எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தமிழகத்தைச் சேர்ந்த பால்வளத்துறை அதிகாரிகள்,  ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பகுதியில் இருந்து தரமான பால் நிறைய தரும் பசுக்களை இனப்பெருக்கத்திற்காக லாரிகளில் ஏற்றிக்கொண்டு தமிழகம் நோக்கி  வந்து கொண்டிருந்தனர். இதில் 12-க்கும் மேற்பட்ட கால்நடைத் துறை அதிகாரிகளுடன் பசுக்கள் மற்றும் கன்றுகளும் இருந்தன. அவர்கள்  ராஜஸ்தான்  மாநிலம் பர்மர் மாவட் டத்தின், தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தனர். அப்போது அங்கே திரண்ட 500 பேர் கொண்ட கும்பல்  முதலில் லாரியை நிறுத்தச் சொல்லி கூச்சலிட்டது. லாரியை ஓட்டுநர் நிறுத்திய உடனேயே கோரக் ஷா  அமைப்பினர் லாரி ஓட்டுநரை சராமரியாக தாக்கத் துவங்கினர்.

இந்நிலையில் அதிகாரிகள் தாங்கள் இனப்பெருக்கத் திற்காக தமிழகம் கொண்டு செல்கிறோம் என்று கூறியும் காவல்துறையினரிடமும், இதர அதிகாரிகளிடமும் வாங் கிய ஆவணங்களைக் காட்டியும் பசு ரக்ஷகர்கள் விடவில்லை. லாரியில் இருந்து பசுக்களை இறக்கிவிட்டு லாரிக்குத் தீவைத்து குதியாட்டம் போட்டுள்ளனர். அதிகாரிகளும் தாக்கப்பட்டுள்ளனர்.

தாமதமாகவே சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர், தாக்குதல் நடத்திய குண்டர்களுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர்.

‘‘தார்பர்கர் இன பசு’’ மத்திய ஆசிய மற்றும் அமெரிக்க ஜெர்சி கலப்பினமாகும் இதனிடம் பால் கொடுக்கும் திறனும், பாலின் கொழுப்பு மற்றும் இதர ஊட்டச் சத்துக் களும் அதிகம் இருக்கும், ஆகையால் இந்தப் பசுக்களை இந்தியாவில் உள்ள பல மாநில அரசுகள் தங்கள் மாநிலத்திற்குக் கொண்டுவந்து இனப்பெருக்கம் செய்து,  கால்நடை வளர்ப்புப் பண்ணைகளுக்கு வழங்கும், தமிழக கால்நடை அதிகாரிகள் இந்தப் பசுக்களை தமிழகம் கொண்டுவந்து பால்வள உற்பத்திக்குப் பயன்படுத்த முடிவு செய்திருந்தனர்.

இது தொடர்பாக ஜெய்சால்மரில் உள்ள தேசிய பால்வளத்துறை மய்யத்திலிருந்து பசுக்களை தமிழகத்திற்கு கொண்டு வரும்போது வன்முறையாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வண்டியிலிருந்து இறக்கப்பட்ட பசுக்களில் சில அருகில் உள்ள வயல்வெளிகளுக்கு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதர மாடுகள் அருகில் உள்ள கோசாலை எனப்படும் பசுப்பாதுகாப்பு மய்யங் களுக்கு அனுப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பர்மார் மாவட்ட காவல்துறை ஆணையர் ககந்தீப் சிங்கலா கூறும் போது,   தமிழக அதிகாரிகள் வாகனமும் பசுமாடுகளை ஏற்றிவந்த லாரியும் தாக்கப்பட்டது தொடர்பாக தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு உடனடியாக செல்லவில்லை. அவர்கள் உடனடியாக சென்றிருந்தால், அசம்பாவிதம் நிகழாமல் தடுத்திருக்க முடியும் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.  அதே நேரத்தில் சுமார் 500 பேர் கொண்ட கும்பல் இருக்குமிடத்தில் சில காவலர் களால் ஒன்றும் செய்ய இயலாது என்றும் இதோபதேசம் செய்துள்ளார்.

இருப்பிலும் காவல்துறையின் மெத்தன நடவடிக்கை யால் லாரி, லாரி ஓட்டுநர் மற்றும் அதிகாரிகள் தாக்கப் பட்டுள்ளனர். இது தொடர்பாக 50 பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வை நேரில் கண்ட சாட்சி களிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.  நிகழ்விடம் நடந்த பகுதியின் காவல் நிலைய தலைமை ஆய்வாளர் உள்பட 7 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

காயமடைந்த லாரி ஓட்டுநர், தமிழக பால்வளத் துறை அதிகாரிகள் அனைவரும் மாவட்ட மருத்துவமனையில் முதலுதவிக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதே பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு பால் பண் ணைக்காக பசுக்களைக் கொண்டு சென்ற இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தினர்; இதில் பஹலுகான் என்பவர் நிகழ்விடத்திலேயே மரணமடைந்தார். அவரது மகன் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். இக்கொடூர நிகழ்வில் இன்றுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, ஆனால் மாநில பாஜக மகளிரணிச் செயலாளரும், சாமியாருமான உமா என்பவர் தாக்குதல் நடத்தியவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தினார். மேலும் தாக்குதல் நடத்தியவர்களை, பகத்சிங், சுக்தேவ் போன்றோருக்கு இணையான மாவீரர்கள்  என்று பட்டமும் வழங்கினார்.

நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது? பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சங் பரிவார்க் கும்பல் சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. அரசும், காவல் துறையும் இத்தகைய சக்திகளுக்குக் கைலாகு கொடுக் கின்றன.

வளர்ச்சி, வளர்ச்சி என்று பிரதமர் மோடியிலிருந்து கடைக்கோடி சங்பரிவார் வரை தொண்டை வறளக் கத்துவது எல்லாம் இதுபோன்ற இந்துவெறி அதீதக் கேவலங்களை மூடிமறைக்கத்தானா? பி.ஜே.பி. ஆட்சியில் அரசு அதிகாரிகளுக்கேகூடப் பாதுகாப்பு இல்லை!

வெட்கக்கேடு! மகாவெட்கக்கேடு!!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner