எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

வரலாற்று ரீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு குறிப்பிட்ட  கால வரையறைக்குள்தான் இருக்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் குறிப்பிட்டதாக ஜக்கி வாசுதேவ் சமூகநீதிக்கு எதிரான கருத்தை கக்கியுள்ளார்.

அய்தராபாத்தில் எஃப்அய்சிசிஅய் பெண்கள் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவ், நாடாளுமன்ற உறுப்பினர் கவிதா பங்கேற்றனர்.

ஆன்மிகப்பணிகளில் குருவாக பெண்கள் இல் லாத நிலையில், பெண்கள் எந்த அளவுக்கு முன் வருவார்கள்? என்று கவிதா ஆகியோர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து ஜக்கி வாசுதேவ் பேசுகை யில்,

‘‘பாலின ரீதியில் உங்களை அடையாளப்படுத்திக் கொண்டால், வாழ்க்கையில் பெரிதாக என்ன நடந்துவிடப் போகிறது? ஈசா அறக்கட்டளையில் 70 விழுக்காடு பெண்கள் உள்ளதற்குக் காரணம் அங்கு இடஒதுக்கீட்டை நான் நடைமுறைப்படுத்தவில்லை. பாலினத்தைப் பார்க்காமல் பொறுப்புகளை அளித் துள்ளேன். பெண்கள் போதுமான அளவுக்கு வர வேண்டுமானால், 15 முதல் 20 ஆண்டுகள் ஆகும்‘’ என்று பேசினார்.

நதிகளை இணைப்பதற்குப் பரப்புரை செய்வது போல் எப்போதாவது பெண்கள் இடஒதுக்கீட்டுக்காக பரப்புரை செய்துள்ளீர்களா? என்று கேட்டபோது,

அதற்கு ஜக்கி வாசுதேவ் பதில் அளிக்கையில், “அம்பேத்கர் இடஒதுக்கீட்டை கொண்டுவந்தபோது, வரலாற்று ரீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு குறிப்பிட்ட  கால வரையறைக்குள்தான் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். நம் நாடு 70 வயதில் உள்ளது. முதல் 50 ஆண்டுகளில் நம் முடைய வாழ்வாதாரங்களுக்காக துணிவுடன் ஒன்றுபட்டு நின்றோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் வளர்ச்சி நிலைகளை நிறுத்தி விட்டோம். அதனால், பெண்கள் உரிய வாய்ப்புகளைப் பெறுவதில் இன்னும் 15 முதல் 20 ஆண்டுகள் ஆகும்’’ என்றார்.

சாமியார் போர்வையில் வனப்பகுதிகளை ஆக்கிரமித்து, இயற்கை வளங்களை சேதப்படுத்திய குற்றவாளியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவரான ஜக்கிவாசுதேவ் Ôஈஷா யோகாÕ என்கிற பெயரில் பிரதமர் மோடியை அழைத்து நிகழ்ச்சி நடத்தி,  அதிகார வர்க்கம் தனக்குத் துணை யாக இருக்கிறது என்கிற ஆணவப்போக்கில் செயல் பட்டு வருகிறார்.

தற்போது சமூக நீதிக்கு அடிப்படையான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கருத்தைத் தெரிவித்துள்ளதன் மூலம், ஆர்.எஸ்.எஸ். - பாஜக, இந்துத்துவா குரலை ஒலிக்கத் தொடங்கியுள்ளார்.

இப்பொழுது மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசு, கார்ப்பரேட்டுகள் மற்றும் சாமியார்களோடு கூட்டணி வைத்துக்கொண்டு ஆட்சியை நடத்திக் கொண்டு வருகிறது.

‘மோட்சக் கதவைத் திறந்து காட்டவேண்டிய’ சாமியார்கள், இட ஒதுக்கீட்டைப்பற்றிப் பேசுகிறார்கள்.

வருமான வரி ஏமாற்றிய வழக்கில் சிக்குண்ட பாபாராம் தேவ்தானே இப்பொழுது மோடி ஆட்சிக்கு அறிவிக்கப்படாத ராஜகுரு. அவருக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வேறு.

மோட்ச வாசலைத் திறந்து காட்டவேண்டிய அந்தச் சாமியார் பிரபல வியாபாரியாகி விட்டார். பல் பொடியில் ஆரம்பித்து, சோப்பு, சீப்பு, கண்ணாடி விற்க ஆரம்பித்துவிட்டார்.

சாமியார் ஒருவர் ஒரு மாநிலத்தின் முதல்வராகவே ஆகிவிட்டார். நாடு எக்கெதிக்கு ஆளாகப் போகி றதோ என்ற அச்சம் பொதுவாக உலுக்கிக் கொண் டுள்ளது.

பெரியாரியம் என்ற மாமருந்துதான் இந்த நோய்களுக்கான தீர்வாகும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner