எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

நாடு முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் நீதிபதிபகளாக மிகக் குறைந்த அளவிலேயே உள்ளனர். மாநிலங்கள் கீழமை நீதிமன்றங்களில் பணியாற்றும்  நீதிபதிகள் குறித்த புள்ளிவிவரம் அளிக்குமாறு மத்திய சட்ட அமைச்சகம் சார்பில் கோரப்பட்டது. அதன்படி, மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டவர்கள்,தாழ்த்தப்பட்டவர்கள்,பழங்குடி யினத்தவர்கள் என இடஒதுக்கீட்டின்படி நியமிக்கப்பட வேண்டிய விகிதாச்சாரத்தில் நீதிபதிகள் நியமிக்கப் படவில்லை எனும் விவரம் தெரிய வந்துள்ளது.

அதன்படி 11 மாநிலங்கள் அளித்த தகவலின்படி, இந்திய மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்ட வகுப் பினர் உள்ள விகிதாச்சாரத்தைவிட மிகக்குறைந்த அளவிலேயே 12 விழுக்காட்டளவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்தவர்களும், 14 விழுக்காட்டுக்கும் குறைவாக தாழ்த்தப்பட்டவகுப்பினரும், சுமார் 12 விழுக்காட்டளவில்  பழங்குடி வகுப்பினரும் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதி களாக  பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை புள்ளிவிவரங் களின்படி, தாழ்த்தப்பட்டவர்கள் 16.6 விழுக்காட்டளவிலும், பழங்குடி வகுப்பினர் 8.6 விழுக்காட்டளவிலும் உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் உள்ள பணி யிடங்களில் இட ஒதுக்கீட்டு முறையை முழுமையாக கடைப் பிடிக்காத காரணத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினத்தவர்கள்  போதுமான எண்ணிக்கையில்  பணிநியமனம் செய்யப்பட வில்லை.

நாடுமுழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் பணிநியமனங்களில் சில இடங்களில்இடஒதுக்கீட்டின்படியும்,பலஇடங்களில்இட ஒதுக்கீடுபின்பற்றப்படாமலும்பணிநியமனங்கள்நடை பெற்றுவந்துள்ளன.இன்னும்சிலமாநிலங்களில்உயர் நீதிமன்றங்களில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினத் தவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் இடஒதுக்கீட்டின்படி நிய மிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும், இடஒதுக்கீட்டின்படி நியமிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சொற்பமாகவே இருந்துவந்துள்ளது.

நாடுமுழுவதும் உள்ள 24 உயர்நீதிமன்றங்களில் தாழ்த் தப்பட்டவர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள்  மற்றும்பெண்கள்இடஒதுக்கீட்டின்படிநியமனம்செய்யப் பட்டவர்கள் மற்றும் தற்போது பணியில் உள்ளவர்கள்குறித்த விவரங்களை அளிக்க வேண்டும் என்று கோரி  உயர் நீதிமன்றங்களின் பதிவாளர்களுக்கு மத்திய அரசு ஒரு கடிதத்தை கடந்த நவம்பர் மாதத்தில் எழுதியிருந்தது.

கீழமை நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதிகளாக 16,693 நீதிபதிகள் தற்போது பணியாற்றிவருகின்றனர்.  11 மாநிலங்களில்நியமனம்செய்யப்பட்டநீதிபதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள்,பழங்குடியினத்தவர்கள்,பிற்படுத்தப் பட்டவர்கள் எண்ணிக்கை 3,973. இதில் கீழமை நீதிமன் றங்களில் மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதிகளுக்கான மொத்த பணியிடங்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை.

நீதித்துறை பணியிடங்களை நிரப்புவதில் இடஒதுக் கீட்டுக்கொள்கை எல்லா மாநிலங்களிலும் பின்பற்றப்படுவது கிடையாது. இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுகின்ற மாநிலங்களிலும் மாவட்ட நீதிமன்றங்களில், நீதித்துறை உயர்பதவிகளில் பணிநியமனத்தின்போது இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படாத நிலை உள்ளது.

நீதித்துறை உயர் பதவிகளில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினத்தவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டுமுறை பின்பற்றப்பட்டாலும், மொத்த பணி நியமனங்களில் குறைந்த அளவிலேயே இருக்கின்றன.

இடஒதுக்கீடு பின்பற்றப்படுகின்ற மாநிலங்களிலிருந்தே புள்ளிவிவரங்கள் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப் பப்பட்டுள்ளன.

அடுத்தது பெண்களுக்கு அளிக்கப்படுகின்ற இடஒதுக் கீடு முக்கியமானதாகும். ஏற்கெனவே ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி, கீழமை நீதிமன்றங்களில் ஒட்டுமொத்தாக 28 விழுக் காட்டளவில் பெண் நீதிபதிகள் உள்ளனர். நாடுமுழுவதும உள்ள 24 உயர்நீதிமன்றங்களில் 10 விழுக்காட்டளவிலும், உச்சநீதிமன்றத்தில் 4 விழுக்காட் டளவிலும் பெண்கள் நீதிபதிகளாக உள்ளனர்.

உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் மகாராட்டிரா போன்ற பெரிய மாநிலங்களில் நீதிபதிகள் நியமனங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட் டோருக்கான இட ஒதுக்கீடுகுறித்த தகவல்கள் வெளியாக வில்லை.  இன்னும் சில மாநிலங்களால் அளிக்கப்பட்ட விவரங்களும் தெளிவில்லாமல் உள்ளன.

நீதித்துறையில் ஒதுக்கப்பட்ட பிரிவினராக உள்ள பெண்களுக்கு அதிக அளவில் பிரதிநிதித்துவம் அளிக் கப்படவேண்டும் என்று கோரிக்கை வந்தபோதிலும், மக்கள் தொகைக்கேற்ப பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லை என்பதே உண்மை.

நான்கு தூண்கள் என்று கூறப்படுவதில் ஒன்றான நீதித் துறையில் நீதிபதிகள் நியமனத்தில் காலம் காலமாக வாய்ப்பு மறுக்கப்படும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான் மையினர்களுக்கும், பெண்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் இல்லாவிட்டால், இங்கே சமூகநீதி மறுக்கப்படுவதாகத்தான் பொருள். நீதித்துறையிலும் சமூகநீதி இட ஒதுக்கீடு தேவை என்ற நமது தொடர் குரலில் உள்ள நியாயம் இப்பொழுது புரிகிறதா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner