எழுத்துரு அளவு Larger Font Smaller Font

1. 470 நீர் நிலைகளில் தண்ணீர் பயன்படுத்த அருகதையற்றதாகி விட்டது.

2. எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் கிணறுகள், ஊற்றுகள் அடைபட்டு முற்றிலும் வறண்டு விட்டன.

3. கடற்கரையிலிருந்து 3 கடல்மைல்  தூரம் வரை மீன்கள் வரத்து முற்றிலும் நின்றுபோனது. 4. கடலில் பிடிக்கும் நண்டு உள்ளிட்ட ஓடுகளுடைய உயிரினங்கள், மீன்கள் போன்றவற்றின் உடம்பில் காரியம், ஈயம், பாதரசம் போன்றவைகள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

5. இவற்றை உண்ணுபவர்கள் விரைவில் பார்வைக்கோளாறு மற்றும் நரம்புத்தளர்ச்சி நோயால் பாதிக்கப்படுவார்கள்

6.  நகரத்தில் 10 பேரில் ஒருவருக்கு மூளை ரத்தக் கட்டி (பக்கவாதம்), இருவருக்கு நரம்பு கோளாறு, அய்ந்து பேருக்கு பார்வை தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. 7. கடற்கரையோரம் கால் நனைத்தால் காலில் அரிப்புகள் ஏற்படுவதாக நூற்றுக்கணக்கான புகார்கள் சுகாதார அலுவலகங்களுக்கு வந்துள்ளன. 8. மாநகராட்சியில் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படும் தொகை குறிப்பிட்ட மாதங்களில் 70 மடங்கு அதிகமாகிறது. 9. குடிநீரில் மாசு கலந்துவருவதால் அனைத்து ஏரிகளில் நீர் நிறைந்திருந்த போதிலும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. தண்ணீர் மங்கலாக வருமானால் அதை குடிக்கப் பயன்படுத்தவேண்டாம் என்று மாநகராட்சியே விளம்பரம் செய்யும் அவலம்! 10. நிகழ்ச்சி நடந்து முடிந்த பிறகு குறைந்த பட்சம் ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்படும். இதில் முக்கால்வாசி குப்பைகள் மறுசுழற்சிக்குப் பயன்படுத்த இயலாமல் எரியூட்டப்படுவதால் நகரில் பாதிப்பகுதியில் காற்று கடுமையாக மாசடைந்து வருகிறது.

மேலே உள்ள அனைத்தும்  பிள்ளையார் சதுர்த்தி முடிந்து நீர் நிலைகளில் பிள்ளையார் பொம்மை களைக் கரைப்பது தொடர்பாக விளையும் பேரபாயம் ஆகும். இந்த புள்ளிவிவரங்கள் மும்பை மாநகராட்சி வெளியிட்டது ஆகும்.

தற்போது இந்துத்துவ அமைப்புகள் சென்னை மாநகரின் சுற்றுப்புறச்சூழலை அழிக்கவும், நோயுற்ற மக்கள் வாழும் பகுதிகளாக மாற்றவும் ஆங்காங்கே பிள்ளையார் சிலைகளை வைக்க ஆரம்பித்து விட்டன. விநாயகர் என்ற இந்து மதக் கடவுளின் பிறப்பே ஆபாசமானது; ஆரியர்களின் நாகரிகம், அறிவு எந்தத் தரத்தில் இருந்தது - இருக்கிறது என்பதற்கான அடையாளமாகும்.

மகாராட்டிரத்தில் திலகர் என்ற தேசியத்திற்குள் புகுந்து இந்துத்துவாவைப் பரப்பியவர்தான் இந்த விநாயகனுக்கு ஒரு மகத்துவத்தை ஏற்படுத்தியவர். முஸ்லிம்களை எதிர்ப்பதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தியவர்.

அந்த வியாதி இப்பொழுது வேறு இடங்களிலும் பரவித் தொலை(க்)கிறது.  முன்பெல்லாம் விநாயக சதுர்த்தி அன்று விநாயகரைக் கடையில் வாங்கிப் பார்த்து விட்டு, வீட்டுப் புழக்கடையில் உள்ள கிணற்றில் வீசி எறிவார்கள். இப்பொழுது என்ன என்றால், அதற்கென்று ஊர்வலம் நடத்தி கடலிலும், மக்கள் பயன்படுத்தும் நீர் நிலைகளிலும் கரைக்க ஆரம்பித்து விட்டனர். அரசு எவ்வளவோ சொன்னாலும் இரசாயனம் சார்ந்த பொருள்களால் பிள்ளையார் உருவாக் கப்படுவதால், அந்தப் பொம்மைகளை நீரில் கரைக்கும் பொழுது நீர் மிகப் பெரிய அளவில் மாசு அடைகிறது.

அதுகுறித்து தான் மும்பை மாநகராட்சி ஆய்வின் அடிப்படையில் நீரில் கரைப்பதால் ஏற்படும் கேடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அரசு என்ன செய்யப் போகிறது?  பக்தர்களும் தான் என்ன செய்யப் போகிறார்கள் - ஒரு பக்தி அழிவுக்குப் பயன்படலாமா? சிந்திப்பீர்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner