எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திருச்சி மாவட்டம் தா. பேட்டை அடுத்த வெள் ளாளப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது அச்சப்பன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆயுத பூஜைக்கு மறுநாள் விஜயதசமி அன்று பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் மடமையான  நிகழ்ச்சி திருவிழாவாக நடத்தப்படுகிறதாம்.

ஆண்களுக்கு தலையில் தேங்காய் உடைப்பு, பெண்களுக்கு சாட்டையடியாம்!

கடந்த 30.9.2017  இல் நடைபெற்ற விழாவில் திரளான பெண்கள் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.  காலையில் பெண்கள் கோவிலை சுற்றி பொங்கல் வைத்து வழிபட்டனர். கோவிலிலிருந்து காட்டுக் கோவில் பகுதிக்கு கடவுளர் சிலைகளை ஊர் வலமாக எடுத்துச்சென்றனர். அங்கு நேர்த்திக்கடன் செலுத்து வதற்காக வரிசையில் அமர்ந்திருந்த பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது. அப்போது கோவிலை சேர்ந்த பூசாரிகள்  தப்பு அடித்து நடனம் ஆடினர். அந்த சமயத்தில் காட்டுக் கோவில் திடலில் நீண்ட வரிசையில் தலைவிரி கோலத்துடன் மண்டியிட்டவாறு கைகளை உயர்த்தியபடி அமர்ந்திருந்த பெண்களின் கைகளில் கோவில் பூசாரி சாட்டையால் அடித்தார்.

பின்னர் சாட்டை அடி வாங்கிய பெண்கள் கோவிலுக்குள் சென்று வழிபட்டு விபூதி  வாங்கி சென்றனர். அச்சப்பன் கோவிலில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்குவதால் காத்து கருப்பு, பில்லி சூனியம், பேய்பிடித்தல் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம் என்கிற மூடநம்பிக்கையில் உள் ளனர். மேலும் திருமணமாகி குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் குழந்தைப்பேறு வேண்டுமெனவேண்டிக் கொண்டு சாட்டையால் அடி வாங்கினால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்றும், திருமணம் ஆகாத பெண் களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும் மூடத்தனமான நம்பிக்கையில் உழலும் பெண்கள் பக்தியின்பெயரால் சாட்டை அடிக்கு உள்ளாகி வரு கிறார்கள். மாட்டுக்குத் தார்க்குச்சி போடுவது குற்றம் - பெண்ணை சவுக்கால் அடிப்பது குற்றமில்லையா?

இதைக்கூட மன்னித்துவிடலாம். பக்தி என்ற பெயரால் குழந்தையை நெருப்புக் கனல் சாம்பலில் கிடத்தும் கேடு கெட்ட குரூரத்தை என்னவென்று சொல்லுவது!

கருநாடக மாநிலம் ஹூப்ளி குண்டக்கல் தாலுக்கா, அல்லபுரா கிராமத்தில் மொகரம் பண்டிகையின் ஒரு பகுதியாக வாழை இலையில் குழந்தையை படுக்க வைத்து, அதை நெருப்புக் கனலின்மீது வைக்கும் சடங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், அதை நிழற்படக் கலைஞர் நிழற்படம் எடுத்து முடிக்கும்வரை குழந்தையைக் கனலின்மீது வைத்துள்ளனர். குழந்தைக்கு எந்த ஓர் அசம்பாவித மும் நடக்காமல் இருக்கும், அவர்களைப் பாதுகாக்கும் எனும் மூடத்தனத்தால் இந்த சடங்கு செய்துள்ளார்கள் என்று கல்கோட் காவல்துறை ஆய்வாளர் வெங்கட சாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “அல்லபுரா தர்காவில் சன் னப்பா கவுடா - சிவ லீலா என்னும் தம்பதி இரண் டாண்டுகளுக்கு முன் ஆண் குழந்தை வேண்டும் என வழிபாடு செய்தனர். அப்போது சிவ லீலா கர்ப்பமாக இருந்தார். தங்கள் விருப்பம் நிறைவேறி னால், குழந்தையை நெருப்புக் கனலில் படுக்க வைப்பதாக அவர்கள் வேண்டிக்கொண்டனர்.

நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக அவர்கள் தர்காவுக்கு வந்திருந்தனர். நெருப்புக் கனல் அணைந்து சாம்பலான பிறகு அதன் மீது குழந்தையை வைக்க முடிவு செய்தனர். ஆனால், அந்த சாம்பல் கொஞ்சம் சூடாக இருந்த காரணத்தினால், வாழை இலை மீது குழந்தையைப் படுக்க வைத்து அதன் பிறகு குழந்தையைச் சாம்பல் மீது எட்டு நொடிகள் வரை வைத்தனர். இது தொடர்பாக அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. குழந்தை கள் நல ஆணையம் எச்சரித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

கருநாடக மாநிலத்தில் விரைவில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் நிறைவேற உள்ளது. நியாயமாக அகில இந்திய அளவில் இந்த வகையில் மத்திய  அரசு சட்டம் கொண்டு வருவதுதான் மிகவும் அவசிய மாகும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner