எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அதிகாரத்தைக் கேள்வி கேட்பவர்களை வாயடைக்கச் செய்வதற்கு மத்திய பிஜேபி அரசு முயற்சிப்பதாக ஆம்னெஸ்டி நிறுவனம் தெரி வித்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட நன் கொடையில் விதிமீறல் செய்யப்பட்டதாகக் கூறி பெங்களூருவில் உள்ள ஆம்னெஸ்டி இந்தியா அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.  இதனையடுத்து அதன் டுவிட்டர் பக்கத்தில் ஆம் னெஸ்டி கூறியிருப்பதாவது: "சமூக சேவை அமைப்புகளை பயத்தில் ஆழ்த்த அரசு விரும்புகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.  பெங்களூரு அலுவலகத்தில் சுமார் 10 மணி நேரம் சோதனை நடந்தது. 5 அமலாக்கத்துறை அதிகாரிகள், எங்களது அலுவலர்களின் மடிக் கணினிகளை அணைக்கச் சொல்லிக் கட்டளை யிட்டனர். தொலைப்பேசியைப் பயன்படுத்தவும் அவர்கள் அனுமதி அளிக்கவில்லை .

அதிகாரிகளுக்கு எங்களின் ஊழியர்கள் முழு ஒத்துழைப்பு அளித்தார்கள்" என்று கூறுகிறது பெங்களூரு ஆம்னெஸ்டி அலுவலகம்.

ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் இந்தியா அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஆக்கர் படேல், "எமர்ஜென்சி போன்ற அடக் குமுறைகள் இந்திய வரலாற்றின் மீது கறைபடியச் செய்திருக்கின்றன என்று மோடி சொல்வார். அந்தக் கருப்பு நாட்களின் நிழல் இப்போது இந்தியாவின் மீது படிய ஆரம்பித்துள்ளது. இது மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, அவற்றுக்காகப் போராடுபவர்களை அரசு குறி வைக்கிறது.

மனித உரிமைகளுக்கான அமைப்புகளை குற்றவியல் நிறுவனங்களாக நடத்தும்போக்கு அரசு அதிகாரிகளிடையே அதிகரித்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமலாக்கத் துறை, கடந்த 2011-2012-ஆம் ஆண்டில் ஆம்னெஸ்டி இண்டர் நேஷனல் இந்தியா, அதன் பிரிட்டன் அலுவலகத் தில் இருந்து வெளிநாட்டு நிதியைப் பெற அனுமதி கோரியது. வெளிநாட்டு நன்கொடை ஒழுங்கு முறைச் சட்டத்தின் கீழ் இதற்கு அனுமதி அளிக்கப் பட்டது. ஆனால் பாதுகாப்பு நிறுவனங்களின் எச்ச ரிக்கையை அடுத்து, நிதியுதவி கோரும் பெரும் பாலான ஆவணங்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டது. ஊடகங்கள் எல்லாம் முடக்கப்பட்டு வரு கின்றன; பிஜேபிக்கு ஆதரவாக இருப்போர் அமர்த்தப்படுவதற்கு நிர்ப்பந்தங்கள் கொடுக்கப் படுகின்றன; அரசு ஊடகங்களை பயன்படுத்தி பிரதமர் முழங்கோ முழங்கு என்று முழங்குகிறார்.

தட்டிக் கேட்டாலோ, தன்னாட்சி நிறுவனங்கள் கருத்துக்களைக் கூறினாலோ அக்குளில் தேள் கொட்டியது போல பாசிச பா.ஜ.க. ஆட்சி துடிக்கிறது. அடக்குமுறைகளை ஏவுகிறது.

நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் மல்லி கார்ஜூன கார்க்கே (காங்கிரஸ்) சொல்லியிருப்பது போல, இட்லரின் நாஜிசமும், முசோலினியின் பாசிசமும் இங்கு கைகோர்த்து நடனம் ஆடிக் கொண்டு உள்ளன. 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன் இந்த வகையில் கெடுபிடிகள் அதிகரிக்கக்கூடும்.

1976 எமர்ஜென்சியைக் குறைகூறும் பிரதமர் மோடி இப்பொழுது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை ஆட்சியை நடத்திக் கொண்டுள்ளார்.

மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner