எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்த உயிர் இந்த வயதிலும் சாகாமல் இருக்கிறதென்றால் மணியம்மையால் தான் என்பது யாருக்குத் தெரியாது? எனது உடம்புக்கு ஏற்ற உணவு பக்குவப்படி கொடுப்பது, உடை மாற்றுவது எல்லாம் அந்த அம்மாதானே!

('விடுதலை', 13.2.1963)

அன்னையார் வாழியவே!

அன்னை மணியம்மையார்தம் பிறந்த நாள்

அய்யாவின் ஆயுளை நீட்சி செய்த

அம்மாவின் தொண்ணூற்று ஒன்பதாம் ஆண்டு

பிறந்த நாளை பீடுறக் கொண்டாடுவோம்!

தந்தையை  வாழவைத்த செவிலித் தாய்

தன் உடல் நலனைப் பேணாதது ஏன்?

தன்னலம் என்று தனக்குத்தானே

தாழ்ப்பாள் ஒன்றைப் போட்டுக் கொண்டாரோ!

கூப்பிட்டால் வந்து விடுவார்

கொடுத்தால் சாப்பிட்டு விடுவார்

குழந்தை போன்றார் பெரியாரென்று

குழந்தையைக் கண்ணிமையாகக் காத்த

கொள்கைத் தாயே மணியம்மையார்

தந்தையைக் காத்தது போலவே

தந்தையின் மறைவிற்குப் பின்

கழகத்தையும் கட்டிக் காத்த

காவியத் தலைவர்

தோற்றத்திலோ அமைதியின் உருவம்

போர்க் களத்திலோ புலியின் வடிவம்

நெருக்கடி நிலை என்னும் மலையை

நெட்டித் தள்ளிய நெருப்பின் சீற்றம்

இராவண லீலா நடத்திக் காட்டி

இந்தியத் துணைக் கண்டத்தையே

திரும்பிப் பார்க்கச் செய்த கூற்றம்

நீதிமன்றம் வரை சென்று - அதன்

நியாயத்தை எடுத்துக் கூறி

வெற்றிமாலை சூட்டிய தேற்றம்

எளிமைக்கு இவர்தான்

இலக்கணச் சுருதி

வலிமை உண்டு

உள்ளத்திலோ உறுதி

நாத்திக இயக்கத்திற்குத் தலைமையேற்ற

நாடு போற்றும் ஒரே உலகப் பெண்மணி

நமது அன்னையார் எனும் பெரும் பணி

நாடெங்கும் அவர் வீரத்தைப் பறைசாற்றுவோம்

நாம் பெற்ற பெருமையென்று தோள் தட்டுவோம்

அடுத்தாண்டு நூற்றாண்டின் தொடக்கம்

அகிலத்திற்கே கேட்கட்டும் நமது முழக்கம்

அன்னையார் வாழிய வாழியவே

அய்யா கொள்கை ஓங்குக ஓங்குகவே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner