எழுத்துரு அளவு Larger Font Smaller Font

5 மாநில தேர்தல் முடிவால் ஏற்பட்ட பயம் காரணமாக, கூட்டணிக் கட்சிகளின் அழுத்தத்திற்கு அடி பணிந்து பீகார்  மாநிலத்தில் குறைந்த அளவிலான இடங்களில் போட்டியிட பாஜக ஒப்புக்கொண்டு விட்டது. நடந்து முடிந்த அய்ந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக  தோல்வி அடைந்ததால், வேறு வழியின்றி, கூட்டணிக் கட்சிகளின் அழுத்தத்திற்கு பாஜக அடிபணிந்து போயுள்ளது. இதன் காரணமாக நிதிஷ்குமார் கட்சிக்கும், தனக்கும்  ஒரே அளவிலான தொகுதிகளை அறிவித்து உள்ளது.

இவ்வாண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து, தனது கூட்டணிக் கட்சிகளுடன் பாஜக இப்போது பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணித் தொகுதிப் பங்கீடுகளை அறிவித்து வருகிறது.

அதன்படி, சமீபத்தில் பீகார் மாநிலத்தில் கூட்டணி கட்சிகளிடையே பேச்சு வார்த்தை நடைபெற்று தொகுதி உடன்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. 40 தொகுதிகளை கொண்ட பீகார் நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக 17 தொகுதி களிலும், நிதிஷ்குமாரின் அய்க்கிய ஜனதாதளம் 17 இடங் களிலும், ராம்விலாஸ் பஸ்வான் கட்சி 6 இடங்களிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பஸ்வான் கட்சி 4 இடங்களில் மட்டுமே போட்டியிட்ட நிலையில், தற்போது 6 இடங்களில் போட்டியிடுகிறது.  அதுபோல கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 25க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக போட்டியிட்டு 22 இடங்களைக் கைப்பற்றி இருந்தது. ஆனால், தற்போது 17 இடங்களை மட்டுமே  பெற்றுள்ளது.  இது ஏன்?

பாஜகவினரிடையே ஏற்பட்டுள்ள தோல்வி பயம் காரணமாகவே, நாடாளுமன்றத் தேர்தலில் மாநில கட்சிக்கு இணையான அளவில் போட்டியிட ஒப்புக்கொண்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற  நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க., லோக் ஜனசக்தி, ராஷ்டிரிய லோக் சமதா ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. ஆனால், நிதிஷ் குமார் கட்சி தனித்தே போட்டியிட்டது.

ஆனால் 2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில்,  நிதிஷ் குமாரின் அய்க்கிய ஜனதா தள கட்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துவிட்டதால் தொகுதி பங்கீட்டில் சிக்கல் எழுந்தது. இதன் காரணமாக,  முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்டிரிய லோக் சமதா தலைவருமான குஷ்வாஹா அமைச்சர் பதவியில் இருந்து விலகியதோடு, பா.ஜ.க. கூட்டணியில் இருந்தும் வெளியேறினார். இதனால் தொகுதி பங்கீட்டில் மேலும் குழப்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நிதிஷ்குமார் கட்சிக்கு இணையாகவே தேசிய கட்சியான பாஜகவும் தொகுதி பங்கீட்டில் இறங்கி வர வேண்டிய சூழல் உருவானது.

நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை. அந்த அச்சம் காரணமாகவே பெரும்பான்மை பெற்ற பாஜக  தற்போது பலவீனமாகி உள்ளது. பீகாரிலும் அவர்கள் பலவீன மாகவே உள்ளார்கள். அதன் காரணமாகவேத்தான், நிதிஷ்குமார் கட்சியுடன் ஒரே அளவிலான தேர்தல் உடன்பாடு  கொண்டுள்ளது. இது பாஜகவின் பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது.

பீகார் மாநில பாஜகவின் தேர்தல் உடன்பாடு குறித்து  கருத்து கூறிய பீகார் மாநில முன்னாள் துணைமுதல்வரும்,  ஆர்.ஜே.டி. தலைவருமான தேஜஷ்வி யாதவ்  "பீகாரில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும், பிஜேபி 17 இடங் களில் மட்டுமே போட்டியிடுகிறது இது, பாரதீய ஜனதா கட்சிக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது" என்று கூறினார்.

"ஏற்கெனவே பாஜக கூட்டணியில் இருந்து  உபேந்திர குஷ்வாஹா, தெலுங்கு தேசம் விலகியுள்ளன. சிவசேனா கட்சியும் தற்போது அவர்களுடன் இல்லை. இதனால் வேறு வழியின்றி, நிதிஷ்குமாரின் அழுத்தத்திற்குப் பணிந்து, பா.ஜ.க.வில் 17 இடங்களை  பெற்றுக்கொண்டுள்ளது" என் றும் கூறி உள்ளார்.

"ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம்" என்பது போல இது பீகாரின் நிலை. மகாராட்டிரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிவசேனையும் விலகுகிறது. மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த ஆட்சியினை வெளிப் படையாகவே புகழ்கிறது.

மிகப்பெரிய மாநிலமான மகாராட்டிரத்திலும் பிரச்சினை ஏற்பட்டு விட்டது. ஆக பிஜேபிக்கு தோல்வியின் தொடக்கம் தொடங்கி விட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner