிய சட்ட உதவிகள் அளிக்கப்பட வேண்டும். அப்பெண்களுக்குத் தொழிற்பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அரசுப் பணி களுக்கான போட்டித் தேர்வுகளில் கணவனை இழந்த பெண்களுக்கு வயதை தளர்த்திட வேண்டும் என்னும் சரத்துகள் சிவா அவர்களின் தீர்மானத்தில் அடங்கியுள்ளன.

மத்திய அமைச்சர் ஏற்கெனவே குறிப்பிடுகையில், கணவனை இழந்த பெண்களின் நல்வாழ்வுக்காக போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அனைத்து மாவட்ட நிர்வாக அளவில் கணவனை இழந்த பெண்களின் நலனுக்காக தனியே பிரிவு தொடங்கப்படும். மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு இணைந்து கணவனை இழந்த பெண்களின் சுகாரதாரம், இல்லம், சட்ட உதவி, ஆலோசனைகள், அவர்களின் சொத்துப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அளிக்கப்படும்" என்று கூறியிருந்தார். கணவனின் இறப்பு சான்றிதழில் மனைவியின் பெயர் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று அனைத்து மாநிலங் களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், குறைதீர் அமைப்புகளும் அமைக்கப்பட்டன என்றும் பதிவாளர் தெரிவித்ததாக திருச்சி சிவா குறிப்பிட்டார். "நாடு முழுவதும் 5 கோடி பெண்கள் கணவனை இழந்து வாடுகிறார்கள். குடும்பத்தால் கைவிடப்பட்டும், சமூகத்தில் ஒதுக்கப்பட்ட நிலையிலும் பெரிதும் அவல நிலையிலேயே உள்ளனர். நாள் ஒன்றுக்கு ரூ.6அய் மட்டும் வைத்துக் கொண்டு எப்படி வாழ்வது?" என்று கேள்வி எழுப்பி யிருந்தார் சிவா.

காங்கிரசு கட்சி மற்றும் சமாஜ்வாடி கட்சிஉள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திருச்சி சிவா கொண்டு வந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத் தியும், பெண்களுக்கு எதிரான பாஜகவின் நிலைப்பாட்டைக் கண்டித்தும் முழக்கமிட்டனர்.

இந்நிலையில்தான்,  கணவனை இழந்த பெண்களின் நலனுக்கான பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய சட்டம் கோரும் முன்மொழிவை மாநிலங்களவை திமுக  உறுப்பினர் திருச்சி சிவா திரும்பப் பெற்றிட வேண்டும் என்று மத்திய அமைச்சர் விஜய் கோயல் ஏன் கூற வேண்டும்?

இதன்மூலம் பெண்களின் நலனில் அதிலும் குறிப்பாக கணவனை இழந்து தவிக்கின்ற பெண்களின் நலனில் மத்தியில் ஆளும் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ பாஜக அரசுக்கு அக்கறை ஏதும் கிடையாது என்பது நிரூபண மாகியுள்ளது. இந்துத்துவா கொள்கைப்படி கணவனை இழந்த பெண்ணின் நிலை மிகவும் பரிதாபமானதாகும். கணவன் மரணித்தால், அவனோடு  மனைவியையும் வைத்து எரித்து விட வேண்டும்; சதி என்னும் உடன்கட்டை என்பது இந்து மதத்தின் கோட்பாடாகும்.

கிறித்துவ வெள்ளைக்காரன் அதனை ஒழித்திரா விட்டால் இன்று வரை அதுதானே தொடர்ந்திருக்கும்.

எப்படியோ பிஜேபியின் இந்துத்துவா முகமூடி கிழிந்து தொங்கி விட்டது - சிவா அவர்களின் தீர்மானத்தை முற்றிலும் ஏற்காத நிலையில்....!

பிஜேபி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதில் பெண்கள் முன்கை எடுப்பார்களாக!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner