எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சமீபகாலமாக வட இந்தியாவில் மத மறுப்பு, மற்றும் ஜாதி மறுப்புத் திருமணங்கள் கடுமையாக எதிர்க்கப்படுகின்றன. ஜாதிமறுப்பு மதமறுப்பு திருமணம் செய்தவர்கள் கடுமையாக தாக்கப்படுகின்றனர். திருமணம் செய்பவர்களின் வீடு களுக்குச் சென்று இந்துத்துவ அமைப்பினர் வன்முறையில் ஈடுபடும் அளவிற்கு ஆபத்து  அதிகரித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத்தில் கடந்த  ஜூலை 23-ஆம் தேதி சாகில்கான் என்பவர் பிரீத்திசிங் என்ற பெண்ணை அவரது வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். தங்களது திருமணத்தை, திருமணப் பதிவு அலு வலகத்தில் பதிவு செய்யவந்த போது அங்கு வந்த பஜ்ரங்தள் மற்றும் சில இந்து அமைப்பினர் சாகில் கானை கடுமையாகத் தாக்கியுள்ளனர். சாகில்கானை இந்து அமைப்பினர் தாக்கும் போது அலுவலகத்தில் பாதுகாப்பிற்காக நின்றிருந்த காவல் துறையினர் அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர். இதை தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பின.

சாகில்கான் ஒரு கணினி மென்பொறியாளர் ஆவார். அவர் போபாலைச் சேர்ந்தவர், அவர் டில்லிக்கு அருகில் உள்ள நொய்டா என்ற நகரில் உள்ள ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். அப்போது அதே நிறு வனத்தில் பணிபுரிந்த பிரீத்தி சிங்குடன் காதல் ஏற்பட்டு இருவரும் அவரவர் வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்ததில் இருந்தே பிரீத்தி சிங்கின் சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலம், பிஜ்னூர் என்ற பகுதியைச் சேர்ந்த இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். மேலும் பிரீத்திசிங்கின் வீட்டிற்கும் சென்று அவருடைய குடும்பத் தினரையும் மிரட்டியுள்ளனர். இதனால்  அக்குடும்பத்தினர் காசியாபாத் நகரில் வசித்துவரும் காகில்கான் வீட்டிற்கு வசிக்க வந்துவிட்டனர். இந்த நிலையில் இருவருக்கும் காசியாபாத்தில் திருமணம் முடிந்துவிட்டது. திருமணத்தை போபாலில் பதிவு செய்வதைவிட காசியாபாத்தில் பதிவு செய்வது எளிது என்ப தற்காக இருவரும் காசியாபாத் திருமணப் பதிவு அலுவலகத் திற்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்துத்துவ அமைப்பினர், இவர்கள் திருமணம் செய்துகொண்டு அதைப் பதிவு செய்யச் செல்லும் விவகாரம் தெரிந்த உடன் திருமணப் பதிவு அலுவலகம் வந்து அவரைத் தாக்கியுள்ளனர். திருமணப்பதிவு அலுவலகம் காசியாபாத் நீதிமன்ற வளாகத்தில்தான் உள்ளது. பாதுகாப்பு மிகுந்த பகுதியிலேயே மதமறுப்புத் திருமணம் செய்தவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் நேரடியாக அனைத்துத் தொலைக் காட்சிகளிலும் ஒளிபரப்பான பிறகு தாக்குதல் நடத்தியதாக கூறிய இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும் அவர்கள் சாகிலுக்கும், எங்களுக்கும் சொந்த தகராறு இருந்தது ஆகவே சாகிலைத் தாக்கினோம் என்று கூறியுள்ளனர். இதையே நீதிமன்றத்தில் காவல்துறையினரும் கூறியுள்ளனர். காவல்துறை சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் சாகில் என்பவர் தனது வாகனத்தை முன்னால் வந்த வாகனத்தின்மீது மோதியுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் அவர் தாக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளனர்.

தொலைக்காட்சியில் இந்துத்துவ அமைப்பினர் முழக்க மிட்டுக் கொண்டு சாகிலைத் தாக்குவதை நேரடியாக காட்டியபின்பும் காவல்துறையே முன்னின்று குற்றவாளிகளைக் காப்பாற்றிவருகிறது.  இது ஜாதிமறுப்புத் திருமணம் மற்றும் மதமறுப்புத்திருமணத்தை எதிர்க்கும் இந்துத்துவ சக்திகளுக்கு பாஜக அரசே முன்னின்று ஊக்கம் கொடுத்து உற்சாகப் படுத்துகிறது என்பதை இது வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மற்றும் கிழக்கு ராஜஸ்தானின் பஜ்ரங் தள் அமைப்பின் முக்கிய பிரமுகரான ராஜேந்திர சிங் பர்மார் இது தொடர்பாக தனியார் செய்தி அமைப்பு ஒன்றுக்குப் பேட்டியளித்த போது நாங்கள் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள அனைத்துக் கிளைகளுக்கும் சுற்றறிக்கை விட்டுள்ளோம் உங்கள் ஊரிலோ அல்லது நகரத்திலோ இந்துப் பெண்கள், இஸ்லாமியர்களை திருமணம் செய்ய முற்பட்டாலோ அல்லது  நீதிமன்றம், திருமணப் பதிவு அலுவலகம் சென்று திருமணம் செய்ய முயன்றாலோ எங்களுக்குத் தெரிவியுங்கள், மேலும் அந்தப்பெண்ணின் குடும்பத்தினரிடம் தொடர்புகொண்டு திருமணத்தை தடுக்கப் பாருங்கள் என்று சுற்றறிக்கை விட் டுள்ளோம்; மேலும் நீதிமன்றம், திருமணப் பதிவு அலுவ லகங்களில் எங்களது ஆட்கள் பணிபுரிகின்றனர்; அவர்கள் எங்களுக்கு தகவல் தெரிவித்துவிடுவார்கள் கடந்த 2 ஆண்டுகளில் 400-க்கும் மேற்பட்ட திருமணங்களை தடுத்து நிறுத்தியுள்ளோம் மேலும் அந்த அந்தப் பகுதியின் பாஜக சட்டப் பேரவை உறுப்பினர்கள் எங்களுக்கு பிரச்சினை ஏற்படாதாவாறு பார்த்துக்கொள்வார்கள் என்றும் கூறினார்.

பஜ்ரங்தள், விசுவ இந்துபரிஷத்தின் இளைஞர் அமைப்பு ஆகும். இந்த அமைப்பின் மற்றொரு பிரமுகரும் வடக்கு உத்தரப்பிரதேச விசுவ இந்துபரிஷத் அமைப்பின் பிரபல தலைவருமான பால்ராஜ் தோன்கர் கூறும் போது, நாங்கள் நகரங்களில் படித்த இந்துப்பெண்களின் வீட்டிற்குச் சென்று மதமாற்று திருமணம் செய்யும் நபர்கள் குறித்து விசாரணை நடத்துவோம், மேலும் நாளிதழ்களில் வரும் விளம்பரங்களில் மாற்று மதங்களைச் சேர்ந்த மணமக்கள் பெயர் இருந்தால் நாங்கள் திருமணம் நடைபெறும் இடத்திற்கே சென்று விசாரணை நடத்துவோம், வேண்டுமென்றால் நாங்கள் துணைக்கு காவல்துறையினரையும் அழைத்துச்செல்வோம் காவல்துறையினரும் எங்களுக்கு உதவி செய்வார்கள் என்று கூறினார்.

இந்தத் தகவல்கள் உணர்த்துவது என்ன? அரசமைப்புச் சட்டத்தைக் காலில் போட்டு மிதிக்கும் இந்துத்துவா ஆட்சி நடைபெறுகிறது. எச்சரிக்கை! எச்சரிக்கை!!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner