எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்திய அரசின் முக்கியப்பதவிக்கான பணியிடங்களில் அதிகாரிகளாக, அப்பணியிடங் களுக்கு சற்றும் தகுதியில்லாதவர்களை குஜராத் மாநிலத்திலிருந்து நியமித்து, அப்பணியிடத்தின் தரத்தையே குறைத்துவிட்டதாக மத்தியஅரசுமீது ஆந்திரப்பிரதேச மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாற்றியுள்ளார்.

ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் மாவட்ட ஆட்சியாளர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

மத்திய அரசு குஜராத் மாநிலத்திலிருந்து போதிய தகுதியில்லாத அதிகாரிகளை மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கிறது. அதுபோன்ற  திறமையற்ற அதிகாரிகளால் அரசு நிர்வாகமே சீர்குலைந்துவிட்டது. குஜராத் ஒரு சிறிய மாநிலமாகும். டில்லி மிகப்பெரிய அளவுக்கு உள்ளது. 29 மாநிலங்களுடன் தொடர்பு கொண்டு வருகிறது. சிறிய இடத்திலிருந்தே அனை வரும் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதால், அவர்கள் திறமைக் குறைந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

உரிய தகுதி நிலையை எட்டுவதற்கு முன்னதாகவே மத்திய அரசுப்பணியிடங்களில் பெரும்பான்மையராக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுடைய திறமையின்மை காரணமாக அனைத்து இந்திய அளவிலும்  நிர்வாகமும் தரம் குறைந்தே விட்டது.

அரசு நிர்வாகத்தையே மத்திய அரசு சீர்குலைத்து விட்டது. அதனால், நிர்வாக முறையை அதிகாரிகளின் செயல்பாடுகளின் அடிப்படையிலேயே தரவரிசைப் படுத்தலை நிர்ணயம் செய்வதில் புதிய முறையை கடைப்பிடிக்க ஆந்திரப்பிரதேச மாநில அரசு  முடிவு செய்துள்ளது.

பணி ஓய்வு பெற்ற அதிகாரிகள் அய்ந்து பேர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அவர்களுக்கு நன்கு தெரிந்த பணியிலுள்ள அய்ந்து அதிகாரிகளை அழைத்து, அய்ந்து கேள்விகள் கேட்கப்படும். அம்முடிவின்படி, தரநிர்ணயம் செய்யப்படும். இந்த புதிய முறை சரியானதுதானே?

"தகுதி நிலையைக்கொண்டு பணி நியமனங்கள் மத்திய அரசால் செய்யப்படவில்லை.  மத்திய அரசின் செயலாளர்கள்  பதவிக்கான பணியிடங்களில் அவர்களின் விருப்பத்துக்கேற்றபடி நியமித்துக் கொண்டார்கள். அவர்களால் அந்த பதவிக்கேற்ற பணிகளை செய்ய முடியுமா, இல்லையா? என்பது குறித்து கூட எண்ணிப் பார்க்கவில்லை. அறிவியல் அடிப்படையில்லாமல் உள்ள எந்த ஒரு  செயல்பாடும்  சீரழிவையே ஏற்படுத்தும். தற்காலிகமாக திருப்தியடைந்துகொள்ளலாம் ஆனால், அதன்பிறகு பிரச்சினையே ஏற்படும்

இவ்வாறு ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் சரியாகவே குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறியிருப்பது மிகவும் முக்கியமானது. 125 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு துணைக் கண்டத்தில் மத்திய அரசின் கேந்திரமான பதவிகள் என்பது செயலாளர்களே!

அத்தகு இடங்களில் நியமனம் செய்யப்படுபவர்கள் அனுபவம் கொண்டவர்களாக, சார்பற்றவர்களாகவே இருக்க வேண்டும்.  அதற்குப் பதிலாக தன்னுடைய மாநிலத்தைச் சேர்ந்தவர்களை நியமனம் செய்ய வேண்டும் என குறுகிய வெறியில் இந்த முக்கியமான விடயத்தில் நடந்து கொண்டால் நிருவாகம் குடை சாய்ந்து விடாதா?

சந்திரபாபு நாயுடுவால் வெளியில் சொல்ல முடியாதது - அந்த அதிகாரிகள் பெரும்பாலும் பார்ப்பனர்கள் என்பதைத்தான்! ஏற்கெனவே பிரதமரின் அலுவலகத்தில் 35 பதவிகளில்  31 பேர் பார்ப்பனர்கள்; இந்த நிலையில் மேலும் அதிகரிப்பது - மீண்டும் மனுதர்ம - ராமராஜ்யமே என்பதில் அய்யமில்லை.

சமூகநீதியாளர்கள் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner