எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மோடி பிரதமர் பதவி ஏற்றதிலிருந்து அவருடைய ஒவ்வொரு அசைவும் விளம்பர வெளிச்சத்துடன் இருந்து வருகின்றது. மதச் சார்பற்ற நாட்டின் பிரதமர் குறிப்பிட்ட மதப்பண்டிகைக்கு முக்கியத்துவம் அளித்து, அதிலும் ஆண்டுதோறும் அதற்குரிய விளம்பர வெளிச்சங்களைக் கொண்டு வருவதன்மூலம், அவருடைய இந்துத்துவா மனப்போக்கை எவரும் உணர்ந்து கொள்ளலாம். 2014 ஆம் ஆண்டில் சியாச்சின்  சிகரப் பகுதியிலும், 2015 ஆம் ஆண்டில் பஞ்சாப் எல்லையிலும், 2016இல் இந்தோ-திபெத்  எல்லையிலும், 2017இல் காஷ்மீர் குரேஷி பகுதியிலும் இராணுவ வீரர்களுடன் தீபாவளிப் பண்டிகையை பிரதமர் மோடி கொண்டாடினார். இராணுவத்தில் பல மதத்தினரும் இருப்பார்களே என்பதுபற்றியெல்லாம் பிரதமருக்குக் கவலையில்லை.

இந்த ஆண்டில் தீபாவளியைக் கொண்டாடுவதற்காக பிரதமர் மோடி கேதார்நாத்திற்கு  சென்றுள்ளார். அங்குள்ள சிவன் கோயிலில் வழிபாடு செய்கிறார். கேதார்நாத்திலிலுள்ள இராணுவ முகாமில் இராணுவத் தினருடன் தீபாவளிப் பண்டிகையை மோடி கொண் டாடுகிறார் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன. கடல் மட்டத்திலிருந்து 12,000 அடி உயரத்தில் உள்ள பகுதி கேதார்நாத் இராணுவ முகாம் உள்ள பகுதியாகும். இராணுவ வீரர்களுடன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்பது மோடியின் விருப்பம் என்று கூறியே அவருடைய பயணம் திட்டமிடப் படுகிறது.

ஆனால்,  குறைந்தபட்சம் செய்தியாளர்கள், ஊடகவியலாளர்களிடமாவது மக்களின் விருப்பங் களை தெரிந்துகொண்டு இந்த பிரதமர் பதவி வாய்ப்பைப் பயன்படுத்தி மக்களுக்கு செய்ய வேண்டியவற்றை செய்திருக்கலாம்.

டில்லியில் பிரதமர் இல்லம் அமைந்துள்ள சாலையிலேயே பல மாதங்களாக விவசாயிகள் போராடினார்கள். விவசாயிகள் கடன் பிரச்சினை, காவிரி நீர்ப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தியே விவசாயிகள் போராடினார்கள்.

மாநிலங்களில் மக்கள் தங்கள் வாழ்வாதார உரிமைகளுக்காகப் போராடாத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு போர்க்களமாக நாடே காட்சி அளிக்கிறது.

மாணவர்கள், இளைஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், மாற்றுக் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தொழி லாளர் பிரிவு கூட மோடியின் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதை அறியாதவரா பிரதமர் மோடி?

வரும் 2019 ஆண்டுடன் அவர் ஆட்சி நிறைவு பெற்று, அடுத்து 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மீண்டும் வாக்குக்காக மக்களைத்தானே அவர் சந்திக்க வேண்டும் என்பதை  நினைவில் கொண்டதாகத் தெரியவில்லை.

பி.ஜே.பி., சங்பரிவார்களின் யுக்தி என்று ஒன்று இருக்கிறது. சாதனைகள் என்று சொல்லிக் கொள்ளும் அளவில் இவர்களின் ஆட்சியில் ஏதுமில்லா வறிய நிலையில் மக்களின் கவனத்தையும், கருத்தையும் தங்கள் பக்கம் வைத்துக் கொள்ள மக்களிடம் மண்டிக் கிடக்கும் மதநம்பிக்கைகளை கையில் எடுத்துக் கொண்டு இதுபோன்ற வீண் காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளுவர் சிலை திறந்தால் காவிரியில் நீர் கரை புரண்டு ஓடுமா என்று எள்ளி நகையாடும் பார்ப்பன ஏடுகள் மோடியின் இத்தகு 'சித்து' விளையாட்டுக்களைக் கண்டு கொள்வதில்லை.

மோடி ஒரு பிற்படுத்தப்பட்டவர் என்றாலும் தந்தை பெரியார் கூறுவதுபோல நிஜப்புலியை விட வேஷம் போட்ட புலி அதிகம் குதிக்கும் என்பதற்கொப்ப பார்ப்பனர்களைவிட அதிகமாக இந்துத்துவாவைக் கையில் எடுத்துக் கொண்டு குதிக்கிறார்.

தொலைநோக்குக் கண்ணோட்டத்தில் இதெல்லாம் எடுபடாது; விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிர பிள்ளை பிழைக்காது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner