எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உத்தரப்பிரதேசத்தில் கொல்லப்பட்ட காவல்துறை ஆய்வாளர் சுபோத் குமார் 2015ஆம் ஆண்டு நடந்த முகமது அக்லக் படுகொலையில் தொடர்புடைய இந்து அமைப்பினர் மீது நடவடிக்கை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முகமது அக்லக் வழக்கை தீவிரமாக விசாரித்து குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முக்கிய காரண மாக இருந்தார். அக்லக் வீட்டில் கைப்பற்றப்பட்ட மாமிசம் ஆட்டு மாமிசம் என்ற உண்மையையும் பரிசோதனை முடிவுகள் மூலம் வெளிக்கொண்டுவர உறுதுணையாக இருந்தவரும் கொலை செய்யப்பட்ட சுபோத்குமார் சிங் தான்!

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாகர் பகுதியில் திங்களன்று செத்துப்போன பசுவின் உடல் கண் டெடுக்கப்பட்டது. அதனால் அந்தப் பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டது. அதனை எதிர்த்து இந்து அமைப்புக்கள் கொல்லப்பட்ட பசுவின் உடலுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

போராட்டக்காரர்களுடன் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டு இருக்கும் போது திடீரென்று ஒரு கும்பல் கற்களை வீசித்தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து காவலர்கள் அங்கிருந்து பின்வாங்கினார்கள். அப்போது சில கும்பல்கள் காவல்துறையினரை தாக்கத் துவங்கினார்கள். இதில் காவல்துறை ஆய்வாளர் மரணமடைந்தார். அதன் பிறகு காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது தொடர் பாக ஆய்வாளரின் ஓட்டுநர் ஆஸ்ரே கூறுகையில், "இரண்டாவது முறையாக சுபோத் குமார் மீது கலவர கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. முன்பு நடந்த சம்பவத்தில் அவருக்கு காயம்தான் ஏற்பட்டது. இதை யடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். இன்றைக்கும் அவர் மீதும் கும்பல் தாக்குதல் நடத்தியது. உயிர் பிழைக்க நான் தப்பித்து ஓடி விட்டேன். நான் சென்ற பிறகு அங்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது" என்று கூறியுள்ளார். காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் கொல்லப் பட்ட விவகாரம் அங்கு பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. முகமது அக்லக் பசுவைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு கும்பலால் தாக்கப்பட்டு மரணம் அடைந்தவர். இந்த வழக்கில் பல தடைகளை, எதிர்ப்புகளைச் சுக்கு நூறாக்கி அக்லக் வைத்திருந்தது பசுவின் மாமிசம் அல்ல என்பதை கண்டறிய உதவிய வர் சுபோத் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. தற் போது மற்றொரு பசுவதை வழக்கு கலவரத்தில் இவர் கும்பலால் தாக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட சுபோத் குமார் உடலில் ஒரு துப்பாக்கி குண்டு காயமும் இருந்ததாக உடற் கூறாய்வில் தெரிய வந்துள்ளது. அதைத் தவிர ஒரு கூரான பொருளால் அவர் தாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பரிசோதனை அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த தகவலை உத்தரப்பிரதேச சட்டம் - ஒழுங்கு காவல்துறை உயர் அதிகாரி ஆனந்த் குமார் உறுதி செய்துள்ளார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சுபோத் குமார் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். அத்துடன் சுபோத் குமார் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ. 50 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி அளிக்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்

விஜய் சாலஸ்கர், அசோக் காம்டே, ஹேமந்த் கர்கரே இந்த மூவரையும் நாம் மறந்திருக்கமாட்டோம், இவர்களை 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலின் போது தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றார்கள் என்று செய்தியை யாரும் மறந்திருக்க முடியாது. பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டார்.

மும்பையில் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரி களுக்கும், புலந்த்சாகரில் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரிக்கும் ஒரு தொடர்பு உள்ளது. விஜய்சாலஸ் கர், அசோக் காம்டே, ஹேமந்த் கர்கரே மூவரும் இந்து தீவிரவாதக்கூட்டத்தின் சதித்திட்டத்தை புலனாய்வு செய்து உலகிற்குக் கொண்டு வந்தனர்.  சுபோத் குமார் சிங் முகமது அக்லக் கொலையில் தொடர்புடைய இந்து அமைப்பைச் சேர்ந்த குற்ற வாளிகளை கைது செய்து அவர்கள் மீது குற்றச் சாட்டுகளைப் பதிவு செய்தவர்.

உ.பி.யில் என்ன தான் நடக்கிறது - இப்பொழுதே அங்கு இந்து ராஜ்ஜியம் - ராமராஜ்ஜியம் அரங்கேறி விட்டதா? மறுபடியும் மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியத் துணைக் கண்டமே உத்தரப்பிரதேசம் ஆகிவிடும்.

ஆபத்து! ஆபத்து!!

எச்சரிக்கை! எச்சரிக்கை!!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner