எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஸ்காட்லாந்து மனிதநேய சங்கம், ஸ்காட்லாந்து நாட்டில் மக்களிடையே பகுத்தறிவு, அறிவியல் சிந்தனைகளை முன்னெடுத்து வருகிறது.

வளர்ந்து வரும் மனித நாகரிகத்துக்கும், அறிவுக்கும் பொருத்தமில்லாமல், காரண காரியங்கள் குறித்து கேள்வி எழுப்பக்கூடாது, மதம் சொல்வதை கேள்வி ஏதும் கேட்காமல் அப்படியே பின்பற்றிட வேண்டும் என்று கூறுவதுதான் மதக்கருத்துகளாக இருந்து வருகின்றன.

மதக்கருத்துகள் மக்களிடையே குழந்தை பிறப்பிலிருந்து, பெயர் சூட்டல், பெண்குழந்தைகள் பருவ வயதை எட்டுதல், மணவிழா, வீடுகட்டி குடிபோவது, இறப்புக்குப்பின்னரும் திதி, திவசம் கொடுப்பது என்கிற பெயரால் பிறப்பு முதல் இறப்பு வரை மட்டுமல்லாமல் இறப்புக்குப்பின்னரும் வேத மதமான இந்து மதத்தில் மட்டுமே மக்களை மதத்தின் பெயரால் பிடுங்கித் தின்பது - சுரண்டுவது - நடந்து வருகிறது.

பன்னாட்டளவில் கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கைகளால் மக்கள் சுரண்டப்பட்டு வருகிறார்கள். மத குருமார்கள், மத வழிபாட்டிடங்கள் மக்கள்மீது சுமத்தப்பட்ட சுமையாக காலம் காலமாக மக்களை சிந்திக்க விடாமல், தன்னம்பிக்கையுடன் வாழவிடாமல் வதை செய்து வருகின்றன.

இந்த சுரண்டல் ஜாதி இழிவிலிருந்தும், தேவையற்ற மத சடங்குகளிலிருந்தும் மக்களை விடுவிக்கின்ற வகையில் சுயமரியாதை இயக்கத்தை முன்னெடுத்து, தந்தை பெரியார் அறிமுகப்படுத்தியதுதான் சுயமரியாதை திருமணம்.

சுயமரியாதைத் திருமணத்தில் எவ்வித மதச் சடங்கும் கிடையாது. ஜாதி, மத மறுப்புத் திருமணங்களாகவும், சட்ட அங்கீகாரம் பெற்ற திருமணங்களாகவும் நடைபெற்று வருகின்றன.

இதேபோல், அய்ரோப்பிய நாடுகளிலும் பகுத்தறிவு கருத்துகள் பரவி வருகின்றன. மதமற்ற மனிதநேய திருமணங்கள் நடைபெற்று வருகின்றன.

ஸ்காட்லாந்து மனிதநேய சங்கம் (ஜிலீமீ பிuனீணீஸீவீst ஷிஷீநீவீமீtஹ் ஷிநீஷீtறீணீஸீபீ-பிஷிஷி) சார்பில் கிறித்துவ மதத் தொடர்பேதும் இல்லாத திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. ஸ்காட்லாந்து தேசிய ஆவணப்பதிவின்படி கடந்த ஆண்டில் மட்டும் ஸ்காட்லாந்து நாட்டில் கிறித்துவ சர்ச்சுகளில் நடைபெறும் திருமணங்களின் எண்ணிக்கையைவிட அதிக அளளவில் மதமற்ற மனிதநேய திருமணங்கள் 3,283 நடைபெற்றுள்ளன.

ஸ்காட்லாந்து மக்களிடையே ஏற்பட்டு வரும் மாற்றங்கள்குறித்த ஆண்டறிக்கையாக ஸ்காட்லாந்து தேசிய ஆவணப் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டன. நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வந்த மத நடைமுறைகள் வீழ்ந்துபோயின என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் நடைபெற்ற திருமணங்களில் (28,440) பாதியளவு வழமைக்கு மாறான திருமணங்களாகும்.

ஸ்காட்லாந்திலுள்ள கிர்க் சர்ச்சில் 1975ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையில் 16,849 திருமணங்கள் நடத்தப்பட்டன. அதே ஆண்டில் 13,906க்கும் மேற்பட்ட திருமணங்கள் சாதாரண விழாக்களாக நடந்தன.

மதமற்ற மனித நேய திருமண முறை 2005ஆம் ஆண்டில் சட்டரீதியாக செல்லும் என்று ஆனது.

கடந்த ஆண்டில் ஸ்காட்லாந்து மனிதநேய சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட மதமற்ற மனிதநேய  திருமணங்களின் எண்ணிக்கை 3,283. அதனுடன் ஒப்பிடுகையில், ஸ்காட்லாந்து சர்ச்சுகளில் நடைபெற்ற திருமணங்களின் எண்ணிக்கை 3,166ஆக குறைந்துவிட்டன.

1975ஆம் ஆண்டில் ரோமன் கத்தோலிக்க சர்ச்சுகளில் நடைபெற்ற திருமணங்களின் எண்ணிக்கை 6,002. ஆனால், கடந்த ஆண்டில் ரோமன் கத்தோலிக்க சர்ச்சுகளில் திருமணங்கள் 1,182 மட்டுமே நடந்துள்ளன.

கடந்த பலஆண்டுகளாகவே மதச் சார்புடைய திருமணங்களைவிட மதமற்ற மனிதநேய திருமணங்கள் அதிகமான அளவில் நடந்துள்ளன. 2017ஆம் ஆண்டில் மிகப்பெரிய அளவில் திருமணங்களை நடத்துகின்ற அமைப்பாக ஸ்காட்லாந்து மனிதநேய சங்கம் உள்ளது.

எந்த ஒரு  தனிப்பட்ட நம்பிக்கை அல்லது மதக்குழுக்களின் திருமணங்களைவிட, ஸ்காட்லாந்து மனிதநேய சங்கத்தின் மூலம் ஏராளமான எண்ணிக்கையில் திருமணங்கள் நடத்தப் பட்டு வருகின்றன.

ஸ்காட்லாந்து சோஷலிசக் கட்சியைச் சேர்ந்தவரான டாம்மி ஷெர்டியன் மனிதநேய சங்கப் பொறுப்பாளர்களுக்கு அவ்வப்போது தேவைப்படுகின்ற பயிற்சியை அளித்து வருவதாகக் கூறியுள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டில் மதமற்ற மனிதநேய திருமண நிகழ்வுகள் 8 விழுக்காட்டளவில் முந்தைய ஆண்டுகளைவிட அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் கிறித்துவ சர்ச்சுகளில் நடைபெற்ற திருமணங்களின் எண்ணிக்கை 14 விழுக்காட்டளவில் குறைந்துள்ளது.

ஸ்காட்லாந்து கிறித்துவ சர்ச் ரெவரண்ட் நார்மன் ஸ்மித் கூறியதாவது:

“எங்களுடைய சர்ச்சுபோன்று, பல்வேறு சர்ச்சுகளிலும் பெரும்பான்மையாக மத நம்பிக்கை அடிப்படையிலான திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. ஸ்காட்லாந்தில் இன்றும் கிறித்துவ நம்பிக்கை இருந்து வருகிறது. மதச்சார்பின்மை வளர்ந்து வருகின்ற அதேநேரத்தில் சிலர் இன்னமும் மத விழாக்களை தேர்ந்தெடுத்து வருகிறார்கள். பலரும் நம்பிக்கை அடிப்படையில் அவர்களின் வாழ்வில் முக்கிய நிகழ்வுகளை நடத்திவருகிறார்கள்’’ என்று சமாதானம் கூறிக் கொண்டுள்ளார்.

ஸ்காட்லாந்து மனிதநேய சங்கத்தின் இயக்குநர் லின்சி கிட் கூறியதாவது: வாழ்வில் இணைகின்ற இணையருக்கு அவர்களின் மணவிழா என்பது மிகவும் முக்கியத்துவம் மிக்கது என்பதையும், அவர்களின் நம்பிக்கைகளையும், மதிப்புகளையும் நாங்கள் அறிவோம். ஸ்காட்லாந்து மக்களிடையே மத அடையாளங்கள் மறுக்கப்பட்டு, அதன் பிரதிபலிப்பாக மதமறுப்பு மனிதநேயத் திருமணங்களின் எண்ணிக்கை பெருகிவருகிறது.

உலகம் என்பது இனி பகுத்தறிவு வாசல் கதவைத் திறக்கும் புதுமைப் பூங்கா என்பதில் அய்யமில்லை. ஆம், ஸ்காட்லாந்திலும் தந்தை பெரியார் குரல் ஒலிக்கத் தொடங்கி விட்டது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner