எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்ட பெண் கல்விக்கு ஊக்கத் தொகை அளிக்கின்ற தேசிய அளவிலான திட்டத்தின்படி, தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவியருக்கு அளிக்கப்பட வேண்டிய ரூ.370 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை பயன்படுத்தப்படாமல் உள்ள அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

2008 மற்றும் 2009ஆம் கல்வியாண்டில் 87,166 மாண வியருக்கு உதவித்தொகையாக ரூ.36.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஒன்பது கல்வியாண்டுகள் கடந்த பின்னரும்கூட, மாணவியருக்கு அறிவிக்கப்பட்ட நிதியானது, ஒதுக்கீடு செய்யப்பட்ட நாளிலிருந்து இதுநாள்வரையிலும்கூட, மாணவியரின் கணக்கில் சென்றடையவில்லை.

இதுகுறித்து தமிழ்நாடு தலித் விடுதலை இயக்க மாநில துணை இணை செயலாளர் எஸ்.கருப்பையா கூறும்போது, திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இன்று வரை மத்திய அரசு ரூ.370 கோடியை தமிழ்நாட்டில் உள்ள பயனாளிகளான தாழ்த்தப்பட்ட மாணவியருக்காக அளித்துள்ளது. ஆனால், தாழ்த்தப்பட்டவர்களுக்கான கல்வி உதவித்தொகை எங்கேயோ முடக்கப்பட்டுள்ளது என்றார்.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவியர் 12 ஆம் வகுப்பு வரை படிப்பைத் தொடர்ந்திட ஊக்கப் படுத்துவதற்காக திட்டம் உருவாக்கப்பட்டது. இத் திட்டத்தின்கீழ் ஒன்பதாம் வகுப்புக்கு செல்லும் ஒரு மாணவியின் பெயரில் உள்ள வங்கிக்கணக்கில் ரூ.3,000 தொகையை அரசே செலுத்தவேண்டும். அம்மாணவி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு,  வங்கியில் செலுத்தப்பட்ட தொகைக்குரிய வட்டியுடன் அத்தொகையினை 18 வயது நிறைவடையும்போது வங்கிக் கணக்கிலிருந்து அம்மாணவி எடுத்துக்கொள்ளலாம்.

மாநில அரசின் செயல்பாடின்மை காரணமாக வங்கி யுடன் இணைந்து திட்டத்தை நிறைவேற்ற முடியாததை அடுத்து பயனில்லாமல் போய்விட்டது.

தமிழ்நாடு கல்வித்துறை செயலாளர் டி.உதயச்சந்திரன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், “டில்லியில் உள்ள கனரா வங்கி மற்றும் பொது நிதி மேலாண்மை முறையில் ஏற்பட்ட கோளாறினால், மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய கல்வி ஊக்கத் தொகை நிலுவையிலேயே கிடப்பில் உள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இத்திட்டம்குறித்து எந்த விவரமும் இல்லை என்று கூறியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இருந்தபோதிலும், அத்திட்டம்குறித்து, திட்டம் தொடங்கப்பட்ட காலந்தொட்டு, அத்திட்டம்குறித்த விவரங்களை அனுப்புமாறு மத்திய மனித வள மேம் பாட்டுத்துறை அமைச்சகத்திடம் மாநிலக் கல்வித்துறை சார்பில் கேட்கப்பட்டு வந்துள்ள நிலையில், மத்திய அமைச்சகத்திடமிருந்து அத்திட்டம்குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்றதும், வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள கல்வி உதவித் தொகைக்கான நிதித் தொகையை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மத்திய பொது நிதி மேலாண்மை முறைக்கும், வங்கிக்கும் இடையில் பயனாளிகளுக்கான நிதித் தொகை செலுத்தப்பட்டதில் தொகை வங்கிக்கணக்க¤ல் போடப்பட்ட தேதி அல்லது நிராகரிக்கப்பட்ட தேதி குறித்து கல்வித் துறை செயலாளர் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்மூலம், தனிப்பட்ட வகையில் பயனாளி களுக்கு ஒதுக்கப்பட்ட கல்வி ஊக்கத் தொகை சென்ற டைந்துள்ளதா, அல்லது கோளாறாகி நின்று உள்ளதா என்கிற தகவல் அறியமுடியாத நிலையில் உள்ளது.

நேரடியாக பயனாளிகளைச் சென்றடைகின்ற திட்டத்தின்படி, பயனாளிகளுக்கு உரிய தொகை சென்ற டைகின்றதா? என்பதை கண்டறியும் நிலையிலும் அரசு இல்லை.

2008- 2009 ஆம் கல்வி ஆண்டைத் தவிர, அடுத்தடுத்த ஆண்டுகளில் கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படாதது குறித்தது அரசு சார்பில் எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.

பி.ஜே.பி. ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் பசு பாதுகாப்பு அமைச்சர் சொன்னது என்ன தெரியுமா? ‘‘தாழ்த்தப்பட்டோருக்காகக் கொடுக்கப்பட்ட நிதியைப் பசுவின் பாதுகாப்பிற்காகச் செலவழிப்பது புண்ணியம் மிகுந்த காரியம்‘’ என்று சொல்லியுள்ளார்.

பி.ஜே.பி. ஆளும் ம.பி., ராஜஸ்தான் மாநிலங்கள் தாழ்த்தப்பட்டோருக்காக மத்திய அரசால் அளிக்கப்படும் நிதிகள் அப்படியே மத்திய அரசுக்குத் திருப்பி அனுப் பப்பட்டுள்ளன. என்னே கொடுமை!

பொதுவாக தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்படும் நிதி, வேறு இனங்களுக்குப் பயன்படுத்தப்படுவது - மாநில அரசிலும் சரி, மத்திய அரசிலும் சரி, சர்வ சாதார ணமாகவே இருந்து வருகிறது. தாழ்த்தப்பட்டோர் என்றால் அவ்வளவு இளக்காரமா? அமைச்சர்கூட முக்கிய பொறுப்புகளில் அமர்த்தப்படுவது கிடையாது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை ஏன் பெரிது படுத்துவதில்லை?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner