எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மத்தியில் பாஜக அரசு அமைந்த 2014ஆம் ஆண்டு தொடக்கம் முதல் நாடு முழுவதும் மாட்டிறைச்சியின் பெயரால் இந்துத்துவா வன்முறையாளர்களால் சிறு பான்மை மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களைக் குறி வைத்துத் தாக்குதல்கள், கொலை அச்சுறுத்தல்கள், கொலைகள் நிகழ்த்தப்பட்டு வந்தன. சட்டம் சங்பரிவார்க் கைக்குள் சரண் புகுந்தது.

கடந்த மே மாதம் 23 ஆம் நாளன்று மத்திய அரசு இறைச்சிக்காக  கால்நடைகளை சந்தைகளில் விற் பனை செய்வதற்கு தடை விதித்தது. தடைபோடும் சட்டம் இந்துத்துவாக் கொள்கைகளைத் திணிக்கின்ற நடவடிக் கையே என்று எதிர்க்கட்சிகள் உள்பட பல தரப்பிலிருந்தும் கடும் கண்டனம் வெடித்த நிலையில், நீதிமன்றம் மத்திய அரசின் சட்டத்துக்குத் தடை விதித்தது. இருப்பினும் மத்திய அரசு அந்தத் தடை அறிவிப்பைத் திரும்பப் பெறாமல் இருந்தது.

இம்மாதத்தில் குஜராத், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெறும் நிலையில், தடையை விலக்கிக் கொண்டுள்ளது.

மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத் தின் மூத்த அலுவலர் கூறியதாவது:

“இறைச்சிக்காக கால்நடைகளை சந்தைகளில் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையால் பல்வேறு பிரச் சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும், ஆகவே தடையை விலக் கிக்கொள்வதற்காக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டு மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சக அலுவலகத்திலிருந்து சட்ட அமைச்சகத்துக்கு ஆவணம் அனுப்பப்பட்டுள்ளது. தடையாணையை எப்போது திரும்பப் பெறுவது என்று இன்னமும் முடிவு செய்யவில்லை’’ என்றார். கடைசி செய்தி - அந்த சட்டம் வாபஸ் பெற்றாகி விட்டது என்பதுதான்.

விவசாய பயன்பாடுகளில் உள்ள கால்நடைகளை சந்தைகளில் விற்பனை செய்வது மற்றும் விலை கொடுத்து வாங்குவதற்கு தடை விதித்த மத்திய அரசுக்கு விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விவசாயிகளால் வளர்க்கப்படுகின்ற கால்நடைகளின் பயன்பாட்டுக் காலத்தைத் தாண்டி, வேறு வகைகளில் எவ்வித பயனையும் அளிக்க முடியாத கால்நடைகளை விவசாயிகள் சந்தைகளில் விற்பனை செய்கிறார்கள். அதன்பின்னர் அவை இறைச்சிக்கூடத்துக்கு கொண்டு செல்லப்படும்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் முதல் முறையாக சந்தைகளில் விற்பனை செய்வதற்கு கால்நடைகளுக்கான தடை யாணை திரும்பப்பெறப்படும் என்றார். அமைச்சர் கூறியபோது, “கால்நடைகளை துன்புறுத்துவதை தடுப்ப தற்கு கால்நடைகள் ஒழுங்குமுறை ஆணைய விதிகள் உள்ளன. ஆனால், அவ் விதிகள் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ இறைச்சிக் கூடங்களையோ, விவ சாயிகளையோ, மக்களின் உணவுப் பழக்கத்தையோ பாதிப்பதாக இருக்கக்கூடாது’’ என்றார்.

சந்தைகளில் கால்நடை விற்பனை செய்வதை தடை செய்வது குறித்து மத்திய சுற்று சூழல் துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களின் கருத்துகளையும் கேட்டு சுற்றறிக்கை அனுப்பியது.

மத்திய சுற்று சூழல்துறை அமைச்சகம்  இரண்டு வகையிலான சுற்றறிக்கைகளை மாநிலங்களுக்கு அனுப்பியது. சந்தைகளில் கால்நடை விற்பனைக்கு மத்திய அரசு விதித்த தடையாணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்தது. அதனையடுத்து, ஏற்கெ னவே வெளியிடப்பட்ட தடை அறிவிப்புடன் இணைத்து புதிய வரைவுக்கான கருத்துகளை அளிக்குமாறு கோரியது. மேலும், விலங்குகள் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள், வணிகர்கள் ஆகியோருடனும் இப்பிரச்சினை குறித்த மத்திய சுற்று சூழல் துறை அமைச்சகம் கலந்து ஆலோசித்தது.

மத்திய அரசின் சந்தைகளில் கால்நடை விற்பனைத் தடை அறிவிப்புக்கு கேரளா, மேற்கு வங்கம், மேகாலயா போன்ற மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்ததன் காரணமாக மத்திய அரசு தன் நிலைப்பாட்டில் மாற்றம் செய்துள்ளது.

கால்நடைகள் சந்தைகளில் விற்பனைக்குத் தடை விதித்து அறிவிக்கப்பட்ட மத்திய அரசின் உத்தரவை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று  கடந்த மே மாத இறுதியில் சென்னை உயர்நீதிமன்றமும் தடை விதித்தது.   சந்தைகளில் கால்நடைகளை விற்பனைக்குக் கொண்டு வருபவர்கள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட மாட்டாது என்று எழுத்து மூலமாக குறிப்பிட வேண்டும் என்று மத்திய அரசு விதித்த சட்ட விதி 22(பி)(3) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசின் உத்தரவுக்கு போட்ட தடையைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மாதத்தில் உச்சநீதிமன்றம் நாடு முழுமைக்கும் கால்நடைகளை சந்தைகளில் விற்பனை செய்வதற்கு மத்திய அரசின் உத்தரவுக்கு தடையை நீட்டித்து உத்தரவிட்டது. மத்திய சுற்று சூழல் துறை மற்றும் வனத்துறை அமைச்சகம் சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பல்வேறு காரணங்களால் சந்தைகளில் கால்நடைகள் விற்பனை தொடர்பான உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது.

வெகு மக்களின் உணர்வுக்கும், உணவுக்கும் எதிராகக் கொண்டு வரப்படும் எந்தச் சட்டத்திற்கும் இறுதியில் இது தான் கெதி.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner