எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

Ôசுதந்திர சிந்தனைÕ எனும் பொருளுடைய இண்டி பெண்டன்ட் தாட் எனும் தொண்டு நிறுவனம். பாலியல் வன்முறைக்கான இந்திய தண்டனை சட்டப்பிரிவு 375 இல் விலக்கு அளிக்கின்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து பொதுநல வழக்கை உச்சநீதி மன்றத்தில் தொடுத்தது.

இந்திய அரசமைப்புச்சட்டம் அளிக்கின்ற அடிப் படை உரிமைகளைக் கொண்டுள்ள அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14, 15 மற்றும் 21 ஆகிய பிரிவுகளை மீறுவதாக மத்திய அரசின் திருத்தச்சட்டம் உள்ளது என்கிற குற்றச்சாற்று உச்சநீதிமன்றத்தில் முன்வைக்கப் பட்டது.

குழந்தைத் திருமணத்தை தடுக்கக் கோரிய பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அவ்வழக்கில் தீர்ப்பு நேற்று வெளியானது.

அவ்வழக்கில், 15 வயது முதல் 18 வயது வரை திருமணமான பெண்களிடம் உறவு கொள்வது குற்றம் என்று தீர்ப்பில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 375(2) பிரிவி லிருந்து விலக்கு அளித்து கணவனைக் காப்பது என்பது அச்சிறுமியின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமைந்துவிடும் என்றும், மணமான கார ணத்தைக் குறிப்பிட்டு கணவன் உறவு கொள்வதால், பெண்ணின் அடிப்படை உரிமை பறிபோகிறது என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தின்கீழ், திருமணம் செய்து கொண்டாலும், 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுமியிடம் கணவன் உறவு கொள்வது சட்டப்படி பாலியல் வன்முறைக்குற்றம்தான் என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

பாலியல் வன்முறை குறித்து குறிப்பிடக்கூடிய இந்திய தண்டனைச்சட்டப்பிரிவு 375லிருந்து எப்படி விலக்கு அளிக்க முடியும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன் பி.லோக்கூர் தலைமையிலான அமர்வு மத்திய அரசிடம் கடந்த 6.9.2017 அன்று கேள்வி எழுப்பியது.

நடைமுறைப் பழக்கத்தில் உள்ள திருமண முறைக்கு குந்தகம் ஏற்படக்கூடாது என்று குறிப்பிட்டு, திருமணமான பெண்ணிடம் கணவன் உறவு கொள்வதில் பாலியல் வன்முறை குற்றத்தில் இந்திய தண்டனைச்சட்டப்பிரிவு 375-லிருந்து விலக்கு அளிப் பதாக மத்திய அரசு வாதிட்டது.

பொதுவாக வயது வந்தவர்கள் என்று குறிப்பிடுகை யில் 18 வயதையே குறிப்பிடுவது வழக்கமாகும். மணம்புரிந்துகொண்ட கணவனாக இருந்தாலும், 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்களிடம் உறவு கொள்வது பாலியல் வன்முறையாக, சட்டப்படியான குற்றமாகவே கருதப்படவேண்டும்.

பன்னாட்டளவில் குழந்தைத் திருமணத்தைத் தடை செய்யும் தீர்மானத்தில் இந்தியாவும் கையொப்ப மிட்டுள்ளது. ஆனால், பன்னாட்டுத் தீர்மானத்தின்படி, குழந்தைத் திருமணத் தடுப்புச்சட்டத்தை இந்தியா பின்பற்றவில்லை என்ற குற்றச்சாற்றும் எழுந்துள்ளது.

பெண்களின் திருமண  வயது 18 என்றும், ஆண் களின் திருமண வயது 21 என்றும் சட்டம் இருக்கும் பொழுது, 15 வயது முதல் 18 வயதுவரை உள்ள பெண் என்ற பிரச்சினை எங்கிருந்து எழுகிறது?

முதலில் அதில் திட்டவட்டமாக இருந்தால், சட்டம் தன் கடமையைச் செய்தால் இந்தப் பிரச்சினை எழ வாய்ப்பு இல்லையே!

திருமணம் செய்துகொண்ட பின்னர், ஒரே வீட்டில் இருக்கும் ஆணும் - பெண்ணும் உடலுறவு கொள்வது என்பது யதார்த்தத்தில் நடக்கக்கூடியதுதானே!

பெட்ரோலையும், நெருப்பையும் அருகருகே வைப்பது போன்ற விபரீதம் அல்லவா இது!

வெறும் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. எந்த வகையிலும் குழந்தைத் திருமணத்தை அனுமதிக்கக் கூடாது.

சிதம்பரத்தில் தீட்சதர்கள் வீட்டில் குழந்தைத் திருமணம் சர்வ சாதாரணம் - அவற்றை எல்லாம் கண்டு கொள்வதில்லையே - முதலில் முகத்தில் பிறந்த ஜாதியிலிருந்து சட்டத்தின் அளவுகோலை வைத்துப் பார்ப்பது தொடங்கப்பட வேண்டும்! செய்வார்களா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner