எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

உத்தரப்பிரதேசத்தின் கல்யாண் சிங் அமைச் சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தவரும், "அகில பாரதீய பிராமண மகாசம்மேளன்" என்ற அமைப்பின் தேசியதலைவருமான கே.சி. பாண்டே உத்தரப்பிரதேசம் நொய்டாவில் நடந்த மாநாடு ஒன்றில் பேசியதாவது:

"அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் தேதி அன்று இட ஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து நாடு முழுவதும் முழு அடைப்பு நடத்தவிருக்கிறோம்" என்று கூறினார்.  "அகில பாரதீய பிராமண மகாசம்மேளன்" மற்றும் உயர்ஜாதி அமைப்பினரின் உள்ளரங்க மாநாடு உத்தரப்பிரதேசம் நொய்டாவில் நடைபெற்றது, இந்த மாநாட்டிற்கு தலைமை வகித்த முன்னாள் அமைச்சர் கே.சி. பாண்டே கூறியதாவது, "இட ஒதுக்கீட்டால் நாடு நாசமாகிக்கொண்டு இருக்கிறது, தேசத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றால் இட ஒதுக்கீடு முறையை ஒழித்துக்கட்டவேண்டும், இதற்காக ஏப்ரல் 14 ஆம் தேதி நாடுமுழுவதும் முழு அடைப்பை அறிவித்துள்ளோம், இதற்கு இந்திய நாட்டின் வளர்ச்சியை ஆதரிக்கும் அனைவரும் ஆதரவு தரவேண்டும், இட ஒதுக்கீடு என்பதை தேசத் துரோகத்தை ஒட்டியே ஒன்றாகவே பலர் பார்க்கிறார்கள், அதில் நியாயமும் உள்ளதாகத் தெரிகிறது.

பிராமண  மகாசபா, பரசுராம் சேனா, விஷ்வ பாரதிசேனா, வஷிட்ட மகாசபா உள்ளிட்ட பல அமைப் புகள் எங்களுக்குத் தங்கள் ஆதரவைத் தந்துள்ளன. இந்த அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக அதி காரமிக்க அரசியல் அமைப்பு ஒன்றைக் கொண்டுவர வலியுறுத்துகிறது.  அதே நேரத்தில் நீண்ட ஆண்டுகளாக பிராமணச் சமுதாயத்திற்கு வலுசேர்க்கும் வகையில் அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கவேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் முந்தைய காங்கிரசு, இன்றைய பாஜக அதற்கு செவிசாய்க்கவில்லை. இம்முறையும் பிராமணர்களுக்கான அதிகாரமிக்க அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்காவிட்டால் நாட்டிலுள்ள பிராமணர்கள் அனைவரும் நோட்டோவிற்கு வாக்களிப்பார்கள். நாடு முழுவதும் உள்ள தேசநலன் கொண்ட பல அமைப்புகள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஆகையால் ஏப்ரல் 14 ஆம் தேதியன்று வெற்றிகரமாக எங்கள் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்திக் காட்டுவோம்" என்று கூறினார்.

இடஒதுக்கீட்டைப் பார்ப்பனர்கள் எதிர்ப்பது ஒன்றும் புதிதல்ல. 1928இல் நீதிக்கட்சி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட காலந் தொட்டு இந்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டு தானிருக்கின்றனர். சென்னை மாநிலத்தில் 1928 முதல் செயல்பாட்டில் இருந்து வந்த இடஒதுக்கீட்டினை - சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்ததும் வராததுமாக நடந்த  முதல் காவு சென்னை மாநிலத்தில் இருந்து வந்த இடஒதுக்கீட்டுக்குத்தான்.

தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடே பொங்கி எழுந்து, முதன் முதலாக இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துமாறு செய்யப்பட்டது.

பிற்படுத்தப்பட்டவர்களுக்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 340ஆம் பிரிவுப்படி கொண்டு வரப்பட்ட காகா கலேல்கர் ஆணையத்தின் பரிந்துரைகள் வெளிச்சத்துக்கு வராமலே இருட்டறையில் வைத்துப் பூட்டப்பட்டன.

பி.பி. மண்டல் தலைமையில் அமைக்கப்பட்ட இரண் டாவது ஆணையத்தின் பரிந்துரைகளைப் பெறுவதற்குப் பத்தாண்டுகள் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் திராவிடர் கழகம் நடத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

ஒவ்வொரு கட்டத்திலும் பார்ப்பனர்கள் முட்டுக் கட்டை போட்டனர் - ஏன் உண்ணாவிரதமே இருந்தனர். அதனை எதிர்த்து உண்ணும் விரதத்தை திராவிடர் கழகம் அறிவித்து அது முறியடிக்கப்பட்டது.

இப்பொழுது மீண்டும் இடஒதுக்கீட்டை ஒழிக்கப் பார்ப்பனர்கள் பூணூலை முறுக்கிக் கொண்டு புறப் பட்டுள்ளனர்.  ஆனால் இதே பார்ப்பனர்கள் மாநாடு கூட்டி தங்களுக்கும் இடஒதுக்கீட்டு தேவை என்று கோரிக்கை வைக்கிறார்களே அது எப்படி? ஏனிந்த முரண்பாடு?

9.3.1946இல் சேலத்தில் கூடிய பார்ப்பனர்கள் மாநாட் டில் பங்கேற்ற சர். சி.பி. இராமசாமி அய்யர் பார்ப் பனர்களுக்கு ஓர் அறிவுரை கூறினார்.

"வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தால் அரசியல் நிர் வாகத்தில் தகுதியும், வினைத் திட்பமும் (விமீக்ஷீவீ ணீஸீபீ ணியீயீவீநீவீமீஸீநீஹ்) கெடலாயின" என்ற பல்லவியினை நீங்கள் பாடப்பாட பிராமணரல்லாதாரின் மனதைப் புண்படுத்து வதுமின்றி அவர்கள் பகைமையையும் கொள்கிறீர்கள்" என்று சொன்னதை நினைவூட்டுகிறோம் - எச்சரிக்கை!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner