எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

உத்தரப்பிரதேச மாநிலம், பதேபூர் ஷாம்சோய் கிராமத்தில் உயர் ஜாதி பார்ப்பனர்களால் ஏற்பட்ட ஜாதிக் கொடுமைகளை யடுத்து, வால்மீகி ஜாதிப் பிரிவி னருக்கு அக்கிராமத்தில் முடிவெட்ட மறுக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிக்கை நேற்று முன்தினம் (16.5.2017) வெளிவந்துள்ளது.

வால்மீகி ஜாதிப்பிரிவினர் ஆவேசமடைந்து இந்து மதத்திலிருந்து முசுலீம் மதத்துக்கு மாறப்போவதாக எச்சரிக்கை செய்தனர்.

அரசின் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அலுவலர்கள் இப்பிரச்சினையில் தலையிட்டு முடிவெட்டும்கடைக்காரர்களுடன்பேச்சுவார்த்தைநடத்தினர்.

பஜோய் காவல் நிலைய ஆய்வாளர் ரஞ்சன் சர்மா கூறும்போது, ‘‘குறிப்பிட்ட மூன்று கிராமங்களிலும் முடிவெட்டும் கடைகள் திறக்கப்பட்டு, அங்கு காவல் துறையினர் நிறுத்தப்பட்டு, வால்மீகி வகுப்பினருக்கு முடிவெட்டுவதை உறுதிப்படுத்தும் பணிகளில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார். பல தலைமுறைகளாக அந்த ஊர்களில் வசித்து வருகின்ற வால்மீகி வகுப்பினருக்கு ஜாதியின் பெயரால் இழிவு படுத்தி முடிவெட்ட மறுக்கப்பட்டதையடுத்து, வால்மீகி வகுப்பினர் மதமாற்ற அறிவிப்பை எச்சரிக்கையாக வெளியிட்டனர்.

நாடு விடுதலை பெற்று பல ஆண்டுகள் ஆன போதிலும், வால்மீகி ஜாதிப் பிரிவினர் தங்கள் சொந்த கிராமங்களில் முடிவெட்டிக் கொள்ளவோ, சவரம் செய்து கொள்ளவோ அனுமதிக்கப்படவில்லை என்பதுதான் என்ன கொடுமை! காரணம், உயர்ஜாதியினர்தான். தாழ்த்தப்பட்டவர்கள் முடிவெட்டிக் கொண்டால், அந்த கடைகளில் உயர் ஜாதியினருக்குத் தீட்டு ஏற்பட்டுவிடுமாம். அதனால்,  15 கி.மீ. முதல் 20 கி.மீ. தொலைவில் உள்ள பகுதிகளுக்குச் சென்றே வால்மீகி வகுப்பினர் முடிவெட்டிக் கொள்கின்ற அவல நிலை.

15.5.2017 பிற்பகலில் வால்மீகி தரம் சமாஜ் அமைப்பின் தலைவரான லல்லா பாபு திராவிட் மற்றும் வால்மீகி ஜாதிப்பிரிவின் தலைவர்கள் பதேபூர் ஷாம்சோய் கிராமத்தில் கூட்டப்பட்ட பஞ்சாயத்துக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் லல்லாபாபு திராவிட் பேசும்போது, ‘‘24 மணி நேரத்திற்குள் உயர்ஜாதியினரின் ஜாதிக்கட்டுப்பாடு முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும்; இல்லையேல், வால்மீகி ஜாதியினர் அனைவரும் இந்து மதத்திலிருந்து மதம் மாறிவிடுவோம்‘’ என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

“நீண்ட காலமான எங்கள் போராட்டத்தின் இறுதியில்தான் எங்கள் சொந்த கிராமத்திலேயே நாங்கள் முடிவெட்டிக்கொள்ளும் உரிமையைப் பெற்றி ருக்கிறோம். அதனாலேயே இந்து மதத்திலிருந்து மாறுகின்ற முடிவை மாற்றிக்கொண்டதாகப் பொருள் இல்லை. ஏனென்றால், அருகமை கிராமங்களான நேத்தா, அக்ரோலி, விஜய்பூர் போன்ற கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் சொந்த கிராமங்களிலேயே முடிவெட்டிக்கொள்ளும் உரிமை இல்லாமல் இருக்கி றார்கள்’’ என்று ஆவேசமாகப் பேசினார்.

மொராதாபாத்தில் திராவிட் தலைமையில் வால்மீகி வகுப்பினர் பங்கேற்ற ஊர்வலம் 13.5.2017 அன்று நடைபெற்றது. இந்து மதத்துக்கு முழுக்குப் போடுவதன் அடையாளமாக ஊர்வலத்தில் ராமன், விநாயகன் மற்றும் இதர இந்துக் கடவுள்களின் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு, ராம்கங்கா ஆற்றில் வீசப்பட்டன. மாநி லத்தில் சகரன்பூர் போன்ற  பல்வேறு பகுதிகளிலும் தாழ்த்தப்பட்டவர்கள்மீது தொடர்ச்சியான ஜாதிய வன்முறைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. 500க்கும் மேற்பட்டவர்கள் இசுலாம் மதத்துக்கு மாற உள்ளனர். அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதியை மீண்டும் கட்டப்போவதாக, பாஜகவுக்கு எதிரான முழக்கங்களை ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் எழுப்பினர்.

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யா ஆட்சி வந்துவிட்டது; மண்ணெல்லாம் பொன்னாகப் பொலி வுறப் போகிறது- நாட்டையே அப்படியே மாற்றி அமைக்கப் போகிறார் என்று பூச்சுற்றும் வேலையில் ஈடுபட்டு வரும் ஊடகங்கள் - இதற்கு என்ன பதில் சொல்லப்போகின்றன?

காவி முதலமைச்சரின் சாமியார் சேட்டைகள் எதிர் விளைவைத்தான் உண்டாக்கப்போகின்றன என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner