எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

1979 ஆம் ஆண்டு குஜராத் மாநில பெட்ரோலிய துறை நிறுவனம் துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு 2002 ஆம் ஆண்டு கிருஷ்ணா - கோதாவரி படுகையில் எரிவாயு எடுக்க  இடம் ஒதுக்கப்பட்டு அதில் ஆழ்குழாய் அமைக்க அனுமதியும் தரப்பட்டது. 2003 ஆம் ஆண்டில் இருந்து அந்த நிறுவனம் உற்பத்தியைத் செய்து வருகிறது.

2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அன்றைய முதலமைச்சராக இருந்த மோடி "இந்தியாவின் மிகப்பெரிய எரிவாயு தேக்கத்தை குஜராத் மாநில பெட்ரோலிய நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அங்கு லட்சக்கணக்கான கியூபிக் டன் எரிவாயு உள்ளது. அதன் மதிப்பு சுமார் 2,20,000 கோடி ரூபாய்" என்று கூறி ரூபாய் 1500 கோடி செலவு செய்து இந்த திட்டத்தை சீரமைக்க உள்ளதாகக் கூறி நிதியையும் ஒதுக்கினார்.

2007இல் இருந்து உற்பத்தித் துவங்கி, குஜராத் இந்தியாவின் மிகப் பெரிய பொருளாதார சக்தியாக விளங்கும் என்றும் கூறியிருந்தார்.

ஆனால் 2007-ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்த திட்டம் குறித்த அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் நின்று போயின. இந்த நிலையில் 2010ஆம் ஆண்டு  குஜராத் பெட்ரோலிய நிறுவனம் மீண்டும் ஒரு மாதிரி திட்டத்தை வெளியிட்டது அதற்கு  ரூ.8500 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. குஜராத் பெட்ரோலிய நிறுவனம் குறிப்பிட்ட இடத்தை ஆய்வு செய்த அரசு சாரா அமைப்பு ஒன்று அங்கு மோடி கூறியது போல் லட்சக்கணக்கான  கியூபிக் டன் அளவு இயற்கை எரிவாயு இல்லை என்று கூறியது.

மேலும் அரசு எதிர்பார்த்ததைவிட மிகவும் குறைவான அளவு எரிவாயுவே உள்ளது என்றும் கூறியது.

அதனை அடுத்து 2016ஆம் ஆண்டுவரை குஜராத் பெட்ரோலிய நிறுவனம் எந்த ஒரு எரிவாயு எடுக்கும் பணியையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் இந்த நிறுவனத்திற்கு அரசு ஒதுக்கிய நிதியுடன் சேர்த்து பல பொதுத்துறை வங்கியிலிருந்து மார்ச் 31ஆம் தேதிவரை எரிவாயு திட்ட மாதிரியைக் காண்பித்து ரூபாய் 19,700 கோடி மட்டும் கடன் வாங்கியுள்ளது.

இந்த நிறுவனம் இதுவரை எந்த  ஒரு லாபத்தையும் ஈட்டவில்லை.  இந்த நிறுவனம் வங்கியில் இருந்து கடன் வாங்கியது, அதன் வட்டி மற்றும் அரசு நிதி ஒதுக்கியது என அனைத்தும் சேர்ந்து தற்போது சுமார் 20,000 கோடி ரூபாய் எங்கே போனது என்று தெரியவில்லை. இவ்விவகாரத்தில் இன்றுவரை குஜராத் பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள்  மற்றும்  குஜராத் அரசிடம் கேள்வி கேட்கப்படவில்லை.

மத்திய அரசின் தணிக்கைத்துறையின் விசாரணை யில் வெளிவந்த இந்த ஊழலை முகாந்திரமாகக் கொண்டு குஜராத் மக்கள் குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருக்கும் மோடியிடம்  சில கேள்வி களை வைத்துள்ளனர்.

1. குஜராத் பெட்ரோலியம் நிறுவனம் வாங்கிய 20,000 கோடிகள் எங்கே?

2. எந்த அறிக்கையை முகாந்திரமாகக் கொண்டு கோதாவரி படுகையில் எரிவாயு எடுப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டது?

3.            பொதுத்துறை வங்கிகள் புதிய திட்டங்கள் செயல்படுத்த எந்த ஒரு திட்ட அறிக்கையும் பெறாமல் குஜராத் பெட்ரோலிய நிறுவனத்திற்கு கடன் கொடுத்தது ஏன்?

4.            எரிவாயு எடுக்கும் பணிகள் தொடர்பான ஒப் பந்தங்கள் போடப்பட்ட நிறுவனங்களின் பின்னணி குறித்து ஆய்வு செய்யப்படாதது ஏன்?

5.            2011-12 மற்றும் 2014-15 ஆண்டிற்கான குஜராத் பெட்ரோலிய நிறுவனம் குறித்த  தணிக்கைத் துறை அறிக்கை மறைக்கப்பட்டது ஏன்?

6.            இந்திய நிறுவனமாக ஒ.என்.ஜி.சி இருக்கும் போது குஜராத் அரசு தன்னிச்சையாக குஜராத் பெட்ரோலிய நிறுவனத்திற்கு என எரிவாயு எடுக்க ஒப்பந்தம் கையொப்பமிட்டது ஏன்?

7.            இந்த 20,000 கோடி ரூபாய் எங்கே போனது? இந்தப்பணத்தை ஊழல் செய்த அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?

பதில் சொல்வாரா மோடி? அல்லது எப்போதும் போல் மடைமாற்றும் விதமாக "மாயாஜாலக்" கதை களைப் பேசிவிட்டு ஓடிவிடுவாரா?

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் தனிச் சிறப்பே ஊழல் இல்லாத நிருவாகம் தான் என்று நீட்டி முழங்குகின்றவர்கள் இந்த வினாக்களுக்கு விடையளிப்பார்களா?

இன்னொன்றும் முக்கியமானது; பணம் கைமாற்றம் மட்டும் ஊழல் அல்ல;  அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும் ஊழல்தான்!

அதானியை ஆஸ்திரேலியாவில் ஆலை தொடங்க தன்னுடன் அழைத்துச் சென்றதும் - அவருக்குக் கடன் வழங்குமாறு ஸ்டேட் பேங்க் அதிகாரிக்கு  பிரதமர் மோடி ஆணையிட்டதும் அதிகார துஷ்பிரயோக  ஊழல் இல்லையா; இந்து ராஜ்ஜியம் என்பதைவிட வேறு என்ன ஊழல் வேண்டும்?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner