எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சிமன்றங் களுக்கான இடைத்தேர்தலில்  பாஜக கூட்டணி 2 இடங்களை மட்டுமே பிடித்தும், ஒற்றை இலக்க எண்களில் வாக்குகளைப் பெற்றும்  மரண அடி வாங்கி கடைசி மூச்சை விட்டுக் கொண்டுள்ளது. இது பாஜக தலைமைக்குக் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் கடந்த மாதம் முக்கிய தீர்ப்பினை வழங்கியது. இதையடுத்து கேரளாவில்  போராட்டங்கள் தூண்டப்பட்டன. இந்த போராட்டத்துக்கு பாஜக, ஆர்எஸ்எஸ் பின்புலமாக இருந்து இயக்கி வந்தன. இந்த நிலையில், மாநிலத்தில் காலியாக இருந்த உள்ளாட்சிப் பகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த சனியன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.

சபரிமலை விவகாரத்தால்  கம்யூனிஸ்டு அர சுக்கு எதிராக மக்கள் வாக்களிப்பர்.  இடைத் தேர்தல்களில் நாம் பெரும் வெற்றியை சுவைக்க லாம் என்ற நப்பாசையில் தான் அய்யப்பன்கோவில் விவகாரத்தில் தன்னுடைய முழு பலத்தையும் காட்டின, பிஜேபி ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள். ஆனால் அங்கு நிலைமையோ வேறாக இருந்தது. 100 சதவிகிதம் படிப்பறிவு பெற்ற மாநிலமான கேரளாவில் பொதுமக்கள் மாநிலத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் போன்றவற்றை யோசித்து, வகுப்பு வாதத்தை வேரறுக்கும் வகையில், தங்களது வாக்குகளைப் பதிவிட்டு உள்ளனர். அதன்படி 39 உள்ளாட்சிக்கான தேர்தல் வாக்குப்பதிவில், கேரள ஆளும் இடதுசாரி கூட்டணி 22 இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 13 இடங்களையும், பாஜக கூட்டணி தனித்துப் போட்டியிட்ட இடங்களில் வெறும் ஒற்றை இலக்க 2, 5, 9 என்ற வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளன. சில தொழிலாளர் அமைப்புகளுடன் கூட்டணி வைத்த இடங்களில் 2-இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.

சபரிமலை விவகாரத்தை கையிலெடுத்த பாஜக தனது கட்சியின் வளர்ச்சிக்கு, இந்த உள்ளாட்சித் தேர்தல் முன்னோட்டமாக இருக்கும் என நினைத்துக் கொண்டிருக்கையில், கேரள மக்கள் பாஜக தங்களுக்குத் தேவையில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக வாக்களித்து உள்ளனர்.

குறிப்பாக சபரிமலை அமைந்துள்ள பகுதியான பந்தனந்திட்டா மற்றும் சபரிமலை கோவிலை நிர்வகித்து வரும் பந்தளம், நிலக்கல் பகுதியில் பாஜக மோசமான தோல்வியையே சந்தித்து உள்ளது.  பந்தனந்திட்டாவில் 7500 வாக்குகள் பெற்று கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது. பந்தளத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவில் பாஜகவுக்கு வெறும் 2 வாக்கு களும்,  பந்தனந்திட்டாவில் வெறும் 5 வாக்குகளும், புன்னப்புரா பகுதியில் வெறும் 9 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. 3 இடங்களிலும் சேர்த்து மொத்தமே வெறும் 16 வாக்குகள்தான் பெற்றுள்ளன. இது பாஜகவுக்குக் கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கேரள மாநிலத்தில் பாஜகவுக்குக் கிடைத்துள்ள வாக்குகள், வகுப்பு வாதத்தை ஊக்கு வித்து வரும் பாஜகமீது  மக்கள் வைத்துள்ள எண்ணத்தின் வெளிப்பாடே என்பதில் அய்ய மில்லை.

இந்தத் தகவலை அகில இந்திய அளவில் கொண்டு போவது அவசியம். கேரள மக்களின் உணர்வே அனைத்து மாநிலங்களின் உணர்வு என்ற எண்ணத்தை மேலும் மேலும் வளர்த்து எடுக்க வேண்டியது மதச் சார்பற்ற சக்திகள், சமூகநீதியாளர்களின் முக்கிய கடமையாகும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner